16. பதுமாபதியைப் பிரிந்தது

 

இதன்கண்; பதுமாபதியின்உடனிருந்த உதயணன் அவளைப் பிரிந்தமை கூறப்படும்.
 
                  ஒழுகா நின்ற ஒருமதி எல்லையுள்
                வழிநாள் நிகழ்வின் வண்ணம் கூறுவேன்   
 
                  கலக்கமில் தானைக் காசியர் கோமான்
                நலத்தகு தேவி நன்னாள் பெற்ற
     5          மின்உறழ் சாயல் பொன்உறழ் சுணங்கில்
                பண்ணுறும் இன்சொல் பதுமா நங்கை
                ஆகம் தோய்தற்கு அவாஅ நெஞ்சமொடு
                பாசிழை நன்கலம் பரிசம் முந்துறீஇக்
                கேழ்கிளர் மணிமுடிக் கேகயத்து அரசன்
     10         அளவில் ஆற்றல் அச்சுவப் பெருமகன்
                மகதம் புகுந்து மன்னிய செங்கோல்
                தகைவெம் துப்பின் தருசகன்கு இசைப்ப
 
                  ஏற்றுஎதிர் கொள்ளும் இன்பக் கம்பலை
                கூற்றுஎதிர் கொள்ளாக் கொள்கைத்து ஆகப்
     15         புரவியும் யானையும் பூங்கொடித் தேரும்
                விரவிய படையொடு தருசகன் போதரப்
 
                   போதுபிணைத்து அன்ன மாதர் மழைக்கண்
                 நன்றொடு புணர்ந்த நங்கை மணமகன்
                 இன்றுஇவண் வருமென இல்லந் தோறும்
     20          எடுத்த பூங்கொடி இருங்கண் விசும்பகம்
                 துடைப்ப போல நடுக்கமொடு நுடங்கத்
                 தேர்செலத் தேய்ந்த தெருவுகள் எல்லாம்
                 நீர்செல் பேரியாறு  நிரந்துஇழிந் தாங்குப்
                 பல்லோர் மொய்த்துச் செல்லிடம் பெறாஅ
 
 

     25          தொல்என் மாகடல் உவாவுற்று அன்ன
                 கல்லென் நகரங் காண்பது விரும்பி
                 மழைநிரைத்து அன்ன மாடம் தோறும்
                 இழைநிரைத்து இலங்க ஏறி இறைகொள

 
                   மலைத்தொகை அன்ன மாட மாநகர்
     30          தலைத்தலைப் போந்து தலைப்பெய்து ஈண்டி
                 இடுமணி யானை இரீஇ இழிந்துதன்
                 தொடிஅணி தடக்கை தோன்ற ஓச்சித்
                 தாக்கருந் தானைத் தருசகன் கழலடி
                 கூப்புபு பணிந்த கொடும்பூண் குருசிலை
     35          எடுத்தவன . . . . . . . . . . . . . . . . . . . . . . . , . . . . . . . . .