உரை |
|
5. நரவாண காண்டம் |
|
3. இயக்கன் போனது |
|
நாவலந் தண்பொழி னலத்தொடு
தோன்றிப் பாவ
நீக்கிய பரதன் பிறந்த 185 ஆய்பெருந்
தொல்குடித் தோன்றி யிப்பால்
மாசில் விஞ்சையர் மலையகந்
தழீஇ ஆழி யுருட்டி
யென்வயின் வரூஉம்
ஊழி யிதுவென வுணரக் கூறி
|
|
(இதுவுமது)
183 - 188 : நாவலந்.........கூறி
|
|
(பொழிப்புரை) ''அவன்
பின்னர் நாவலந் தீவின்கண் எல்லா நன்மைகளோடும் பிறந்து உலகின்கண் தீவினையை
அகற்றிய பரத சக்கரவர்த்தி பிறந்த பலரும் ஆராய்தற்குக் காரணமான பெரிய பழைய
குடியிலே பிறந்து அப்பால் குற்றமற்ற வித்தியாதரருடைய மலைநாட்டைத் தன் குடை நீழலில்
வைத்து ஆணைச்சக்கர முருட்டிப் பின்னர் என்பால் வந்து சேர்தற்குரிய காலம் இந்தக்
காலமேயாகும்'' என்று அக்குபேரன் உணரும்படி விரித்துக் கூறி என்க.
|
|
(விளக்கம்) பாவம் - தீவினை. ஆய் - ஆராய்தற்குக் காரணமான.
மலையகம் - மலைநாடு. ஊழி - காலம். குபேரன் உணரக் கூறி
என்க.
|