உரை |
|
5. நரவாண காண்டம் |
|
3. இயக்கன் போனது |
|
வள்ளிதழ் நறுந்தார் வச்சிர
வண்ணன் அடிநிழல்
குறுகிய காலை மற்றென் 90
மனத்ததை யியைகென நினைத்தனள் செல்லா
|
|
(பத்திராபதி குபேரன்முன்
செல்லுதல்)
88 - 90 : வள்ளிதழ்...............செல்லா
|
|
(பொழிப்புரை) பெரிய
இதழையுடைய நறிய மலர்மாலையணிந்த குபேரனுடைய அடி நீழலிலே அணுகிய காலத்தும், என்னுடைய
மனத்தின்கண் தோன்றிய யானைப்பிறப்பு எனக்கு வருவதாக என்று நினைத்தவளாய்ச்
செல்லாநிற்றலால்...... என்க.
|
|
(விளக்கம்) வச்சிரவண்ணன் - குபேரன். அடிநிழல் குறுகிய
காலை என்றது முன்னிலையிற் சென்ற பொழுது என்றவாறு. மனத்ததை : ஐகாரம் சாரியை.
மனத்தின்கண் தோன்றிய யானைப் பிறப்பு என்க இப் பகுதியில் 90 ஆம் அடியை யடுத்து ஓரடி
முழுதும் அழிந்தொழிந்தது.
|