உரை |
|
5. நரவாண காண்டம் |
|
3. இயக்கன் போனது |
|
மஞ்சுசூழ் நெடுவரை விஞ்சத்
தடவித் திருமலர்
கெழீஇய தெண்ணீர்ப் படுவின்
நருமதைப் பெயர்யாற் றொருகரை
மருங்கின் 55 எண்ணரும் பருப்பத
மென்னு
மலைமிசை
ஒண்ணிதிக் கிழவ னுரிமையொ டிருந்துழிக்
|
|
(பிடியின் பழைய
வரலாறு)
52 - 56 : மஞ்சு.........இருந்துழி |
|
(பொழிப்புரை) 'வேந்தே! முகில் சூழ்ந்த நெடிய
மலைகளையுடைய விந்தமலைப் பக்கத்துள்ள காட்டின்கண் அழகிய மலர்கள் பொருந்திய
தெளிந்த நீரையுடைய மடுக்களையுடைய ''நருமதை'' என்னும் பெயரையுடைய யாற்றினது ஒரு
கரையின்கண் அமைந்த நினைத்தற்குமரிய ''பருப்பதம்'' என்னும் மலையின்மேல் ஒள்ளிய
நிதிக்கிழவனாகிய குபேரன் தன் தேவிமார் முதலிய மகளிரோடு தங்கியிருந்தபொழுது'
என்க. |
|
(விளக்கம்) மஞ்சு - முகில். விஞ்சம் - விந்தமலை. அடவி - காடு. படு -
மடு. பருப்பதம் - ஒரு மலை. நிதிக்கிழவன் - குபேரன். உரிமை - தேவி முதலிய
மகளிர். |