| உரை |
| |
| 5. நரவாண காண்டம் |
| |
| 3. இயக்கன் போனது |
| |
மெல்லிய றன்னை வேந்தன்
விடுக்கவப்
பணியொடு சென்று பனிமலர் பொதுளிய
65 ஆலங் கானத் தாற்றயன்
மருங்கின்
இணருந் தளிரு மிருஞ்சினைப்
போதும்
பிணர்படு தடக்கையிற் பிறவு
மேந்தி
ஒண்ணுத லிரும்பிடி யொன்றே
போலக் கண்ணயற்
கடாஅத்துக் களிவண் டோப்ப
|
| |
(இதுவுமது) 63
- 69 : அப்பணி............ஒப்ப |
| |
| (பொழிப்புரை) பத்திராபதி அக்குபேரன் ஏவலை
மேற்கொண்டு சென்று குளிர்ந்த மலர் நிரம்பிய ஆலங்கானத்து ஆற்றின் பக்கத்திலே
ஒள்ளிய நெற்றியையுடைய கரிய பிடியானைகள் பல ஒன்று போலவே பூங்கொத்தும் தளிரும்
பெரிய கிளையோடு கூடிய மலர்களும் பிறவும் ஆகிய இவற்றைச் செதும்புடைய தமது கையின்கண்
ஏந்திக்கொண்டு அச்சமில்லாத பசிய கண்ணையும் வெவ்விய வெகுளியையுமுடைய ஒரு
களிற்றியானையினது கண்ணின் பக்கத்தே வழிகின்ற மதநீரின்மேல் மொய்க்கின்ற
களிப்புடைய வண்டுகளை ஓச்சாநிற்ப என்க. |
| |
| (விளக்கம்) பணி - கட்டளை. பொதுளிய - நிரம்பிய. இணர் - பூங்கொத்து.
பிணர் - செதும்பு. கடாஅம் - மதம். ஓப்ப - ஓச்ச. |