உரை |
|
5. நரவாண காண்டம் |
|
3. இயக்கன் போனது |
|
ஆனாக் கடுந்திற
லண்ண லதனால்
மேனாட் கிழமை விண்ணவர்
மகளை மனத்தி
னுள்ளி மந்திரங் கூறி
நினைத்த பொழுதின் நின்முனர்த்
தோன்றும் 215 தோன்றிய பின்னர்த்
தோன்றலைத் தந்த
மகனது வரவு முறைமையி
னுணர்த்துநீ
அகனமர்ந் துரைத்த வயாஅ
வரும்பொருள்
இற்றென வுரைத்தலு முற்றிழை
தீர்க்கும் மற்றிது
முடியா தாயின் மறித்தும் 220 வருவல்
யானென வொருபதங் கொடுத்துக்
|
|
(இயக்கன்
பத்திராபதியை நினைக்கும்படி
கூறுதல்)
211 - 220 : ஆனாக்.........யானென
|
|
(பொழிப்புரை) "அமையாத
கடிய போராற்றலை யுடைய அண்ணலே! அவள் இங்ஙனம் இருத்தலால் நீ முற்காலத்தே நின்னொடு
நட்புரிமையுடைய பத்திராபதியாகிய அத்தெய்வ மகளை அன்போடு நின் நெஞ்சத்தில்
நினைந்து அவட்குரிய மந்திரத்தையுங் கணித்து நீள நினைத்த பொழுதின் அவள் நின்கண்
முன்னர் ஒருதலையாகத் தோன்றுவாள், தோன்றியபின் உனக்கு மகவினையளித்த சோதவனது
வரலாற்றினையும் முறையோடே அவள் உனக்குக் கூறுவாள். பின்னர் நீ நெஞ்சில் விரும்பி
எனக்குக் கூறிய வயாநோய் தீர்க்கும் அரிய பொருள் இஃதென்று அவளுக்குக் கூறுக. அங்ஙனம்
கூறின் அப்பத்திராபதி உனது குறையைத் தீர்த்து விடுவள். யான் கூறிய இதனால் உனக்கு
அக்குறை தீராவிடின் மீண்டும் யான் இங்கு வருவேன் காண்' என்று அவ்வியக்கன்
உதயணனுக்குக் கூறி என்க.
|
|
(விளக்கம்) அண்ணல் : விளி. கிழமை - நட்புரிமை. விண்ணவர்
மகள் : பத்திராபதி. மந்திரம் - அவளை வருவித்தற்குரிய மந்திரம். தோன்றலைத் தந்தமகன்
என்றது சோதவனை. இற்றென - இஃதென்று. முற்றிழை : பத்திராபதி. மறித்தும் - மீண்டும்.
வருவல் - வருவேன்.
|