உரை |
|
5. நரவாண காண்டம் |
|
3. இயக்கன் போனது |
|
மன்னருண்
மன்ன நின்னரு ணிகர்க்கும்
மாற்றுப கார மனத்தி
னெண்ணி நிச்ச
நிரப்பி னிலமிசை யுறைநர்க் 145
கெச்சம் பெறுத லின்ப மாதலின்
மற்றது முடிக்கு முயற்சியோ
டுற்றதன் வளநிதிக்
கிழவனை வாழ்த்துவனள் வணங்கி
அளவி லின்பத் தாடலிற்
பணிந்து பெருவரம்
பாகிய பொருவில் செல்வவோர் 150
சிறுவரம் வேண்டுவென் றிரியா தீமென
|
|
(பத்திராபதி
குபேரனை வரம் வேண்டிக் கொள்ளல்)
142 - 150 :
மன்னருள்.............ஈமென
|
|
(பொழிப்புரை) "மன்னருள்
வைத்துத் தலைசிறந்த மன்னனே! நீ யானைப் பிறப்பின்கண் - இறப்பு நிகழ்வுழி மந்திரம்
செவியறிவுறுத்துத் தெய்வப் பிறவியில் ஏறவிடுத்த உதவியை அப்பத்திராபதி நினைந்து,
அதற்கு ஈடாகத் தானும் ஒரு கைம்மாறு செய்ய வேண்டும் என்று தன் நெஞ்சத்தே நினைந்து
நாள்தோறும் ஏதேனுமொரு நல்குரவே நிலவும் இயல்புடைய இந்நிலவுலகத்தின்கண் வாழும்
மாந்தருக்கு மகப்பெறுதல் பேரின்பமாகிய ஒரு பெரும் பேறு ஆதலால் மகப்பேறின்றி நல்கூரும்
நினக்கு அப்பேற்றினைக் கூட்டிமுடிக்கும் ஒரு நன் முயற்சியோடு தனக்குரிய வளவிய
நிதிக்கிழவனாகிய அக் குபேரனை வாழ்த்தி வணங்கி அவனுக்கு அளவில்லாத இன்பத்தைத்
தரும் கூத்தினை ஆடி அவன் மகிழ்ந்த செவ்வி நோக்கி அவனை வணங்கிப் பொருளுரிமைக்கு
மேல்வரம்பாகிய ஒப்பற்ற செல்வத்தையுடைய பெருமானே ! யான் இப்பொழுது ஒரு சிறிய வரம்
வேண்டுகின்றேன். அதனை மறாது வழங்கி யருள்க' என்று இரந்து கூறாநிற்ப
என்க.
|
|
(விளக்கம்) நின் அருள் என்றது யானை இறக்குங்கால் அது தெய்வப்
பிறப்பில் பிறக்கும்படி அதன் செவியில் மந்திர மோதியதனை. மாற்றுபகாரம் - கைம்மாறு.
நில உலகத்தின்கண் ஆண்டான் முதல் அடிமை ஈறாக எத்திறத்தார்க்கும் நாள் தோறும்
யாதானுமொரு குறையுளதாதல் இயல்பாதல் பற்றி நிச்ச நிரப்பின் நிலம் என்றான். என்றது
எல்லாப் பேறுகளும் எய்தியுள்ள அவ்வுதயணன் றானும் மகப்பேறின்றி வருந்துதல் கருதி என்க.
எச்சம் - மகவு : ஆடலில் - ஆடும்பொழுது. மறாதனித்தற் பொருட்டு ஆடுங்கால் அவன்
மகிழ்ந்த செவ்வி நோக்கி வரம் வேண்டினள் என்க. அவன் எளிதின் வழங்கத்தகுந்தது
என்பாள் ''சிறுவரம்''
என்றாள்.
|