உரை |
|
5. நரவாண காண்டம் |
|
3. இயக்கன் போனது |
|
ஆய வெள்ளத் தவனை யழைத்தே
190 குறையா விருந்தவக் கிழவனை
நோக்கி மன்னிய
வத்தவன் றேவி வயிற்றுள்
துன்னினை படுநா ளின்ன தாதலின்
|
|
(சௌதருமேந்திரன் சோதவனுக்குக்
கட்டளையிடுதல்)
189 - 193 : ஆய.......உரைப்ப
|
|
(பொழிப்புரை) பின்னர்
அந்தச் சௌதருமேந்திரன் துறவோர் கூட்டத்தினிதிருந்த அத்துறவியை யழைத்துக் குறைவற்ற
பெரிய தவத்திற்கு உரிமை பூண்ட அச்சோதவனை நோக்கி ''ஐய ! நீ நிலைபெற்ற உதயண
மன்னனுடைய கோப்பெருந் தேவியாகிய வாசவதத்தையின் வயிற்றினுள்ளே பொருந்தி உருவாகும்
நாள் இந்த நாளே யாதலின்..............................நூலையுடைய
அச்சௌதருமேந்திரன் கூறி என்க.
|
|
(விளக்கம்) ஆயவெள்ளம் - துறவோர் கூட்டம். அவன் : சோதவன்.
தவக்கிழவனை : அச்சோதவனை. தேவி : வாசவதத்தை. இப்பகுதியில் 192ஆம் அடியை யடுத்து
ஓரடியும் அதனை யடுத்த அடியில் முதற்சீர் இரண்டும்
அழிந்தொழிந்தன.
|