| 10. புணர்வு 
 வலித்தது   | 
 
 | இதன்கண்; கனவுகண்ட உதயணன் 
 செயலும், தோழர் கூறுதலும், அவர் உடன்பாடும் உதயணன் குறை இரத்தலும் உதயணனது விடையும் 
 கூறப்படும். | 
 
 |  | 
 
 |  | விடிந்திருள் நீங்கலும் வடிந்த மான்தேர் உதையண குமரன் புதையிருள் 
 கண்ட
 கனவின் விழுப்ப மனமொன் றாகிய
 தோழர்க்கு உரைப்ப வாழ்கென வாழ்த்த
 | உரை | 
 
 |  | 
 
 |  | 5      முற்றிழை அரிவை செற்றங் 
	கொண்டனள் மற்றிவள் வைத்த மாலையும் சாந்தமும்
 அணிந்ததை பொல்லா தருளினை இனிஇவள்
 கனிந்த காமங் கைவிடல் பொருளென
 உயிர்த்துணைத் தோழர் உரைப்பவும் விடாஅன்
 | உரை | 
 
 |  | 
 
 |  | 10     செயிர்த்தொழில் 
 யானைச் செம்மல் 
 தெளியான் ஏற்ற பொழுதே இன்பத் 
 தேவியோடு
 வேற்றோன் போல விழைவினை 
 அகற்றித்
 தன்கா 
 முற்ற தன்னமர் 
 காதல்
 பொற்பூண் 
 மாதரைப் பொருந்த வலிப்ப
 | உரை | 
 
 |  | 
 
 |  | 15     வாமான் 
 தானை வத்தவன் 
 இவனெனக் கோமான்கு 
 உணர்த்திக் கூட்டிய 
 வந்தேம்
 ஒருவயின் 
 நோக்கி இருவரும் 
 இயைதலின்
 ஏயர் 
 பெருங்குடிக்கு ஆகுபெயர் 
 உண்டென
 ஊழ்வினை 
 வலிப்போடு உவந்தனர் ஆகிச்
 | உரை | 
 
 |  | 
 
 |  | 20    சூழ்வினை ஆளர்க்குத் 
 தோன்றல் சொல்லும் ஆருயிர் அன்னவென அற்புவார் 
 கொளீஇக்
 காரிகை 
 மத்தின்என் கடுவலி கடையும்
 வார்வளைத் தோளி வந்தனள் 
 புகுதரு
 மாடம் 
 புக்கிருந்து ஓடுகயல் அன்ன
 25    
 பெருங்கண் கோட்டி விரும்புவனள் 
 நோக்கி
 நாணொடு நிற்கும் நனிநா கரிகம்
 காணலென் ஆயின் கலங்கும்என் 
 உயிரென
 உரப்போர் வென்றி உதயண குமரன்
 இரப்போன் போல இனியோர்க் குறைகொளக்
 | உரை | 
 
 |  | 
 
 |  | 30    குன்றுபல ஓங்கிய 
 குளிர்நீர் 
 வரைப்பில் நன்றுணர் 
 மாந்தர் நாளைக் 
 காலை
 இரவலர் 
 உருவொடு புரவலன் 
 போக்கி
 மாற்றோர் 
 உட்கும் வேற்றுநாட்டு 
 அகவயின்
 தாமும் முன்னர் ஆகி 
 மற்றவற்கு
 35    ஏம 
 நன்னெறி ஈதல் ஆற்றார்
 | உரை | 
 
 |  | 
 
 |  | காமங் 
 கன்றிய காவல் 
 வேந்தனைத் தம்மில் 
 தீர்த்து வெம்முரண் 
 வென்றி
 மகதவன் 
 தங்கை மணிப்பூன் 
 வனமுலை
 நுகர 
 விட்டனர் நுண்அறி விலர்எனின்
 40    ஏதம் அதனால் நிகழ்பவை 
 இவையென
 நீதியில் 
 காட்ட நெடுந்தகை அண்ணல்
 | உரை | 
 
 |  | 
 
 |  | வேண்டா 
 மற்றிது மாண்தகைத்து 
 அன்றென மற்றவள் 
 புகுதரும் மாடம் 
 புகினே
 குற்றம் 
 படுவ கூறக் கேண்மதி
 45    காவ 
 லாளர் கடுகுபு 
 வந்துஅகத்து
 ஆராய்ந்து 
 எதிர்ப்பர் அருநவை உறாது
 | உரை | 
 
 |  | 
 
 |  | போரார் 
 குருசில் போதர 
 உண்டெனின் உருவ மாதர் பெருநலம் பெறுதி
 நன்றா எய்தும் வாயில் 
 அவருனை
 50    என்றே யாயினும் 
 இரவலன் 
 என்னார்
 வேண்டா அதுவென விதியில் 
 காட்டி
 மாண்ட தோழர் மன்னவன் தன்னை
 மறுத்த வாயிலோடு வலிப்பனர் கூற
 | உரை | 
 
 |  | 
 
 |  | மறுக்கல் 
 ஆற்றா நெஞ்சினன் ஆகி 55    
 வத்தவர் பெருமகன் னுத்தரம் நாடி
 அடுமுரண் நீங்கி அறுபது 
 கழிந்தோர்
 கடுவெயில் வந்த காவ லாளர்கண்
 மருள்படு வல்லறை மருங்கணி 
 பெற்ற
 இருள்படு 
 மாதலின் எற்காண் குறுதல்
 60    அரியது அவர்க்கெனத் தெரியக் 
 காட்டி
 வெற்ற 
 வேலான் மற்றும் கூறினன்
 | உரை | 
 
 |  | 
 
 |  | தனக்குநிகர் 
 இன்றித் தான்மேம் 
 பட்ட வனப்பின் 
 மேலும் வனப்புடைத் 
 தாகிக்
 கலத்தொடு 
 கவினிக் கண்கவர் 
 உறூஉம்
 65    நலந்தகு 
 தேறல் நாள்நாள் 
 தோறும்
 தலைப்பெரும் 
 புயலாத் தனக்குநசை 
 உடையதைக்
 குலனுஞ் 
 செல்வமும் நலனு 
 நாணும்
 பயிர்ப்பும் 
 உட்கும் இயற்கை 
 ஏரும்
 மடனும் 
 அன்பும் மாசில் 
 சூழ்ச்சியும்
 70    இடனுடை 
 அறிவும் என்றிவை 
 பிறவும்
 ஒல்காப் 
 பெரும்புகழ்ச் செல்வம் உடைய்
 (இதன் பிற்பகுதியும், 12ஆம் காதையின் முற்பகுதியும் மூலப்பிரதியில் 
 காணப்படவில்லை) | உரை | 
 
 |  |  |  |