உரை |
|
5. நரவாண காண்டம் |
|
4. வயாத் தீர்ந்தது |
|
தீரும்
வாயி றேர்தும் யாமெனப்
பேரிய லாளர் பிறிதுதிறங்
காணார்
முயற்சியின் முடியாக் கரும மில்லென 15
நயத்தகு நண்பி னாடுதொறு
நாடித் தச்ச
மாக்களை யெச்சார் மருங்கினும்
ஆணையிற் றரீஇ யரும்பெறற் றேவி
பேணிய வசாநோய் தீர
வேண்டிச் சேயுயர்
விசும்பிற் செல்லு மெந்திரம் 20
வாய்மையிற் புணரும் வல்விரைந் தென்றலின்
|
|
(அமைச்சர்
செயல்)
12 - 20 : தீரும்............என்றலின்
|
|
(பொழிப்புரை) மாவடுவினது
பிளவு போன்ற கண்களையுடைய வாசவதத்தையின் வயாத் துன்பத்தையும் நினைந்து அவளது
விருப்பம் நிறைவேறுதற்குக் காலம் நீளும் போலும் என்று தன் நெஞ்சில் நினைத்து
அந்நெஞ்சத்தின்கண் நிலை பெற்றிருக்கின்ற அவ்வாசவதத்தையின் பொருட்டுத் தனது
நெஞ்சழிந்து வெய்தாக உயிர்த்து நஞ்சுகன் தனக்குக் கூறிய பெறற்கரிய மறைமொழியாகிய
அந்த வித்தையையுடைய பெரிய மந்திரத்தை ஓதத் தொடங்கிப் பெரிய இதழையுடைய நறிய
மலர்மாலையினையுடைய அவ்வத்தவ நாட்டு மன்னன் இடையறாது கணியா நிற்ப
என்க.
|
|
(விளக்கம்) வாயில் - வழி. ''அருமை யுடைத்தென் றசாவாமை வேண்டும். பெருமை
முயற்சி தரும்'' (திருக்குறள். 611) என்பது பற்றி முயற்சியின் முடியாக் கருமம் இல்
என்று கருதினர். நயத்தகும் - நயக்கத்தகும். தரீஇ - வரவழைத்துக் கொண்டு. தேவி :
வாசவதத்தை. சேயுயர் - மிக உயர்ந்த. புணரும் : முன்னிலைப்
பன்மை.
|