பக்கம் எண் :

பக்கம் எண்:997

உரை
 
5. நரவாண காண்டம்
 
   4. வயாத் தீர்ந்தது
 
          ஏறு மிடமு மிழியும் வகையும்
          ஆறுந் தீபமு மடையா விடனும்
          கூறுவன னோக்கிக் குறிக்கொளற் கமைந்த
    80    இலக்கண வகையு மிதுவென விளக்கி
          நலத்தக மறையாது நன்கனம் விரித்தபின்
 
                    (இதுவுமது)
               77 - 81 : ஏறும்............பின்
 
(பொழிப்புரை) வானத்தே ஏறிக் காணுதற்குரிய இடங்களையும், இறங்கும் வகைகளையும் காண்டற்குரிய ஆறுகளிருக்குமிடங்களையும், தீவுகளையும் செல்லத்தகாத இடங்களையும் கூறுபவன் பின்னரும் நினைந்து அவ் வேந்தன் குறிக்கொண்டு போற்றுதற்குரிய அவ்விமானத்தின் இலக்கண வகைகளையும் இது இது என்று சுட்டிக்காட்டி நன்மையுண்டாக எதனையும் மறைத்தலின்றி நன்கு விரித்துக் கூறிய பின்பு என்க.
 
(விளக்கம்) தீபம் - தீவுகள். அடையா இடன் - செல்லக்கூடாத இடங்கள். அவையாவன பனிமூடிக் கிடக்கும் துருவங்கள் போல்வன. அவை உடல்நிலைக் கொவ்வாவாகலின் அங்ஙனம் கூறல் வேண்டிற்று. மறையாது நலத்தக நன்கனம் விரித்தபின் என மாறுக.