15.  யாழ்நலம் தெரிந்தது

 

இதன்கண் ; பதுமாபதியும் அவள் தோழி யாப்பியாயினியும் உதயணனுக்குள் யாழ்ப்பயிற்சியின் சிறப்பினை அறிந்துகொண்ட செய்தி கூறப்படும்
 
 

            மறைஓம்பு ஓழுக்கின் மதலை கேண்மதி
            நிறைஓம்பு ஓழுக்கின் இன்னலம் உணரேம்
            ஒருபேர் உலகம் படைத்த பெரியோன்
            உருவுகரந்து ஒழுகல் உணரார் ஆகக்

 

 

 
 

     5      கொன்றையம் பசுங்காய் பெருக்கியும் பயற்றின்
            நன்றுவிளை நெற்றினைச் சிறுக்கியும் குன்றா
            இன்தீம் கரும்பினைச் சுருக்கம் விண்தலைத்
            துன்னரும் விசும்புற நீட்டிய நெறியும்
            இன்னவை பிறவும் இசைவில எல்லாம்
   10       படைத்தோன் படைத்த குற்றம் இவையென
            எடுத்தோத்து உரையின் இயம்பி யாஅங்கு
            யானை வணக்கும் ஐங்கதி அருவினை
            வீணை வித்தகத்து அவனினும் மிக்கதன்
            மாண்நலம் உணரேம் மடவியன் இவனென
   15       நாணக் காட்டு நனித்தொழில் புனைந்தேம்

 
 

            மாணக் காட்டுநின் மாணாக் கியரேம்
            ஆயினெம் இனியென அசதி ஆடிய
            மைதவழ் கண்ணி கைதவம் திருப்பாச்
            செவ்வழி நிறீஇச் செவ்விதின் தம்மெனச்
   20       செதுவன் மரத்தின் சேக்கை ஆதலின்
            உதவாது இதுவென உதயணன் மறுப்ப
            யாணர்க் கூட்டத்து யவனக் கைவினை
            மாணப் புணர்ந்ததோர் மகர வீணை
            தரிசகன் தங்கைக்கு உரிதென அருளிய
   25       கோல நல்லியாழ் கொணர்ந்தனள் கொடுப்பத்

 
 

            தினைப்பக வனைத்தும் பழிப்பதொன்று இன்றி
            வனப்புடைத்து அம்மஇவ் வள்ளுயிர்ப் பேரியாழ்
            தனக்குஇணை இல்லா வனப்பினது ஆகியும்
            நிணக்கொழுங் கோல்கள் உணக்குதல் இன்மையின்
   30       உறுபுரிக் கொண்டன பிறநரம்பு கொணர்கென்

 
 

            மதுக்கமழ் கோதை விதுப்பொடு விரும்பிப்
            புதுக்கோல் கொணர்ந்து பொருக்கென நீட்ட
            நோக்கிக் கொண்டே பூக்கமழ் தாரோன்
            வகைஇல இவையெனத் தகைவிரல் கூப்பி
   35       அவற்றது குற்றம் அறியக் கூறினை
            இவற்றது குற்றமும் எம்மனந் தெளியக்
            காட்டுதல் குறையென மீட்டவள் உரைப்ப

 
 

            நன்நுதல் மடவோய் நன்றுஅல மற்றிவை
            முன்னைய போலா மூத்து.........தைந்த
   40       வாவி சா,,,,,,,,.,,,,,,,,.ன ஆயினும்
            பண்அறச் சுகிர்ந்து பன்னுதல் இன்மையும்
            புகரற உணங்கிப் புலவறல் இன்மையும்
            குறும்புரிக் கொள்ளாது நெடும்புரித்து ஆதலும்
            நிலமிசை விடுதலின் தலைமயிர் தழீஇ
   45       மணலகம் பொதிந்த துகளுடைத்து ஆதலும்
            பொன்னே காண்எனப் புரிமுறை நெகிழ்த்துத்
            துன்னார்க் கடந்தோன் தோன்றக் காட்ட

 
              யாமும் பாட்டும் யாவரும் அறிவர்
            வீழா நண்பின் இவன்போல் விரித்து
   50       நுனித்துரை மாந்தர் இல்லென நுவன்று
            மன்றப் புகன்று மாழை நோக்கி
            மறித்தும் போகி நெடுத்துநீர்த்து ஒழுகிப்
            பொன்திரித் தன்ன நிறத்தன சென்றுஇனிது
            ஒலித்தல் ஓவா நலத்தகு நுண்ணரம்
   55       பாவன கொடுப்ப மேவனன் விரும்பிக்
 
 

            கண்டே உவந்து கொண்டதற்கு இயைய
            ஓர்த்தனன் அமைத்துப் போர்த்தனன் கொடுப்ப
            வணங்குபு கொண்டு மணங்கமழ் ஓதி
            மாதர் கைவயின் கொடுப்பக் காதல்
   60       உள்ளம் குளிர்ப்ப ஊழின் னியக்கக்
            கூடிய குருசில் பாடலின் மகிழ்ந்து

 
 

            கோடுயர் மாடத்துத் தோள்துயர் தீரக்
            குறிவயின் புணர்ந்து நெறிவயின் திரியார்
            வாயினுஞ் செவியினுங் கண்ணினும் மூக்கினும்
   65       மேதகு மெய்யினும் ஓதல் இன்றி
            உண்டுங் கேட்டுங் கண்டும் நாறியும்
            உற்றும் மற்றிவை அற்றம் இன்றி
            ஐல்புல வாயிலும் தம்புலம் பெருக

 
 

            வைகல் தோறும் மெய்வகை தெரிவார்
   70       செய்வளைத் தோளியைச் சேர்ந்துநலன் நுகர்வதோர்
            தெய்வங் கொல்எனத் தெளிதல் ஆற்றார்
            உருவினும் முணர்வினும் ஒப்போர் இல்லென
            வரிவளைத் தோளியொடு வத்தவர் பெருமகன்
            ஒழுகினன் மாதோ ஒருமதி அளவென்.