உரை |
|
5. நரவாண காண்டம் |
|
4. வயாத் தீர்ந்தது |
|
நிறையுடன் கொண்டோர் மறைவிடங்
குறுகிச்
சின்னாள் கழிந்த பின்னா ளெல்லையுள்
50 அமைவுநனி காண்கென் றாங்கவ
னுரைப்ப
|
|
(பத்திராபதி வான ஊர்தியமைத்துக்
கொடுத்தல்)
48 - 50 : நிறை.........உரைப்ப
|
|
(பொழிப்புரை) அப் பொருள்களை அளவுடன் பெற்றுக் கொண்டு அவ்
விளந்தச்சன் ஒரு மறைவான இடத்தையணுகி ஒருசில நாள் கழிந்த பின்னர் ஒருநாள்
அரசவைக்கண் வந்து, ''வேந்தே! யான் இயற்றியுள்ள வான ஊர்தியின் அமைப்பினை நன்கு
கண்டருளுக'' என்று கூறுதலாலே என்க.
|
|
(விளக்கம்) நிறை - அளவு. மன நிறைவுமாம். பொருள்களைப்
பெற்றுக்கொண்டு எந்திரம் அமைப்பான்போல மறைவிடத்திலே புகுந்து சிலநாள் கழித்த
பின்னர் என்றவாறு. அமைவு - அமைப்பு. அவன் : பத்திராபதியாகிய அவ்விளந்தச்சன்.
உதயணனுக்குரைப்ப என்க.
|