35. நருமதை சம்பந்தம்

    இதன்கண் : உதயணன் வாசவதத்தைக்கு யாழ் கற்பிக் குங்கால் பிறர் கூறும் கூற்றுக்
களும், அவன் தனக்குண்டான உடன்மெலிவு முதலிய வேறுபாட்டை   உலகினர்க்கு
மறைக்கச் சூழ்ச்சி செய்தலும், வயந்தகனை ஏவி நருமதை என்னும் நாடகக் கணிகையைக்
கொணர்வித்தலும், இச்செயல் கண்டோர் தத்தம் மனம்   போனவாறு உதயணனைத் தூற்
றுதலும், உதயணன் நருமதையைக் காமுற்றான் போன்று நடித்து அவளைப் பாராட்டுதலும்
பிறவும் கூறப்படும்.
 




5




10

 கைவைத்து அமைந்த கனங்குழைக்கு அவ்வியாழ்
 வைகல் தோறும் வத்தவன் காட்ட
 நிகழ்வதை உரைக்கும் புகர்ச்சொல் மாக்கள்
 ஒன்னலர் நுழையா உரிமை மாணகர்த்
 தன்மகள் ஒருத்தியைத் தானயாழ் கற்கென
 ஏதின் மன்னனை எண்ணான் தெளிந்த
 பேதை மன்னன் பின்னம் காண்பான்
 சென்றே யாயினுஞ் சிதையின் அல்லது
 நன்றொடு வாராது ஒன்றறிந் தோர்க்கென
 அரசன் ஆசான் அரும்பெறல் றந்தையெனக்
 கல்லாச் சனத்தொடு பல்லோர் சொல்ல

 



15




20

 ..........ப்புகாஅர் இயல்புணர்ந் தோரென
 மதியோர் மொழிந்தது இதுவென் றெண்ணி
 இன்னவை பிறவும் துன்னினர் கிளந்து
 வேந்திடை இட்ட வெஞ்சொல் லாதலின்
 சேர்ந்தோர் மாட்டும் செப்பல் தீதென
 உரைப்போர் நாவிற்கு உறுதி யின்மையின்
 நினைத்தது மிகையென நெஞ்சு வலியுறீஇ
 மனத்ததை யாக மாந்தர் அடங்கலின்
 வம்ப மாக்கள் வாயெடுத்து உரைக்கும்
 கம்பலை இன்மையின் கடிநகர் தேறி
 ஆங்கன் மொழுகுங் காலை ஓங்கிய

 


25




30

 மாணிப் படிவமொடு மதிலும் சேனையுள்
 ஓதிய காலத்து உடன்விளை யாடித்
 தோழ மாக்கள் தொழுதியிற் கூடிப்
 பால குமரன் பணியின் ஒருநாள்
 மாலையுஞ் சாந்து மடியும் பெய்த
 கையுறைச் செப்போடு கடிநகர்ச் சென்ற
 வயந்தக குமரனை நயந்துமுகம் நோக்கிப்
 பாண்டியான் இவரைப் பயின்றுழி உண்டெனக்
 கண்டறி விலீரெனக் கரந்தவன் மறுப்பக்
 ......போல..................
 இசையா மாக்கள்முன் இயல்பில சொல்லி
 அன்றுதலைப் பட்ட ஆர்வலர் போல

 
35




40

 இன்றுதலை யாக வென்று மெம்வயின்
 இவரே வருகென ஏயினன் அருளி
 மன்ன குமரன் தன்வயின் கோடலின்
 அரும்பெறல் தோழன் ஆங்கவந்து ஒழுகிப்
 பெரும்பெற் றறையும் பேச்சினன் ஆகி
 மாய யாக்கையொடு மதிலகத்து ஒடுங்கிய
 ஆய மாக்கள் அவன்வயின் அறிந்து
 காவ லாளர் அற்றம் நோக்கி
 மேவன மென்னுஞ் சூழ்ச்சிய ராகிப்
 பன்னாள் கழிந்த பின்னர் முன்னாள்

 
45




50

 எண்மெய்ப் பாட்டினுள் இரக்க மெய்ந்நிறீஇ
 ஒண்வினை யோவியர் கண்ணிய விருத்தியுள்
 தலையதன் உம்பர்த் தான்குறிக் கொண்ட
 பாவை நோக்கத்து ஆரணங்கு எய்தி
 முன்தான் கண்ட முகஞ்செய் காரிகை
 உள்கொண்டு ஆற்றும் உறுபிணி தலைஇக்
 கள்கொண் டாங்குக் களிநோய் கனற்றத்
 தீமுகத்து இட்ட மெழுகின் தேம்பியும்
 தாய்முகத்து யாத்த கன்றின் புலம்பியும்

 

55




60

 உயலருந் துன்பமொடு வருவழிப் பழகிப்
 பயலை கொண்டஎன் பையுள் ஆக்கை
 பண்டுஎடன் வண்ணம் பயின்றறி மாக்கள்
 இன்றென் வண்ணம் இடைதெரிந்து தெண்ணி
 நுண்ணிதின் நோக்கி நோய்முதல் நாடில்
 பின்னிது ரக்கும் பெற்றி அரிதென
 மலரேர் உண்கண் மாதர்க்கு அமைந்த
 அலரவண் புதைக்கும் அருமறை நாடித்

 



65

 தெரிவுறு சூழ்ச்சியுள் இருவரும் எண்ணிப்
 பிறன்பால் பட்ட பெண்பால் நாடி
 அவள்பால் பட்ட ஆர்வஞ் செய்கம்
 அன்னாள் ஒருத்தியை அறிந்தனை வம்மெனப்

 




70

 பல்வேல் முற்றம் பணியில் போகி
 நகர்முழுது அறிய நாணிகந்து ஒரீஇ
 ஒருவன் பாங்கர் உளம்வைத்து ஒழுகும்
 அதன்மி யாரென ஆங்கவன் வினவ
 இரங்குபொன் கிண்கிணி இளையோர் நடுவண்
 அரங்கியல் மகளிர்க்கு ஆடல் வகுக்கும்
 தலைக்கோல் பெண்டிருள் தவ்வை ஒருமகள்
 நாடகக் கணிகை நருமதை என்னும்
 பாவை யாகும்இப் பழிபடு துணையென

 
75




80




85

 ஒருநூற்று ஒருகழஞ்சு உரைகண்டு எண்ணிய
 கனபொன் மாசை காண வேந்தி
 மன்றமு மறுகுங் கம்பலை கழும
 வனப்புமுத லாக வழிவர அமைந்து
 குணத்துமுறை வகையில் கோலம் எய்தி
 வீழ்ந்தோர் நல்கும் வெறுக்கை அன்றிக்
 காணி கொண்டுங் கடனறிந்து எண்ணிய
 ஒன்றுமுத லாக வோரெட் டிறுத்த
 ஆயிரங் காறு மாத்த பரிசத்
 தியாழ்முத லாக வறுபத் தொருநான்கு
 ஏகரிள மகளிர்க்கு இயற்கையென்று எண்ணிக்

 




90

 கலையுற வகுத்த காமக் கேள்வித்
 துறைநெறி போகிய தோழித் தூதினர்
 அரசர்க்கு ஆயினும் மடியர்க்கு ஆயினும்
 அன்றை வைகல் சென்றோர்ப் பேணிப்
 பள்ளி மருங்கில் படிறின்று ஒழுகும்
 செல்வ மகளிர் சேரி நண்ணி

 



95

 வயக்களிறு அடக்கிய வத்தவர் பெருமகன்
 இயக்கரும் வீதியின் னெதிர்ப்பட ஒருநாள்
 நயப்புற்று ரற்றும் நருமதை யென்னும்
 நாடகக் கணிகை மாடம் யாதெனத்
 தாயுறை வியனகர்த் தன்குறை உரைத்து
 வாயி லாகிய வயந்தகன் புகலும்

 


100




105




110

 செந்நூல் இணந்த சித்திரக் கம்மத்து
 வெண்கால் அமளி விருப்பின் ஏற்றி
 அணியிழை மகளிரும் யானையும் வணக்கும்
 மணியொலி வீணையும் சாபமும் மரீஇக்
 கழறொடி கவைஇய கலம்பொழி தடக்கை
 உதயண குமரன் உள்ளத்து உள்ளஎனின்
 ஒண்தொடி மாதரும் ஒருதுணை யோருள்
 பெண்துணை சான்ற பெருமைபெற் றனளென்
 மருமகன் புகலும் மனம்புரி கொள்கை
 இருமூ தாட்டி எனக்கும் உண்டெனத்
 தூண்டில் இரையில் துடக்குள் ளுறுத்துத்
 தேன்தோய்த் தன்ன தீஞ்சொல் அளைஇப்
 பொருளெனக் கருதிப் பொன்இவண் விடுத்தோன்
 அருளியும் அருளான் அடித்தி மாட்டெனக்

 



115

 காரணக் கிளவி நீர கூறித்
 தற்பெயர் பெயர்ப்ப மனத்தகை கரந்து
 பிற்பயங் கருதும் பெருநசைக் கிளவி
 இன்னகைத் தோழற்கு இனிய பயிற்றி
 ஆங்கினி திகுந்த போழ்தில் பூங்குழை

 



120




125

 காமுறப் பட்ட சேணிகச் சிறுதொழில்
 கற்றதும் இல்லாச் சிற்றறி வாளன்
 பொய்யொடு மிடைந்த பொருள்நசைக் கடுஞ்சொல்
 மையுண்டு கழுமிய மாசுபடு கலிங்கத்து
 இளையோர் வைகா விழுக்கரு வாழ்க்கையன்
 கவறாடு ஆாளர்க்குத் கலந்தொலை வெய்திக்
 கொடையகத் தோன்எனக் கடைகழிந்து ஓ£டிக்
 கவலையில் செல்லும் கவ்வையின் விலக்கி
 ஐயன் வந்த ஆசறு கருமம்
 கைவளை மாதர் களைந்துசென்று ஈயென

 



130

 நிதியங் காட்டப் பொதியொடு சிதறிக்
 குறையொடு வந்தஅக் குமரன் கேட்க
 சிறியனேன் வந்தஅச் சிறுநில மன்னற்கு
 அம்மனை நயந்தியான் அவ்வயின் சேறல்
 என்மனை மருங்கின் இல்லெனச் சீறித்
 தன்றுறைக்கு ஒவ்வாத் தகையில் கிளவி
 பைந்தொடி மாதர் பண்பில பயிற்றத்

 

135




140

 தாயப் பெண்டிரும் தந்துணை யோரும்என்று
 றோரில எழுகிளை உடன்தொக்கு ஈண்டிப்
 பழமையிற் பசையாது கிழமையிற் கெழுவாது
 தவந்தீர் மருங்கீல் திருமகள் போலப்
 பயந்தீர் மருங்கில் பற்றுவிட்டு ஒரீஇ
 இட்டதை உண்ணும் நீலம் போல
 ஓட்டிடத்து ஒட்டும் உறுதி வாழ்க்கையுள்
 பத்திமை கொள்ளார் பைந்தொடி கேளென
 எடுத்தியல் கிளவியோடு ஏதுக் காட்டித்

 


145




150

 தொடிக்கேழ் முன்கைத் தொகுவிரல் மடக்கி
 மாநிதி வழங்கும் மன்னரிற் பிறந்து
 ..........வேண்டியது முடிக்கும்
 காலம் இதுவெனக் காரணம் காட்டும்
 ஆர்வச் சுற்றத்து அவர்வரை நில்லாள்
 தாய்கை விதிர்ப்பத் தலைபுடைத்து இரங்கி
 ஏயது மறுக்கலும் மிருந்தோற் கூய்நின்
 அடியரின் பற்றி ஆணையிற் கொள்கெனக்
 கடிதியல் வையங் கவ்வையின் ஏற்றிக்
 கொடியணி கூலம் கொண்டனன் போவுழி

 


155

 வலிதின் னென்னை வத்தவர் பெருமகன்
 கொலிய செய்வது குழுக்கள் காண்கெனப்
 பூசல் கிளவி சேயிழை பயிற்ற

 




160

 மாரியும் திருவும் மகளிர் மனமும்
 தக்குழி நில்லாது பட்டுழிப் படுமெனும்
 கட்டுரை அன்றியும் கண்டனம் யாமென
 விச்சையும் வனப்பும் விழுக்குடிப் பிறப்பும்
 ஒத்தொருங்கு அமைந்த உதயண குமரனைப்
 பெற்றனள் ஆயினும் பிறர்க்குநைந்து அழுவோள்
 பெண்ணிலி கொல்லோ பெரியோர்ப் பிழைப்பதோர்
 கண்ணிலி யாகும்இக் கணிகை மகளெனக்
 கூத்தி மருங்கில் குணம்பழிப் போரும்

 
165




170

 ஆற்றல் கொற்றமொடு அரசுவழி வந்ததன்
 காத்துயர் தொல்குடிக் கதுவா யாகப்
 பண்பில் சிறுதொழில் பயின்றதை அன்றியும்
 தன்னோடு படாளைத் தான்நயந்து அரற்றிக்
 கண்ணற் றனனால் காவலன் மகனென
 அண்ணல் மருங்கின் னறிவுஇழிப் போரும்

 




175

 எள்ளியும் இழித்தும் இன்னவை பயிற்றி
 முள்எயிறு இலங்கும் ஒள்ளமர் முறுவலர்
 பட்டி மாக்கள் கட்டுரை பகரும்
 பெருங்கலி ஆவணம் பிற்படப் போஒம்
 வையத்து அவளொடும் வயந்தகன் கேட்பத்

 




180

 தேன்கவர் ஓப்பித் திருநுதல் சுருக்கிப்
 பூநறுந் தேறல் பொலன்வள்ளத்து ஏந்தி
 ஒழுகி நிலம்பெறாஅது ஒசிந்து கடைபுடைத்து
 எழுதுநுண் புருவம் ஏற்றி இயைவித்து
 இலமலர்ச் செவ்வாய் ஒப்ப இதழ்விடுத்து
 நரம்பிசை தள்ளி வறிதினில் சுவைத்து
 மகிழின் மம்மரி எய்தி முகிழின்

 


185

 காலம் அன்றியும் கையின் எரித்த
 கழுநீர்க் குவளைப் பெரும்பொதி அவிழ்ந்த
 வள்ளிதழ் வகைய வாகி ஒள்ளிதழ்
 செஞ்சிவப்பு உறுத்த சிதர்அரி  மழைக்கண்
 கொழுங்கடை இடுக நோக்கி மணிபிறழ

 


190

 விருப்புள் கூர விம்மி வெய்துஉயிர்த்து
 எருத்தஞ் சிறிய கோட்டி எம்மினும்
 திருத்தஞ் சான்றஙந் துணைவியில் செல்கெனப்
 புலவித் தண்டம் தமர்வயின் ஏற்றி
 இல்லை யாயினும் சொல்வகை செருக்கித்
 தண்டிக் கொண்டு பெண்டிரைப் பொறாது
 செயிர்வுள் ளுறுத்த நோக்கமொடு நறவின்

 
195




200

 வாசம் கமழு ம்சைய வாகிக்
 கிளிப்பயி ரன்ன களிப்பயின் மழலை
 எய்தா ஒழுக்கமொடு ஐதவட் பயிற்றி
 எயிறு வெளிப்படாது இறைஞ்சி ஞிமிறுஇனம்
 மூசின கரிய கோதையில் புடைத்துப்
 பூங்குழை மகளிர் புலவிகொள் திருமுகம்
 தேர்ந்துணர் காட்சியில் திரிந்துநலங் கரியப்

 



205




210

 பூந்துகில் தானை பற்றிக் காய்ந்தது
 காட்டினை சென்மோ மீட்டின தெளிகெனப்
 படிற்றியல் களைஇப் பணிமொழிக் கிளவி
 நடுக்குறு துயரமொடு நயவரப் பயிற்றிக்
 குவிப்பூங் கையிணை கூப்பித் திருக்குழல்
 நானப் பங்கி கரமிசைத் திவளப்
 பரட்டசை கிண்கிணிப் பக்கம் புல்லி
 அரத்தகத் தீரத்து ஐதுகொண்டு எழுதிய
 சீறடிச் சுவட்டெழுத் தேறிய சென்னியர்

 




215

 நாட்போது நயந்த வேட்கைய வாயினும்
 முகைப்பதம் பார்க்கும் வண்டினம் போலத்
 தகைப்பருங் காமத்துத் தாம்வீழ் மகளிர்
 நகைப்பதம் பார்க்கும் நனிநா கரிகத்துச்
 சொல்லின் நுண்பொருள் காட்டி இல்லின்
 படுகாழ்ப் படுத்துத் தேய்வை உறீஇக்
 கலுழி நீக்கும் கம்மியர் போல
 மகர வீணையின் மனமாசு கழீஇ
 நகர நம்பியர் திரிதரு மறுகின்

 
220




225

 ஆணையில் கொண்டுதன் அரசியல் செய்தோன்
 காம விருந்தினன் கலையிற்கு இகந்தனன்
 பிழைக்கவும் பெறூஉம் பெண்டிர் மாட்டென
 உரைத்தகு கிளவி ஓம்பார் பயிற்றி
 நடநவின் மகளிர் நலத்திடை நம்பி
 விருந்தினன் போனம்எனப் புரிந்துஅலர் தூற்றி
 விடரும் தூர்த்தரும் விட்டேறு உரைப்பத்

 



230

 தருமம் நுவலாது தத்துவம் ஒரீஇக்
 கருமம் நுதலிய கள்ளக் காமம்
 எத்துறை மாக்களும் மெய்க்கொளப் பரப்பி
 வனப்பும் இளமையும் வரம்பில் கல்வியும்
 தனக்குநிகர் இல்லாத் தன்மையன் ஆதலின்
 பொருந்தாப் புறஞ்சொல் நிறம்பார்த்து எறிய
 வான்மயிர் துடக்கில் தான்உயிர் வாழாப்
 பெருந்தகைக் கவரி அன்ன பீடழிந்து

 
235




240

 நெடுவெண் நிலவின் நீர்மைக்கு இரங்கி
 முறுவல் மகளிர் முற்றம் நிற்பப்
 பசுங்கதிர் சுருங்கிய பசலைத்து ஆகி
 விசும்பெழத் தேயும் வெண்மதி போல
 வலியில் தீராது ஒளியில் குன்றிப்
 பெருநல் கூர்ந்த பெருவரை அகலத்து
 எவ்வம் மறைத்தல் வேண்டி வையத்து

 



245




250
 வலிதில் தந்த வால்வளைப் பணைத்தோள்
 ஒருமனம் புரிந்த நருமதை கேட்ப
 வேட்கைக் கிளவி வெளிப்படப் பயிற்றிச்
 சேட்படு குருசில் சேர்தொறும் பொறாஅள்
 நச்சுஉயிர்ப்பு அளைஇய நாகம் போல
 அச்சு யிர்ப்பு அளைஇ அமரா நோக்கமொடு
 சில்லைச் சிறுசொல் மெல்லியன் மிழற்ற
 அவ்விருள் அடக்கி வைகிருள் போக்கிப்
 போற்ற மாக்கள் தூற்றும் பெரும்பழி
 மேற்கொண்ட டனனால் மின்னிழை பொருட்டென்.