உரை |
|
5. நரவாண காண்டம் |
|
4. வயாத் தீர்ந்தது |
|
விருப்புறு நெஞ்சின் வியந்துவிர
னொடித்தவன்
உரைப்பவை யெல்லா மொழியா
தாற்றி நெடித்தல்
செல்லா தரியவை யாயினும்
45 கொடுத்தல் குணமெனக் கோமக
னருளி
விடுத்தலிற் போந்து வேணவா
முடித்தற்
குரிய முறைமையி னுரிய கொடுப்ப
|
|
(உதயணன் உடம்
படல்)
42 - 47 :
விருப்புறு............கொடுப்ப
|
|
(பொழிப்புரை) அதுகேட்ட உதயணமன்னனும் பெரிதும் அவ்விளைஞனைக்
காண விரும்பும் நெஞ்சோடு அவன் வரவினை வியந்து தன் விரலை நொடித்து, ''அமைச்சனே ?
அத்தச்சவிளைஞன் கூறுவனவற்றையெல்லாம் குறையாமற் செய்து காலம் தாழ்த்தலில்லாமல்
அவன் கேட்கும் பொருள் அரும் பொருளேயாயினும் கொடுப்பதே நன்றாம் !'' என்று
உருமண்ணுவாவுக்குக் கூறி ஏவுதலாலே அவ்வமைச்சனும் விரைந்து சென்று தமது வேணவாவிற்குப்
பொருளாகிய வான ஊர்தியை இயற்றி முடித்தற்கு வேண்டிய பொருள்களை முறைமையோடே அவனுக்கு
உரியனவாக வழங்காநிற்ப என்க.
|
|
(விளக்கம்) விரல்நொடித்து - விரலை வியப்பினால் நொடித்து
என்றவாறு. நெடித்தல் செல்லாது - தாமதியாமல். குணம் - நன்மை. கோமகன் : உதயணன்.
வேணவா - மிக்க ஆசை. உரியன வாகக் கொடுப்ப
என்க.
|