பக்கம் எண் :

பக்கம் எண்:971

உரை
 
5. நரவாண காண்டம்
 
  3. இயக்கன் போனது
 
          ஈனமில் யாக்கையோ டிவ்வழி வந்துநின்
          முன்னைப் பேரொடு பெண்ணுரு வெய்தி
    140    இத்துணை வாழ்தியென் றுரைக்கப் பட்ட
          அன்ன தன்மையோ டிறந்த வாயிழை
 
            (பத்திராபதி பழைய உருப்பெற்றுக் 
              குபேரனையடைந்து வணங்கல்)
             138 - 141 : ஈனம்............ஆயிழை
 
(பொழிப்புரை) ''நீ குற்றமற்ற உடம்போடு இவ்வுலகத்தில் வந்து பழைய பெயரோடே பெண்ணுருவமும் எய்தி இவ்வளவு காலம் வாழ்க என்று அக் குபேரனால் சாபவிடை கூறப்பட்டபடி, யானையாகி இறந்த அப் பத்திராபதி'' என்க.
 
(விளக்கம்) ஈனமில் யாக்கை என்றது தெய்வ உடம்பினை. முன்னைப் பேர் - பழைய பெயர். அஃதாவது பத்திராபதி என்பதாம். இத்துணை - இவ்வளவு காலம். ஆயிழை : பத்திராபதி.