பக்கம் எண் :

பக்கம் எண்:99

உரை
 
3. மகத காண்டம்
 
6. பதுமாபதியைக் கண்டது
 
         
     
           றிந்நாட் டாரலி ரேனையர் போல்வீர்
     185    எந்நாட் டெவ்வூ ரெக்கோத் திரத்தீர்
           யாமு நும்மை யறியப் போமோ
           வாய்மை யாக மறையா துரைமினென்
           றேயர் குருசிலைத் தூய்மொழி வினவ
 
        (கூனி உதயணனை வினாதல்)
       184 - 188 ; இந்நாட்டார்............வினவ
 
(பொழிப்புரை) பின்னர் அயிராபதி ஏயர்குலத் தோன்றலாகிய
  உதயணனை நோக்கி, ''அந்தணரே! நீயிர் இம்மகதநாட்டுப்
  பார்ப்பனர் அல்லீர்! என்றுணர்கின்றேன். பிறநாட்டினின்றும்
  இங்கு வந்தவர்போலத் தோன்றுகின்றீர். ஆயின் நீயிர் எந்த
  நாட்டினிர்? எந்த ஊரினிர்? நுங் கோத்திரம் யாது.? யாங்களும்
  நுங்களை இன்னாரென்று தெரிந்து கொள்ளலாமன்றோ? மறைத்
  தல் வேண்டா! வாய்மையாகவே என் வினாக்கட்கு விடை கூறுமின்!
  என்று வினவாநிற்ப என்க
 
(விளக்கம்) ஏனையர்-வேறு நாட்டினிர். யாம் என்றது தன்
  தோழிமாரை உளப்படுத்தியபடியாம் ஏயர் குருசில்.