பக்கம் எண்:98
|
|
உரை | | 3. மகத காண்டம் | | 6. பதுமாபதியைக் கண்டது | |
175 மதுநாறு தெரியன் மகளிருட்
பொலிந்த
பதுமா பதியெனப் பகர்ந்த
பேரினள்
துன்னருஞ் சிறப்பிற் கன்னி
தானும்
வயந்தக் கிழவற்கு நயந்துநகர்
கொண்ட
விழவணி நாளகத் தழகணி காட்டி
180 எழுநாள் கழிந்த வழிநாட்
காலை
வேதியர்க் கெல்லாம் வேண்டுவ
கொடுக்கும்
போதல் வேண்டா பொருட்குறை
வுண்டெனின்
ஏத மில்லை யிவணி ராமினென் | |
(இதுவுமது) 175-183 ;
மதுநாறு,,.,,,,,,,,.ஆமினென்று | | (பொழிப்புரை) தேன் மணங்கமழும்
மலர்மாலையணியும் மகளிருள்வைத்து மிகவும் பொலிவுடைய இவள் 'பதுமாபதி'
என்னும் திருப் பெயரையுடையவ ளாவாள் . யாவரானும் கிட்டுதற்கரிய
சிறப்பினையுடைய இக்கன்னி இங்கு வேனிலானாகிய காமதேவனுக்கு
இந்நகரத்தார் விரும்பி எடாநின்ற இத்திருவிழா நாட்களிலே ஒவ்வொரு
நாளும் இங்கெழுந்தருளித் தனது அழகிய ஒப்பனைகளை நம்மனோர்க்குக்
காட்டிச்செல்வாள், இத்திருவிழா விற்குரிய ஏழு நாட்களும் கழிந்த மறுநாள்
விடியற்காலத்தே இவள் நும்போன்ற மறையோர்க்கெல்லாம் அவரவர் விரும்பிய
பொருளைத் தானமாக வழங்குவள். ஆதலாலே நுமக்கும் பொருட் குறைவு உண்டாயின்
நீயிர் நும்மூர்க்குப் போதல் வேண்டாம்; விழா முடியுமளவும் இங்கேயே
தங்குமின். அங்ஙனம் தங்கின் நுமக்குத் துன்பம் ஒன்றும் உண்டாகாது என்று
கூறி என்க. | | (விளக்கம்) இதன்கண்
உதயணன் ''இவள் பெயர் யாது? காவினுள்வந்த காரணருமன்னை? என்று
வினவிய இரு வினாவிற்கும் விடை கூறுதல் காண்க. வயந்தக்கிழவன் -காமவேள்.
நாளகத்து எழுந்தருளி அழகணிகாட்டி என்க. பொருட்குறைவு - வறுமை, இவணிர்
ஆமின் - இவ்விடத்திலிருப்பீராக. |
|
|