13. கோயில் ஒடுங்கியது

 

இதன்கண், பதுமாபதியின் செயலும், அவள் மன்மதன் கோயிலை அடைந்து உதயணனைக் காண்டலும், அவள் தானமளித்தலும், உதயணனைச் சிவிகையில் மறைத்துக் கன்னிமாடத்திற்குக் கொடுபோதலும், அவன் கன்னிமாடத்தில் மறைந்திருத்தலும் பிறவும் கூறப்படும்.
 
 

          கரந்த உருவொடு காவல் புரிந்தவர்
          ஒடுங்குதல் வலித்துடன் போகிய பின்றை
          முனைவெம் துப்பின் மன்னனும் முன்போல்
          புனைவகை மாடம் புக்குமறைந்து இருத்தலின

 
       5    தண்டுஅடு திண்தோள் குருசிலைத் தன்னொடு
          கொண்டுஉள் போகுங் குறிப்பினள் ஆகித்
          தீது தீண்டாத் தெரிவொடு புகுதரும்
          வாயில் நாடி வையம் நீக்கிப்
          பல்வகைத் தானம் நல்குகம் இன்றென
     10    எல்லில் போதரல் இயையும் ஆதலின்
          சிலத மாக்களொடு சிவிகை வருகென       
 
             அலர்ததை ஐம் பால் அணிஇழை ஏறிப்
           போந்தனள் ஆகிப் பூந்தண் கானத்துள் 
           எழுதுவினை மாடத்து முழுமுதல் இழிந்து 
     15     தாம்அகத்து இருக்கும் மாமணிப் பேரறை
           வாயில் சேர்வுற வையம் வைக்கென
           அமைத்தனள் ஆகி அவ்வயின் ஒடுங்கிடு
           சினப்போர் அண்ணலொடு வளப்பாடு எய்தி
           அப்பகல் கழிந்த பின்றை மெய்ப்பட
 
       20    மாண்தகு கிளவி பூண்ட நோன்பின்
           கன்றுகடை ஆதலின் சென்றோர் யார்க்கும்
           மணியும் முத்தும் பவழமும் மாசையும்
           அணியும் ஆடையும் ஆசில் உண்டியும்
           பூவும் நானமும் பூசும் சாந்தமும்
     25    யாவை யாவை அவைஅவை மற்றவர்
           வேண்டேம் எனினும் ஈண்ட வீசலின்
 
             இந்நில வரைப்பில் கன்னியர்க்கு ஒத்த
           ஆசில் ஆசிடை மாசில மாண்பின்
           மந்திர நாவின் அந்த ணாளரும்
     30    அல்லோர் பிறரும் சொல்லுவனர் போயபின்
           கோலக் காமன் கோட்டத்து அகவயின்
           மாலை யாமத்து மணிவிளக்கு இடீஇ
           மோகத் தானம் முற்றிழை கழிந்த பின்
 
             மரபறி மகளிர் பற்றினர் பாடக்
     35    கருமம் அமைந்தபின் கடிமனை புகீஇயர்
           திருமதி முகத்தியைச் சேர்ந்து கைவிடாஅ
           அருமதி நாட்டத்து அந்தணி போந்து
           பட்டினிப் பாவை கட்டழல் எய்தும்
           நீங்குமின் நீரெனத் தான்புறம் நீக்கிப்
 
       40    பஞ்சி உண்ட அஞ்செஞ் சீறடி
           ஒதுங்க விடினும் விதும்பும் வேண்டா
           வாயிலுள் வைத்த வண்ணச் சிவிகை
           ஏறல் நன்றெனக் கூறி வைத்தலின்
           மணங்கமழ் மார்பன் மாடப் பேரறை
     45    இருந்தனன் ஆங்குப் பொருந்துபு பொருக்கெனக்
           கட்டளைச் சிவிகையுள் பட்டுஅணைப் பொலிந்த
           பூம்படம் மறையப் புக்கனன் ஒடுங்க  
 
             வண்டொடு கூம்பிய மரைமலர் போல
           ஒண்தார் மார்பனை உள்பெற் றுஉவகையின்
     50    மணிவரைச் சாரல் மஞ்ஞை போல
           அணிபெற இயலி அடிக்கலம் ஆர்ப்பத்
           தொய்யில் வனமுலைத் தோழி மாரொடு
           பையப் புக்குப் பல்வினைக் கம்மத்துச்
           சுருக்குக் கஞ்சிகை விரித்தனர் மறைஇப்
     55    பள்ளிப் பேரறைப் பாயலுள் அல்லது
           வள்ளிதழ்க் கோதையை வைக்கப் பெறீர்என
 
 

           யாப்புறக் கூறிக் காப்போர் பின்செல
           வலிகெழு மொய்ம்பின் சிலத மாக்கள்
           அதிர்ப்பின் உசும்ப மதில்புறம் பணிந்த
     60    காவும் வாவியும் காமக் கோட்டமும்
           பூவீழ் கொடியும் பொலிவுஇல வாக
           வாழ்த்துப்பலர் கூறப் போற்றுப்பலர் உரைப்ப
           வழுவில் கொள்கை;வான்தோய் முதுநகர்
           மணிஉமிழ் விளக்கின் மறுகுபல போகிக்
     65    கொடிஅணி கோயில் குறுகலும் படிஅணி

 
             பெருங்கடை காவலர் பெருமான் தங்கை
           கருங்கடை மழைக்கண் கனங்குழைப் பாவை
           முடித்த நோன்பின் நெடித்தவகை அறியார்
           இருளின் குற்றம் காட்டி நங்கை தன்
     70     உரிமையுள் படுநரைக் கழறுவனர் ஆகி
           முழுநிலைக் கதவம் அகற்றிமுன் நின்று
           தொழுத கையர் புகுதுகஎன்று ஏத்த               
 
             வாயில் புக்குக் கோயில் வரைப்பில்
           கன்னி மாடத்து முன்அறை வைத்தலின்
     75    பகலே ஆயினும் பயிலா தோர்கள்
           கவலை கொள்ளும் கடிநிழல் கவினி
           மாடுஎழு மைந்தரும் ஊடு சென்றுஆடா
           அணியில் கெழீஇ அமரர் ஆடும்
           பனிமலர்க் காவின் படிமைத்து ஆகி
     80    இருளொடு புணர்ந்த மருள்வரு மாட்சித் 
           தன்னகர் குறுகித் துன்னிய மகளிரை
 
             அகல்க யாவிரும் அழலும் எனக்கெனத்
           திலக முகத்தி திருந்துபடந் திறந்து
           கூன்மகள் வீச ஆனா அகத்தே
     85    தக்க எல்லை இரத்தலின் மிக்க
 
             காழ்அகில் நறும்புகை ஊழ்சென்று உண்ட
           மணிக்கால் கட்டிலுள் வல்லோள் படுத்த
           அணிப்பூஞ் சேக்கை அறைமுதல் ஆகப்
           பக்கமுந் தெருவும் புக்குமுறை பிழையாது
     90    ஆராய்ந்து அந்தணி அமைத்ததன் பின்றைப்
 
             பேரிசை அண்ணலும் பெருநல மாதரும்
           ஆரிருள் போர்வை யாக யாவரும்
           அறிதற்கு அரிய மறையரும் புணர்ச்சியொடு
           கரப்புஅறை அமைத்துக் கைபுனைந் தோர்க்கும்
     95    உரைக்கல் ஆகா உறுபொறிக் கூட்டத்துப்
           புதவுஅணி கதவின் பொன்நி்ரை மாலை
           மதலை மாடத்து மறைந்துஒடுங் கினர்என்