7. கண்ணுறு கலக்கம்
|
இதன்கண்;
உதயணனும் பதுமாபதியும் தம்முள் ஒருவரை ஒருவர் கண்டமையாலே அற்றைநாள்இரவு அவ்விருவரும்
தனித்தனியே வருந்திய வருத்தம் கூறப்படும். |
|
|
சேயிழைக் கூன்மகள் செவ்வனம் கூறிப்
போகிய பொழுதின் ஆகிய
சூழ்ச்சி
அரும்பெறல் தோழரைப் பொருந்தலும்
பொருக்கெனப்
பகலிடம் விளக்கிய பருதிஅம் செல்வன்
5 அகலிடம் வறுவி தாக
அத்தத்து
உயர்வரை உப்பால் கதிர்கரந்து ஒளிப்ப |
உரை |
|
|
ஆண்கடன் அகறல் அதுநோன்று
ஒழுகுதல்
மாண்பொடு புணர்ந்த மாசறு
திருநுதல்
கற்புடை மகளிர் கடன்எனக் காட்டி
10 வினைக்கும் பொருட்கும் நினைத்துநீத்து
உறையுநர்
எல்லை கருதியது இதுவென
மெல்லியல்
பணைத்தோள் மகளிர்க்குப் பயிர்வன
போல மனைபூங்
காவின் மருங்கில்
கவினிய பைந்தார்
முல்லை வெண்போது நெகிழ |
உரை |
|
|
15
வெறுக்கைச் செல்வம் வீசுதல்
ஆற்றாது மறுத்துக்
கண்கவிழ்ந்த மன்னர் போல
வாசம் அடக்கிய வாவிப்
பன்மலர்
மாசில் ஒள்ளொளி மணிக்கண் புதைப்பப் |
உரை |
|
|
பெருமை பீடற நாடித் தெருமந்து
20 ஒக்கல் உறுதுயர் ஓப்புதல்
உள்ளிப்
பக்கம் தீர்ந்த பரிசிலர்
உந்துஅவாச்
செறுமுகச் செல்வரின் சேராது
போகி
உறுபொருள் உள்ளது உவப்ப
வீசி
வெறுவது விடாஅ விழுத்தகு நெஞ்சத்து
25 உரத்தகை யாளர் சுரத்துமுதல்
சீறூர்
எல்உறு பொழுதின் செல்லல்
ஓம்பி
மகிழ்பதம் அயின்றிசின் ஆங்கு மல்லிகை |
உரை |
|
|
அவிழ்தாது ஊதி அளிதுயில்
அமரக் கழனி
ஆரல் கவுளகத்து அடக்கிப்
30 பழன மருதின் பார்ப்புவாய்
சொரிந்து
கருங்கால் நாரை நரன்றுவந்து இறுப்பத் |
உரை |
|
|
துணைபிரி மகளிர் இணைமலர்
நெடுங்கண் கட்டழல்
முத்தம் காலப் பட்டுடைத்
தனிக்காழ் அல்குல் பனிப்பசப் பிவர
35 அழல்புரை வெம்பனி அளைஇ
வாடை
உழல்புகொண்டு அறாஅது ஒல்லென்று
ஆர்தரச் செங்கேழ்
வானக் கம்பலம் புதைஇ
வெங்கண் நீர தாகி வேலின்
புன்கண் மாலை போழத்
தன்கண் |
உரை |
|
|
புன்கண் மாலை போழத்
தன்கண் 40 தீராக் கற்பின்
தேவியை மறந்து
பேராக் கழற்கால் பெருந்தகை புலம்பிப்
பைவிரி அல்குல் பதுமா
பதிவயின்
கைவரை நில்லாக் காம வேகம்
அன்றுமுத லாகச் சென்றுமுறை
நெருங்கப் |
உரை |
|
|
45 பவழமும்
மணியும் பாங்குபட விரீஇத்
திகழ்கதிர்ப் பசும்பொன் சித்திரச்
செய்கை
வனப்பமை வையம் தனக்குமறை யாகிய
கஞ்சிகை கடுவளி எடுப்ப
மஞ்சிடை
வானர மகளிரின் தான்அணி சுடர 50
முகைநலக் காந்தள் முகிழ்விரல்
நோவத் தகைமலர்ப்
பொய்கைத் தண்செங் கழுநீர்
சில்எனப் பிடித்து மெல்என
இழிந்து நண்ண
வருவோள் போலும் என்கண்
ஆற்றேன் அவள் தன்சாந்தும் இளமுலை
55 நோற்றே ஆயினும் நுகர்வல் யான்எனத் |
உரை |
|
|
தெய்வ நல்யாழ் கைஅமைத்து
இயற்றிய
ஐதேந்து அல்குல் அவந்திகை வீவும்
உறுதுணைத் தோழன் இறுநியும்
நினையான்
மாண்ட சூழ்ச்சி மந்திர அமைச்சர்
60 வேண்டுங் கொள்கைய னாகி
நீண்ட
தடம்பெரும் கண்ணி தகைபா
ராட்டி
உறுவகை அண்ணல் தறுகண் பொருந்தலும் |
உரை |
|
|
கைவயின் கொண்ட கழுநீர்
நறும்போது
கொய்மலர்க் கண்ணி கொடுப்போள்
போலக் 65 கனவில் தோன்றக்
கண்படை இன்றி
நனவில் தோன்றிய நறுநுதல் சீறடி
மைவளர் கண்ணியை எய்தும்
வாயில்
யாதுகொல் என்றுதன் அகத்தே நினைஇ
வெங்கனல் மீமிசை வைத்த
வெண்ணெயின் 70 நெஞ்சம் உருக
நிறுத்தல் ஆற்றான்,
காவினுள் காவலன் கலங்கக் கோயிலுள் |
உரை |
|
|
காவினுள் காவலன் கலங்கக்
கோயிலுள்
பாசிழை அல்குல் பாவையும் புலம்பித்
தாய்இல் கன்றி னாய்நலந்
தொலைஇப்
புகையினும் சாந்தினும் தகைஇதழ் மலரினும்
75 வாசம் கலந்த மாசில்
திருமனை
ஆயஞ் சூழ அமளியுள் ஏறி |
உரை |
|
|
நறுமலர்க் காவினுட் டுறுமிய
பூந்துணர்க்
கொடிக்குருக் கத்திக் கொழுந்தளிர் பிடித்து
நாள்மலர்ப் பின்னைத் தாள்முதல்
அணைந்நு 80 பருகு வன்ன
நோக்கமொடு பையாந்து
உருகும் உள்ளமோடு ஒருமரன் ஒடுங்கி
நின்றோன் போலவும் மென்றோள்
பற்றி
அகலத்து ஒடுக்கி நுகர்வோன் போலவும்
அரிமலர் நெடுங்கண் அகவயின்
போகாப் 85 புரிநூன் மார்பன்
புண்ணிய
நறுந்தோள் தீண்டும்
வாயில் யாதுகொல் என்றுதன்
மாண்ட குழ்ச்சி மனத்தே
மறுகி
ஆசில் அணியிழை தீஅயல் வைத்த
மெழுகுசெய் பாவையின் உருகும்
நெஞ்சினள் 90 பள்ளி
கொள்ளாள் உள்ளுபு வதிய |
உரை |
|
|
இருவயின் ஒத்த இயற்கை நோக்கமொடு
ஒருவயின் ஒத்த உள்ள
நோயர் மல்லல்
தானை வத்தவர் மன்னனும்
செல்வப் பாவையுஞ் செய்திறம்
அறியார் 95 கொல்வது போலுங்
குறிப்பிற்று ஆகி
எல்லி யாமம் ஏழிருள் போலப் |
உரை |
|
|
பசுங்கதிர்த் திங்கள் விசும்பளந்து
ஓடிக் கடுங்கதிர்க்
கனிலி கக்குபு போகித்
தானொளி மழுங்கி மேன்மலை குளிப்ப |
உரை |
|
|
100 மீன்முகம் புல்லென
வா,,,,,,,,,னா,,,,,,,,,கை
தெளிமணி விளக்கும் அளிமலர்ப்
பள்ளியுள் புலப்பில்
தீரக் கலப்புறு
கணவரை முயக்கிடை
விடாஅச் சுடர்க்குழை
மகளிர் தோள்முதற்
புணர்ச்சி இரியத் துட்கென 105
வாள்முகம் மழுங்க வலியற
அராவும் வைவாள்
போலும் வகையிற் றாகி
வெள்வேல் விடலையொடு விளங்கிழை
மாதர்க்குச் செந்தீக்
கதீஇய வெந்தழல்
புண்ணினுள்
சந்தனச் சாந்திட்டு அன்ன தண்மையொடு 110
வந்தது மாதோ வைகல் இன்றுஎன்.
|
உரை |
|
|
|