உரை |
|
5. நரவாண காண்டம் |
|
3. இயக்கன் போனது |
|
வீழ்ந்த
காலை மேயவ னத்தலை
ஆய்ந்த வுள்ளமொடு சேர்ந்தன
னாகி அஞ்சா
தைம்பத நினைமதி நீயென 135 எஞ்சா
தவணீ யியல்பினிற் றிரியாது
சிந்தையொடு முடிந்தது காரண
மாக ஊனமை விலங்கி
னுடம்பவ ணொழிய |
|
(இதுவுமது)
132 - 137 : மேயவன்...............ஒழிய |
|
(பொழிப்புரை) "நின்
பிடரிலே பொருந்தியிருந்த உதயணன் அவ்விடத்தே ஆராய்ந்த நெஞ்சத்தோடே கீழிறங்கி
நின்செவி அருகே சேர்ந்து ''பிடிநங்காய் ! நீ இப்பொழுது அஞ்சாதே கொள் ! இறைவனுடைய
ஐந்தெழுத்துக்களையும் நினைக !'' என்று செவியறிவுறுத்துதலாலே நீ அம் மந்திரத்தைக்
குறையின்றிக் கணிக்கும் தன்மையில் பிறழாமல் அந் நினைவோடு இறந்தது காரணமாக
ஊன்மிக்க விலங்கினது உடம்பு அவ்விடத்தே கிடப்ப' என்க. |
|
(விளக்கம்) மேயவன் : உதயணன். ஐம்பதம் - பஞ்ச நமஸ்கார
மந்திரம். நினைக்கும் சிந்தையொடு என்க. விலங்கின் உடம்பு - யானையுடல். அவண் -
அக்காட்டின்கண். |