8. பாங்கர்க் குரைத்தது

 

இதன்கண் : பதுமாபதியின் நிலைமையும், செவிலி முதலியோர் பதுமாபதியிடம் கூறுதலும், அவள் செயலும், உதயணன் பதுமாபதியாகிய இருவர் செயலும்,பதுமாபதி அயிராபதியை வினாதலும், அவள் விடையும், பதுமாபதி அயிராபதியிடம் கூறுதலும், அயிராபதி உதயணன்பால் குறிப்பித்தலும் உதயணன் செயலும், உதயணன் தன்நிலையைத் தோழர்க்கு உணர்த்தலும், இசைச்சன் .மறுத்தலும்,ஏனைய தோழர் மறுத்தலும் உதயணன் கூற்றும் கூறப்படும்.
 
              வைகிய காலை வத்தவர் இறைவனும்
            பைவிரி அல்குல் பதுமா பதியும்
            கண்ணுறக் கலந்த காம வேகம்
            ஒள்நிறச் செந்தீ உள்நிறைத்து அடக்கிய
     5      ஊதுஉலை போல உள்ளகங் கனற்ற
 
              மறுத்துஅவன் காணுங் குறிப்புமனத்து அடக்கி
            பண்கெழு விரலின் கண்கழூஉச் செய்து
            தெய்வம் பேணிப் பையென இருந்தபின்
 
              பாசிழைச் செவிலியும் பயந்த தாயும்
     10     நங்கை தவ்வையும் வந்தொருங்கு ஈண்டிப்
            படிநலப் பாண்டியங் கடிதூர்ந்து உராஅய
            வையத்து இருப்ப மருங்குல்நொந் ததுகொல்
            தெய்வத் தானத்துத் தீண்டியது உண்டுகொல்
            பாடகஞ் சுமந்த சூடுறு சேவடி
     15     கோடுயர் மாடத்துக் கொடுமுடி ஏற
            அரத்தக் கொப்புளொடு வருத்தங் கொண்டகொல்
            அளிமலர்ப் பொய்கையுள்- குளிர்நீர் குடையக்
            கருங்கண் சிவப்பப் பெருந்தோள் நொந்தகொல்
            யாதுகொல் நங்கைக்கு அசைவுண்டு இன்றெனச்
 
       20     செவ்வி அறிந்து பையெனக் குறுகி
            வேறுபடு வனப்பின் விளங்கிழை வையம்
            ஏறின மாகி இளமரக் காவினுள்
            சேறு மோஎனச் சேயிழைக்கு உரைப்ப
 
              முற்ற நோன்பு முடியு மாத்திரம்
     25     கொற்றக் கோமான் குறிப்பின்று ஆயினும்
            வினவ வேண்டா செலவென விரும்பி
            மெல்லென் கிளவி சில்லென மிழற்றிப்
            புனைமாண் வையம் பொருக்கெனத் தருகென
            வினைமாண் இளையரை ஏவலின் விரும்பி
     30     நாப்புடை பெயரா மாத்திரம் விரைந்து
            காப்புடை வையம் பண்ணி யாப்புடை
            மாதர் வாயில் மருங்கில் தருதலின்
 
              கோதை ஆயம் பரவ ஏறித்
            திருமலர் வீதி போதந்து எதிர்மலர்க்
     35     காவினுள் பொலிந்த ஓவக் கைவினைக்
            கண்ணார் மாடம் நண்ணுவனள் இழிந்து
            தேன்இமிர் படலைத் திருஅமர் மார்பனைத்
            தான்இனிது எதிர்ந்த தானத்து அருகே
            அன்றும் அவாவி நோக்கினள் நன்றியல்
 
              அன்றும் அவாவி நோக்கினள் நன்றியல்
     40     இருவரும் இயைந்து பருவரல் காட்டிப்
            புறத்தோர் முன்னர்க் குறிப்புமறைத்து ஒடுக்கிக்
            கருங்கண் தம்முள் ஒருங்குசென்று ஆட
            வந்தும் பெயர்ந்தும் அன்றைக் கொண்டும்
            காலையும் பகலும் மாலையும் யாமமும்
     45     தவலருந் துன்பமொடு கவலையில் கையற்று
            ஐந்நாள் கழிந்த பின்றைத் தன்மேல்
 
              ஐந்நாள் கழிந்த பின்றைத் தன்மேல்
            இன்னா வெந்நோய் தன்அமர் தோழிக்கு
            உரைக்கும் ஊக்கமொடு திருத்தகு மாதர்
            வான்தோய் மண்டபம் வந்தொருங்கு ஏறித்
 
       50     தேன்தோய் கோதை சில்என உராய்
            இடுகிய கருங்கண் வீங்கிய கொழுங்கவுள்
            குறுகிய நடுவில் சிறுகிய மென்முலை
            நீண்ட குறங்கின் நிழல்மணிப் பல்கலம்
            பூண்ட வாகத்துப் பூந்துகில் அல்குல்
     55     அயிரா பதிஎனும் செயிர்தீர் கூனியைத்
            தடந்தோள் மாதர் கொடுங்கழுத்து அசைஇ
            நின்ற செவ்வியுள் ஒன்று ஆரட்ட
 
              நின்ற செவ்வியுள் ஒன்று ஆரட்ட
            வாமான் திண்தேர் வத்தவர் பெருமகன்
            கோமாள் கோடிய குறிப்பினன் ஆகித்
     60     திகழ்தரு மதியில் திருமெய் தழீஇ
            வெள்ளைச் சாந்தின் வள்ளி எழுதிய
            வயந்தக குமரன் வரைபுரை அகலத்து
            அசைந்த தோளன் ஆகி ஒருகையுள்
            தாரகம் புதைத்த தண்மலர் நறும்பைந்
     65     தூழறிந்து உருட்டா ஒருசிறை நின்றுழிப்
            பந்தவன் செங்கை பயில்வது நோக்கி
 
              அந்தண உருவொடு வந்துஅவண் நின்றோன்
            யார்கொல் அவனை அறிதி யோஎனப்
            பாவை வினவப் பணிந்துஅவள் உரைக்கும்
 
       70     அடிகள் போக யானும் ஒருநாள்
            ஒடியாப் பேரன்பு உள்ளத்து ஊர்தர
            ஆண முடைத்தாக் கேட்டனென் அவனை
            மாணகன் என்போன் மற்றிந் நாடு
            காணல் உறலொடு காதலின் வந்தோன்
     75     மறைஓம் பாளன் மதித்தனன் ஆகித்
            தானுந் தோழருந் தான நசைஇ
            நின்றனர் போகார் என்றுஅவட்கு உரைப்பப்
 
              பல்வகை மரபில் பந்துபுனைந்து உருட்டுதல்
            வல்லவன் மற்றவன் கைவயின் கொண்டது
     80     புறத்தோர் அறியாக் குறிப்பின் உணர்த்தி
            நமக்கு வேண்டென நலத்தகை கூறக்
 
              கண்ணினுங் கையினுங் கண்ணியது உணர்த்திப்
            பெருந்தகை அண்ணல் திருந்துமுகம் நோக்கி
            நின்கைக் கொண்ட பூம்பந்து என்கை
     85     ஆய்வளைத் தோளிக்கு ஈக்க என்ன           
 
              அங்கை எற்றிச் செங்கணில் காட்டிய
            கூன்மகள் குறிப்புத் தான்மனத்து அடக்கித்
            தன்வயில் தாழ்ந்த தையல் நிலைமை
            இண்னுயிர்த் தோழர்க்கு இசைத்தல் வேண்டி
 
       90     மந்திரச் சூழ்ச்சியுள் வெந்திறல் வீரன்
            வள்இதழ்க் கோதை வாசவ தத்தையை
            உள்வழி உணராது உழலுமென் நெஞ்சினைப்
            பல்இதழ்க் கோதைப் பதுமா பதியெனும்
            மெல்லியல் கோமகள் மெல்லென வாங்கித்
     95     தன்பால் வைத்துத் தானுந் தன்னுடைத்
            திண்பால் நெஞ்சினைத் திரிதல்ஒன்று இன்றி
            என்உழை நிறீஇத் திண்ணிதில் கலந்த
            காம வேட்கையள் தானெனக் கூற
 
              ஈங்கிது கேட்கென இசைச்சன் உரைக்கும்
     100     மன்னிய விழுச்சீர் மகதத்து மகளிர்
            நன்நிறை உடையர் நாடுங் காலை
            மன்னவன் ஆணையும் அன்னது ஒன்றெனாக்
            கன்னி தானுங் கடிவரை நெஞ்சினள்
            வேட்டுழி வேட்கை ஓட்டா ஒழுக்கினள்
 
       105     அற்றுஅன் றாயின் கொற்றம் குன்றித்
            தொடிகெழு தோளி சுடுதீப் பட்டெனப்
            படிவ நெஞ்சமொடு பார்ப்பன வேடம்
            கொண்டான் மற்றவன் கண்டோர் விழையும்
            வத்தவர் கோமான் என்பதை அறிவோர்
     110     உய்த்தவள்கு உரைப்ப உணர்ந்தனள் ஆகிப்
            பெறுதற்கு அரிய பெருமகன் இந்நகர்
            குறுக வந்தனன் கூறுதல் குணமென
            நெஞ்சுநிறை விட்டனள் ஆகும் அன்றெனின்
 
              நெஞ்சுநிறை விட்டனள் ஆகும் அன்றெனின்
            ஈன மாந்தர் ஒப்ப மற்றுஇவர்
     115     தானம் ஏற்றல் தகாஅது என்றுதன்
            நுண்மதி நாட்டத்து நோக்கின ளாம்அது
            திண்மதித் தன்றெனத் திரிந்தவன் மறுப்ப
 
              ஒருப்பாடு எய்தி உற்றவர் எல்லாம்
            குறிப்பின் வாரா நோக்கெனக் குருசிற்கு
     120     மறுத்த வாயிலொடு வலிப்பனர் ஆக
 
              உயிரொன்று ஆகி உள்ளம் கலந்தவள்
            செயிர்இன்று ஆகிய செங்கடை நோக்கம்
            அணங்கெனக் காயிற்று அவட்கும்என் நோக்கம்
            அத்தொழில் நீர்த்தென எய்த்தனன் என்ன
     125     உரைப்பத் தேறா உயிர்த்துணைத் தோழரைத்
            திருச்சேர் மார்பன் தேற்றுதல் வேண்டி
 
              மலரினும் அரும்பினும் தளிரினும் வனைந்த
            சந்தக் கண்ணிதன் சிந்தை அறியப்
            பூக்குழை மாதர் நோக்கிடை நோக்கிப்
     130     படுகால் பொய்கைப் பக்கம் நிவந்த
            நறுமலர்ப் பொதும்பர் நாற்றுவனம் போகி
            மறைந்தனம் இருந்த காலைமற்று அவள்என்
            கண்ணி கொள்ளில் கலக்கும் உள்ளம்
            திண்ணி தாகுத தெளிமின் நீரென
            மன்னவன் உரைத்தனன் மற்றவர்க்கு எடுத்தென்