உரை |
|
3. மகத காண்டம் |
|
6. பதுமாபதியைக் கண்டது |
|
அந்த ணாள னரும்பொரு
ணசையின்
வந்தன னென்னும்
வலிப்பினளாகி
இன்பங் கலந்த விந்நகர்க்
கிறைவன்
தன்பெரு மாட்டி தலைப்பெருந் தேவி
170 சிதைவில் கற்பிற் சிவமதி
யென்னும்
பேருடை மாதர்க் கோரிடம்
பிறந்த
உதையை யோடை யென்னு
மொண்டொடி
காசி யரசன் காதலி
மற்றவள்
ஆசின்று பயந்த வணியிழைக் குறுமகள் |
|
(கூனியின் விடை) 166-174 ;
அந்தணாளன்............குறுமகள் |
|
(பொழிப்புரை) .அவ்வினாக்களைக்கேட்ட
அயிராபதி இப்பார்ப்பனன் இங்கே வழங்கும் அரிய பொருள்களைத் தானமாகப்
பெறுகின்ற அவாவோடு இங்கே வந்தவன்போலும் என்று தனக்குள்
நினைந்தவளாய் அவன் வினாக்களுக்கு விடைகூறத் தொடங்கிப் ''பெரியீர்!
இன்பமெல்லாம் விரவிய இந்த இராசகிரிய நகரத்து வேந்தனுடை.ய வாழ்க்கைத்
துணைவியும் பட்டத்துத் தேவியும் கலங்காத கற்பு உடையவளும் ஆகிய
'சிவமதி' என்னும் திருப் பெயருடைய கோப்பெருந் தேவியுடன் பிறந்த
உதையையோடை என்னும் ஒள்ளிய தொடியணிந்த பெருமாட்டி ஒருத்தியுளள். அவள்
காசி நாட்டரசனுடைய தேவியுமாவாள். அவ்வுதையை யோடை
யென்னும் அரசி குற்றமின்றி ஈன்ற மகளாவாள், இங்கு வந்துபோன
அழகிய அணிகலன்களையுடைய இளமகள் என்க, |
|
(விளக்கம்) உதயணன்
''இந்நங்கை யாவள்?'' என்று வினவியதற்கு இது விடை. மகதமன்னன் மனைவியுடன்
பிறந்தவளும் காசியரசன் மனைவியும் ஆகிய உதையையோடையின் மகள் இந்நங்கை
என்று இறுத்தபடியாம். இந்நகர்க்கிறைவன்
என்றது தருசகன் தந்தையை. சிவமதி - தருசகன் தாய். எனவே பதுமாபதி தருசகன்
சிற்றன்னை மகள் என்றாளாயிற்று. ஓரிடம் பிறந்த-ஒரு வயிற்றிற் பிறந்த.
குறுமகள்-சிறுமி; பதுமாபதி. |