பக்கம் எண் :

பக்கம் எண்:983

உரை
 
5. நரவாண காண்டம்
 
  3. இயக்கன் போனது
 
         
    220    வருவல் யானென வொருபதங் கொடுத்துக்
          குறிகொண் மாற்றங் கொள்ளக் கூறிச்
          சென்றியான் வருவல் செம்மல் போற்றெனக்
          குன்றா நன்மொழி யொன்றல பயிற்றிக்
 
        (இயக்கன் உதயணனுக்கு ஒரு மந்திரம் அறிவுறுத்தல்)
                220 - 223 : ஒருபதம்............பயிற்றி
 
(பொழிப்புரை) அவ்வுதயணனுக்கு ஒரு மந்திரத்தை அறிவுறுத்து அவன் குறிக்கோளாகக் கொள்ளவேண்டிய செய்திகளையும் அவன் மனங்கொள்ளும்படி கூறிச் செம்மால் ! யான் கூறியதனை நன்கு பேணிச் செய்வாயாக. யான் சென்றுவருவேன் என்று கூறிக் குறையாத நல்ல மொழிகள் பலவற்றையும் பன்முறையும் கூறி என்க.
 
(விளக்கம்) ஒருபதம் - மந்திரம். செம்மல் : விளி. பயிற்றி - பலகாலும் சொல்லி.