உரை |
|
5. நரவாண காண்டம் |
|
3. இயக்கன் போனது |
|
கண்ணணங் குறூஉங் காரிகை
நீர்மைப்
பத்திரை மேனகை திலோத்தமை
யொருத்தி
பத்திரா பதியோ டுருப்பசி
யரம்பைமுதற் 60 பாடகஞ் சுமந்த
சேடுபடு சேவடி
நாடக மகளிர் நாலிரு
பதின்மருட்
பல்வளைப் பணைத்தோட் பத்திரா
பதியெனும்
மெல்லிய றன்னை வேந்தன் விடுக்கவப்
|
|
(இதுவுமது)
57 - 63 :
கண்...............விடுக்க
|
|
(பொழிப்புரை) காண்போர்கண் பின்னுங் காண்டற்கு
விரும்பி வருந்துதற்குக் காரணமான பேரழகு படைத்த தன்மையுடைய பத்திரையும் மேனகையும்
திலோத்தமையும் ஒப்பற்றவளாகிய பத்திராபதியும் உருப்பசியும் அரம்பையுமுள்ளிட்ட
பாடகம் என்னும் அணிகலனைச் சுமந்த அழகிய சிவந்த அடிகளையுடைய வானகத்து விறலியர்
எண்பதின்மர் மகளிருள் வைத்துப் பலவாகிய வளையல்களணிந்த மூங்கில்போலும் தோளையுடைய
பத்திராபதி என்னும் மெல்லியல்புடைய அந்நங்கையைக் குபேரன் ஏவா நிற்றலாலே
என்க.
|
|
(விளக்கம்) அணங்குறூஉம் - வருத்தும். காரிகை நீர்மை - அழகுத்தன்மை.
பத்திரை முதலியோர் குபேரனுடைய நாடக மகளிர் என்க. வேந்தன் :
குபேரன்.
|