1, யாத்திரை
போகியது
|
இதன்கண்;
வாசவதத்தையின் பிரிவுற்றாமல் வருந்திச் செயல் ஆற்றி அருந்த உ.தயணகுமரனைத்
தோழர்கள் தேற்றிப் பகைவனை வெல்லவேண்டும் என்று வற்புறுத்துதலும், பின்னும்
வருந்தாநின்ற உதயணனை மீண்டும் தேற்றும்பொருட்டு இசைச்சன் என்பான் இராசகிரிய
நகரத்தில் இறந்தவர்களைப் பழைய உருவத்தோடு வரவழைத்துத் தரும் முனிவர் ஒருவர்
இருக்கின்றார் என்றும் அங்குச் சென்று அவரைக் காணின் வாச வதத்தை முதலியோரை
மீண்டும் காண்டல் கூடும் என்றும் கூறுதலும், உதயணன் முதலியோர் வேற்றுருவங் கொண்டு
சிலபடை மறவருடன் மகத நாட்டில் இராசகிரிய நகரத்தை அடைதற்குப் புறப்பட்டுப் போதலும்,
மகதநாட்டின் எல்லையை அவர்கள் எய்துதலும் பிறவும் கூறப்படும். |
|
|
ஆங்கினிது இருந்த காலை ஈங்கினி
வேந்துபடக் கடந்த வேந்துசுடர்
நெடுவேல் உதயணன்
நிலைமை இதுவென உரைப்பேன் |
உரை |
|
|
|
|
பழனப் படப்பைப் பாஞ்சால
ராசன் 5
அழன்மிகு சீற்றத்து ஆருணி அரசன்
திரியும் நெய்யும் ஒருவயின்
செல்லிய
எரிவிளக்கு அற்றம் இருள்பரந்து
ஆங்குப் பாய
தொல்சீர்ப் பகைஅடு தானை
ஏயர் அற்றத்து இடுக்கண்
காலை 10 அன்றவண்
அறிந்தே தொன்றுவழி வந்த
குலப்பகை ஆகிய வலித்துமேல்
வந்து
நன்நகர் வௌவும் இன்னாச் சூழ்ச்சியன் |
உரை |
|
|
என்வகை அறிந்த நன்பொரு ளாளன்
பெரும்படைத் தானைப் பிரச்சோ
தனன்தன் 15 அரும்படை
அழியா ஆற்றலில் போந்தவன்
மடமகள் கொண்ட இடனறி
சூழ்ச்சி
யூகி உளனெனின் இகழாள் இவனெனச்
சாவுமுந் துறுத்த வலிப்பினன்
ஆகித்
தீயகம் கழுமிய கோயில் வேவினுள் 20
தேவியை இழந்து பூவிதழ்ச்
சோலைப்
புல்லென் யாக்கையொடு போயினன் உதயணன் |
உரை |
|
|
இல்எனக்கு எழுபகை இம்மையின்
இனியென
மாற்று வேந்தன் மதில்காப் பிகந்துதன்
ஆற்றல் மகிழ்ந்த அந்நிலை
ஒற்றி |
உரை |
|
|
25 மகத
மன்னனொடு மகள்கிளை யாகித்
தொகைகொண்டுஈண்டியவன் தொல்படை
தழீஇ
ஆதித் துணிவுடை நீதியில் கரந்த
தம்பியர்கூடவெம்பிய
வெகுட்சியின்
ஒருங்கா மாந்தர் உள்ளம்
அஞ்சப் 30 பாடுபெயர்ந்து
இடிக்கும் மேடகம் போல
அகன்றுபெயர்ந்து அழிக்கும் அரும்பெறல் சூழ்ச்சி
நவின்ற தோழனொடு பயம்பட
வலித்து
மதியுடை அமைச்சர் மனந்தெளி உறீஇப்
புதிதில் கொண்ட பூக்கவின்
வேழம் 35 பணிசெயப் பிணிக்கும்
பாகர் போல
நீதி யாளர் ஆதி ஆகிய
திறத்தில் காட்டவும் மறத்தகை
அழுங்கி |
உரை |
|
|
முன்உப காரத்து நன்னயம் பேணித்
தன்னுயிர் கொடுக்குந் தவமுது
தாயும் 40 விறப்பினிற்
பெருகியும் வறப்பினில்
சுருங்கியும் உறுதி
நோக்கி உயிர்புரை காதலோடு
ஆழ்விடத் துதவும் அரும்புணை
போலத்
தாழ்விடைத் தாங்கிச் சூழ்விடைத் துளங்கா
உள்ள ஆற்றல் உறுபுகழ்
யூகியும் |
உரை |
|
|
45 அள்ளல்தாமரை
அகவிதழ் அன்ன
அரிபரந்து அகன்ற அம்மலர் நெடுங்கண்
தெரிமலர்க் கோதைத் தேவியும்
இன்றித்
தருமமும் அருத்தமுங் காமமும் இழந்தே
இருநில மருங்கின் இறைமை
தாங்கி 50 வாழ்தலின் இனிதே
ஆழ்தல்என்று அழிந்தே
உரக்கவின் தேய இரக்கமொடு அரற்றவும் |
உரை |
|
|
கைவரை நில்லாக் கையறு
கவற்சிகண்டு
இன்மொழி விச்சை இலாமயன் என்னும்
ஆளவி நெஞ்சத்து அந்தணன்
இருந்த 55 காள வனமும் வெந்தீப்
புக்கெனக்
காதலன் தன்னையும் சாவறல் உறீஇ
மயக்க நெஞ்சமொடு மனம்வலித்து இருந்துழி |
உரை |
|
|
இசைச்சன் கூறுவன் ஈங்கிது
கேட்கென
விச்சையின் முடியா விழுவினை இல்லெனல்
60 பொய்ச்சொல் என்பர் புன்மை
யோரே
அற்ற தாதகல் இற்றுங் கூறுவென்
கற்றதும் கேட்டதும் கண்ணா
மாந்தர்க்கு
தொற்கிடத்து உதவும் உறுவலி
ஆவது
பொய்ப்பது போலும் நம்முதற் றாகப் 65
பற்றொடு பழகி அற்புஅழல் அழுந்தி
முடிவது நம்மைக் கடிவோர் இல்லை |
உரை |
|
|
இல்லை ஆதலின் சொல்லுவல்
இன்னும்
முடியாக் கருமம் ஆயினும் முடியும்
வாயின் முற்றித்து வயங்காது
ஆயினும் 70 சாவினும் பழியார்
சால்புடை
யோர்என மல்லல்தானை
மறங்கெழு மன்னவன்
செல்வப் பாவை சென்றினிது பிறந்துழி
இம்மை யாக்கையின் இயல்பினள்
ஆகத்
தன்மையில் தரூஉந் தாழாப் பெருவினை 75
உட்குடை விச்சை ஒன்றுண்டு அதனைக் |
உரை |
|
|
கற்றுநனி நவின்ற கடனறி அந்தணன்
இருந்தினிது உறையும் இராச
கிரியெனும்
பொருந்தரு வியனகர்ப் புக்கவன் குறுகி
ஆற்றுளி வழிபாடு ஆற்றி
அமைச்சனொடு 80 பூக்குழை மாதரை
மீட்டனம் கொண்டு
பெறற்கரு விச்சையும் கற்று
நாமெனத்
திறற்படு கிளவி தெரிந்தவன் உரைப்ப |
உரை |
|
|
விறற்போர் உதயணன் விரும்புபுவிதும்பி
என்னே அன்னவும் உளவோ
என்றலின் 85 வேட்டதன் வழியே
பாற்பட நாடி
ஆதி வேதத்து அகவயின் பெரியோர்
ஓதிய உண்டென உணரக்கூற |
உரை |
|
|
இன்னே போதும் மேகுமின்
விரைந்தெனப்
பள்ளம் படரும் பல்நீர்போலவன்
90 உள்ளம் படர்வழி உவப்பக்
காட்டிக்
கணம்புரி பெரும்படைக் காவல்
நீக்கிக் குணம்புரி
தோழர் கொண்டனர் போதர
ஆற்றலும் விச்சையும் அறிவும்
அமைந்தோர் நூற்றுவர்
முற்றி வேற்றுநர் ஆகென |
உரை |
|
|
95
வெண்ணூல் பூந்துகில் வண்ணம்
கொளீஇ நீலக்
கட்டியும் மரகதத் தகவையும்
பாசிலைக் கட்டியும் பீதகப்
பிண்டமும்
கோல மாகக் கொண்டுகூட்
டமைத்துப் பிடித்துருக்
கொளீஇக் கொடித்திரி ஓட்டிக் 100
கையமைத் தியற்றிய கலிங்கத்
துணியினர்
கொய்உளைப் புரவி மேற்கொண்டு அவரின்
கைவினைக் கம்மம் காண்பினி
தாக
வாரமைத்து இயற்றிய காலமை செருப்பினர்
செம்பொன் கொட்டைப் பந்தர்க்
கொளுவினர் 105 மாத்திரை
நுண்கயிற்று ஆத்திரை யாப்பினர்
உள்கூட்டு அமைந்த சில்கூட்டு
அல்குலர் |
உரை |
|
|
இரும்பனை இளமடல் விரிந்துளர்
வெண்தோட்டு
ஈர்க்கிடை யாத்த நூற்புரிப்
பந்தச்
செந்தோட்டு அணிமலர் சேர்ந்த உச்சி
110 அந்தோட்டு அம்பணை அரக்குவினை
உறீஇய
சித்திரத் திண்கால் வித்தகக் குடையினர் |
உரை |
|
|
மரகத மணிக்கை மாசில்
பொற்றொடி
உருவுபடச் செறித்த உரோமக் கொட்டையில்
செந்தளிர் மராஅத்துப் பைங்காய்
பழித்த 115 செண்ணார் வடிவின்
கண்ணார்
கத்தியர் ஏரில
வங்கம் தீம்பூ
வேலம் கப்புரப்
பளிதமொடுஉட்படுத்து இயற்றிய
வாசத் திரையொடு பாகுநிறைத்து
அடக்கிய
மாசில்அருமணி மடைத்த வாடையர் 120
பட்டுச் சுவேகமொடு பாட்டுப்புறம் எழுதிய
கட்டமை சுவடி பற்றிய கையினர் |
உரை |
|
|
புரிநூல்அணிந்த பொன்வரை
மார்பினர்
விரிநூல் கிரந்தம் விளம்பிய நாவினர்
வாச வெள்ளை வரைந்த
கழுத்தினர் 125 தேசந்
திரிதற்கு ஆகிய
அணியொடு
வளங்கெழு மாமலை வன்புன் றாளக
நலங்கெழு சிறப்பின் நாட்டகம்
நீந்திப் |
உரை |
|
|
பைந்தொடி அரிவைக்குப் படுகடங்
கழீஇய
கண்புரை அந்தணன் காள வனத்தினின்று
130 உதய ஞாயிற்றுத் திசைமுகம்
நோக்கித்
திருமகள் தேரும் ஒருமையிற்
போந்து
கருப்பாசம் என்னுங் கானக்
கான்யாற்றுப்
பொரும்புனல் நீத்தம் புணையில்
போகிச்
சேணிடைப் போகிய பின்றை அப்பால்
135 நீணிலைப் படுவில் பேர்புணை
நீந்தி
நொந்துநொந்து அழியும் நோன்புபுரி
யாக்கையர்
அருஞ்சுரக் கவலையும் அடவியும்
யாறும்
பெருஞ்சின வீரர் ஒருங்குடன் பேர்வுழி |
உரை |
|
|
வென்றடு சிறப்பின் வீணை
வித்தகன். 140 ஒன்றிய தேவியை
உள்குவனன் ஆகிச்
செறிந்த மருங்கில் திரிமருப்பு
இரலை புறந்தற்
காப்பப் புணர்மறி தழீஇய |
உரை |
|
|
மடமான் அம்பினை கண்டுமாதர்
கடைபோழ் நெடுங்கண் காம
நோக்கம் 145 உள்ளத்து ஈர
ஒள்ளழல் உயிரா
இனத்திற் கெழீஇ இன்ப
மகிழ்ச்சியொடு
புனத்திற் போகாது புகன்றுவிளை
யாடும்
மான்மடப் பிணையே வயங்கழல்
பட்ட
தேனேர் கிளவி சென்ற உலகம்
150 அறிதி யாயின் யாமும் அங்கே
குறுகச் செல்கம் கூறாய்
எனவும் |
உரை |
|
|
பணிவரை மருங்கில் பாறை தோறும்
மணியிரும் பீலீ மல்க
உளரி
அரும்பெறல் இரும்போத்து அச்சங் காப்ப
155 மதநடை கற்கும் மாமயில்
பேடாய்
சிதர்மலர்க் கூந்தல் செந்தீக்
கவர
மயர்வனள் விளிந்தஎன் வஞ்சி
மருங்குல்
மாறிப் பிறந்துழி மதியின் நாடிக்
கூறின் குற்ற முண்டோ எனவும் |
உரை |
|
|
160 வெஞ்சுரஞ்
செல்வோர் வினைவழி அஞ்சப்
பஞ்சுர ஓசையில் பையெனப்
பயிரும் வெண்சிறைச்
செங்கால் நுண்பொறிப் புறவே
நுண்சிறு மருங்குல் நுகர்வின்
சாயல்
பாசப் பாண்டில் பல்காழ் அல்குலென்
165 வாசவ தத்தை உள்வழி அறியின்
ஆசை தீர அவ்வழி
அடைகேன்
உணரக் கூறா யாயின்
பெடையொடு
புணர்வு விரும்பல் பொல்லாது எனவும் |
உரை |
|
|
பசைந்துழிப் பழகல் செல்லாது பற்றுவிட்டு
170 உவந்துழித் தவிராது ஓடுதல்
காமுறும்
இளையோர் உள்ளம் போலத்
தளைஅவிழ்ந்து
ஊதுமலர் ஒழியத் தாதுபெற
நயந்து
கார்புனம் மருங்கின் ஆர்த்தனை
திரிதரும்
அஞ்சிறை அறுகால் செம்பொறி வண்டே |
உரை |
|
|
175
எரியுள் விளிந்தவென் வரிவளைப்
பணைத்தோள் வள்ளிதழ்க்
கோதை உள்ளுழி
உணரின் கவற்சி
வகையில்பெயர்த்தனை களைஇயர்
அரும்பூங் கோதைப் பூந்தாது
உண்டவள்
அவிழ்பூங் கூந்தலுள் மகிழ்துயில் வெய்தி
180 நீயும் எவ்வம் தீர யானும்
நல்லிள வனமுலை புல்லுபு
பொருந்த
உய்த்தனை காட்டுதி ஆயின் கைம்மாறு
இத்துணை என்பதொன்று இல்லென
இரங்கியும் |
உரை |
|
|
பொங்குமழை தவழும் பொதியின் மீமிசைச்
185 சந்தனச் சோலைதொறும் தலைச்சென்று
ஆடி
அசும்பிவர் அடைகரைப் பசுந்தோடு
உளரிச்
சுள்ளிவெண் போது சுரும்புண
விரித்து மணிவாய்
நீலத்து அணிமுகை
அலர்த்தி ஒண்பூங்
காந்தள் உழக்கிச் சந்தனத் 190
தந்த நறுமலல் அவிழ
மலர்த்தி நறுங்கூ
தாளத்து நாண்மலர் அளைஇக்
குறுந்தாள் குரவின் குவிமுகை
தொலைச்சி
முல்லைப் போதின் உள்ளமிழ்து உணாஅப்
பல்பிட வத்துப் பனிமலர்
மறுகிப் 195 பொன்தார்க்
கொன்றை நன்தாது
நயந்து சாத்துவினைக்
கம்மியன் கூட்டுவினை அமைத்துப்
பல்லுறுப்பு அடக்கிய பையகங்
கமழ எல்லுறு
மாலை இமயத் துயர்வரை
அல்குதற்கு எழுந்த அந்தண்
தென்றால் |
உரை |
|
|
200 செவ்வழித்
தீந்தொடை சிதைந்தன கிளவிஎன்
எல்வளைத் தோளியை எவ்வழி
யானும் நாடிச்
சென்றவள் சேடிள வனமுலைக்
குழங்கல் சாந்திடைக் குளித்துவிளை
யாடிஎன் அழுங்கல்
நெஞ்சத்து அயாஅநோய் தீர
205 மயர்வெனை மாற்றுதி யாயின்
நின்மாட்டு
உயர்வுள இயற்கை யொழியுமோ எனவும்
இன்னவை பிறவும் அன்னவை
கண்டோர்
அவல நெஞ்சமொடு அறிவுபிறி
தாகத் தவலருந்
தேவியைத் தான்நினைந்து ஆற்றாது 210
இறுதி எண்ணி இகவா மன்னனை |
உரை |
|
|
உறுதி மொழியின் உணர்த்துவனர்
ஆகிப்
பல்வகைத் தோழர் படிவ வேடமொடு
செல்வ மகதத்து எல்லை
எய்தி
ஒருவழிப் பழகல் செல்லாது உருவுகரந்து பெருவழி
முன்னிவர் பெருந்தகைக் கொண்டென்
|
உரை |
|
|
|