பக்கம் எண் :

பக்கம் எண்:966

உரை
 
5. நரவாண காண்டம்
 
  3. இயக்கன் போனது
 
          சாவ மற்றவ னிடுதலுஞ் சார்ந்து
    105    தேவ வாய்மொழி திரியா தாகலின்
          நீடுபெற லரிதா நெடுங்கை விலங்கின்
          வீடுபெறல் யாதென விளங்கிழை வினவ
 
              (பத்திராபதி வினாதல்)
           104 - 107 : சார்ந்து...............வினவ
 
(பொழிப்புரை) அச் சாபத்தைப் பெற்று அப் பத்திராபதி அக் குபேரனை வணங்கிப் 'பெருமானே ! இச் சாபம் தெய்வ மொழியாகலின் பொய்யாகாது. ஆதலின் நெடுங்காலம் பழைய இத் தெய்வப் பிறப்பினை யான் அடைதல் இயலாதாகிவிடும். ஆகவே உனது சாபத்தின் பயனாக யான் எய்தப்போகும் நெடிய துதிக்கையையுடைய அந்த யானைப் பிறப்பினின்றும் யான் விடுதலை பெறுதற்கு வழி யாதோ?' என்று வினவாநிற்ப என்க.
 
(விளக்கம்) சார்ந்து - சாரப்பட்டு. இப் பிறப்பினை மீண்டும் பெறல் அரிதாம் என்றவாறு. நெடுங்கை விலங்கு - யானை. வீடு - விடுதலை, விளங்கிழை : பத்திராபதி.