17.
இரவுஎழுந்தது
|
இதன்கண் மகத மன்னனாகிய
தருசகனோடு போர் செய்ய வந்த பகை மன்னராகிய விரிசிகன் முதலிய எண்மரின் வரலாறும்,
அம் மன்னர் போருக்கு எழுதலும், தருசகன் செயலும், அயிராபதி உதயணனிடம் கூறலும்,
உருமண்ணுவாவின் செயலும், தோழர் செயலும், மணப் பொருள்களின் வகையும், உண்
பொருள்களும், மருந்திற்குரிய பொருளும், மகளிர்க்குரிய பொருளும், பகை மன்னர் செயலும்,
உதயணன் முதலியோர் செயலும், உதயணன் மறவர் இரவில் போர் புரிதலும் பிறவும்
கூறப்படும். |
|
செய்வது தெரியும் சித்தையோடு இருந்துழித் |
உரை |
|
|
தகைமலர்ப் பைந்தார்த் தருசகன்
தன்னொடு்
பகைகொண்டு ஒழுகும் பற்றாக்
கொடுந்தொழில்
விடுகணை வில்தொழில் விரிசிகன் உள்ளிட்டு
5 அலருந்
தோற்றத்து அரிமான்
அன்னவர்
மத்தநல் யானை மதிய
வெண்குடை
வித்தக நறுந்தார் விலங்குநடைப்
புரவி்
அத்தின புரத்தின் அரசருள்
அரிமான்
வேண்டியது முடிக்கும் வென்றித் தானை
10 ஈண்டிய ஆற்றல்
எலிச்செவி அரசனும் |
உரை |
|
|
காண்டற்கு ஆகாக் கடன்மருள்
பெரும்படைத் தீண்டற்கு
ஆகாத் திருந்துமதில்
அணிந்த
வாரண வாசி வளம்தந்து
ஓம்பும்
ஏரணி நெடுங்குடை இறைமீக் கூரிய
15 படைநவில்
தடக்கைப் பைந்தார்க்
கருங்கழல்
அடவி அரசெனும் ஆண்தகை ஒருவனும் |
உரை |
|
|
மலைத்தொகை
அன்ன மையணி
யானை
இலைத்தார் மார்பின் ஏரணி
தடக்கைப்
பொருந்தா மன்னரைப் புறக்குடை கண்ட
20 அருந்திறல்
சூழ்ச்சி அடல்வேல்
தானை அயிர்த்துணைப்
பல்படை அயோத்தி அரசனும் |
உரை |
|
|
மாற்றோர்த் தொலைத்த கூற்றுஉறழ் கொடுந்தொழில்
மிக்குயர் வென்றியொடு வேந்தரை அகப்படுத்து
அக்களம் வேட்ட அடல்அருஞ் சீற்றத்துப் 25 புனைமதில் ஓங்கிய
போதன புரத்துஇறை
மிலைச்சன் என்னும் நலத்தகை ஒருவனும் |
உரை |
|
|
சீற்றத்
துப்பின் செருவெனப்
புகலும்
ஆற்றல் சான்ற அரசருள்
அரிமாத்
துன்னரும் நீள்மதில் துவரா பதிக்குஇறை
30 மன்னரை முருக்கிய
மதிய
வெண்குடைப்
பொங்குமலர் நறுந்தார்ச் சங்கர அரசனும் |
உரை |
|
|
மல்லன் என்னும் வெல்போர்
விடலையும்
தானை மன்னரை மானம் வாட்டிய
ஊன்இவர் நெடுவேல் உருவக் கழற்கால்
35 பொங்குமயிர்
மான்தேர்த் திருநகர்க்கு
இறைவன்
வெந்திறல் செய்கை வேசா
லியும்என
அடல்தகை மன்னர் படைத்தொகை
கூட்டிச்
|
உரை |
|
|
சங்க மாகி வெங்கணை
வீக்கமொடு
பகைநமக் காகிப் பணித்துத் திறைகொளும்
40 மகத மன்னனை
மதுகை
வாட்டிப்
புரிபல இயைந்த ஒருபெருங்
கயிற்றினில்
பெருவலி வேழம் பிணித்திசின்
ஆஅங்கு
இசைந்த பொழுதே இடங்கெட
மேற்சென்று
அருந்திறன் மன்னனை நெருங்கினம் ஆகித |
உரை |
|
|
45 தன்னுடை
யானையும் புரவியும்
தன்துணைப்
பொன்இயல் பாவையும் புனைமணித்
தேரும்
அணிகதிர் முத்தமும் அருங்கலம்
ஆதியும் பணிமொழிச்
செவ்வாய்க் கணிகை
மகளிரொடு பிறவும்
இன்னவை முறைமையில் தரினும்
50 இருங்கண்
மாதிரத்து ஒருங்குகண்
கூடிய கருமுகில்
கிழிக்கும் கடுவளி
போலப்
பொருமுரண் மன்னர் புணர்ப்புஇடைப்
பிரிக்கும் அறைபோக்கு
அமைச்சின் முறைபோக்கு எண்ணினும் |
உரை |
|
|
அங்கண் ஞாலத்து அழகுவீற்று இருந்த
55 கொங்கலர் கோதை
எங்கையைப்
பொருளொடு
தனக்கே தருகுவன் சினத்தின்
நீங்கி
ஊனங் கொள்ளாது தான்அவள்
பெறுகெனத்
தேறும் மாந்தரை வேறுஅவண்
விடுத்துத் தனித்தர
ஒருவரைத் தன்பால் தாழ்ப்பினும் |
உரை |
|
|
60
என்ன ஆயினு அன்னது
விழையாது
ஒடுங்கி இருந்தே உன்னியது
முடிக்கும்
கொடுங்கால் கொக்கின் கோள்இன
மாகிச்
சாய்ப்பிட மாகப் போர்ப்படை
பரப்பி
வலிகெழு வேந்தனை வணக்குதும் என்னத்
65 தெளிவுசெய்து எழுந்து
திருமலி
நன்னாட்டு
எல்லை இகந்து வல்லை
எழுந்து
கடுந்தொழில் மேவலொடு உடங்குவந்து இறுத்தலின |
உரை |
|
|
அகநகர் வரைப்பின் அரசன்
அறியப்
புறநகர் எல்லாம் பூசலில் துவன்றி
70 அச்ச நிலைமை அரசற்கு
இசைத்தலின் மெச்சா
மன்னரை மெலிவது
நாடித்
தருசகன் தமரொடு தெருமரல்
எய்தி
மாணகன் கண்டுஇந் நிலைமை கூறென் |
உரை |
|
|
ஆணம் நெஞ்சத்து அயிரா பதிவந்து
75 அனங்கத் தானம்
புகுந்தவன்
கண்டு
கூப்பிய கையினள் கோயிலுள்
பட்டதும் கோல்தொடி
மாதர் கொள்கையும் கூற |
உரை |
|
|
உகவை
உள்ளமொடு பகைஇவண்
இயைதல் கருமம்
நமக்கென உருமண் ணுவாஉரைத்து
80 இன்னது என்னான்
பொன்ஏர்
தோழிக்கு
இருமதி நாளகத்து இலங்கிழை
மாதர்
பருவரல் வெந்நோய் பசப்பொடு
நீக்குவென்
என்றனன் னென்பதைச் சென்றனை
கூறிக்
கவற்சி நீக்கெனப் பெயர்த்துஅவண் போக்கிக்
85
கடுத்த மன்னரைக் கலங்கத்
தாக்கி
உடைத்த பின்றை அல்லது
நங்கையை
அடுத்தல் செல்லான் அரசன்
ஆதலின் அற்றம்
நோக்கி அவர்படை
அணுகி
ஒற்றி மேல்வீழ்ந்து உடைக்கும் உபாயமா
90 வாணிக வுருவின மாகி
மற்றவர்
ஆணத் தானை அகம்புக்கு
ஆராய்ந்து
இரவிடை எறிந்து பொருபடை ஓட்டிக் |
உரை |
|
|
கேட்போர்க்கு எல்லாம் வாள்போர்
வலித்தொழில்
வளமிகு தானை வத்தவர்க்கு இறையைக்
95 கிளைமை கூறி உளமை
கொளீஇக் காவினுள்
நிகழ்ந்தது காவலற்கு
உரைப்பின்
மன்றல் கருதி வந்த
மன்னற்கு ஒன்றுபு
கொடாமை உண்டு மாகும் |
உரை |
|
|
ஒன்றினன் ஆயின் பொன்றுஞ் சின்முலைத்
100 தெரியிழை மாதர்
உரிமையின்
நோன்தாள் அன்னது
ஆதல் ஒருதலை
அதனால் பின்னரும்
அதற்குப் பிறபிற
நாடுதும் இன்னே
எழுகென்று எழுந்தாங்கு
அணைஇச் சின்னச்
சோலை என்னும் மலைமிசைப்
105 பன்னல் கேள்வி பண்வரப்
பாடிட |
உரை |
|
|
எண்ணிய
கருமத்து இடையூறு
இன்மை திண்ணிதின்
கேட்டுத் தெளிந்தனர்
ஆகி ஆனா
அன்பொடு மேனாள்
அன்றி வழிவழி
வந்த கழிபெருங் காதல்
110 பகைஅடு படைநரைத் தொகையவள்
காண்புழி நூல்திறம்
முற்றி ஆற்றுளி
பிழையாது
ஆற்றின் அறிய அத்துணை
உண்மையின்
ஊறுஇன்று இனியென உவகையில் கழுமிக் |
உரை |
|
|
கரப்பில்
வண்மைப் பிரச்சோ தனன்தன்
115 சினப்படை அழித்த செம்மல்
ஆளர்க்குக் கனப்படை
காக்கைத் தொகைஎனக்
கருதும்
அத்திறத்து ஒன்றி எத்திறத்து
ஆனும்
குவளை உண்கண் இவளொடு
புணர்ந்த காலை
அல்லது கோலக் குருசில்
120 புலம்பின் தீரான் ஆதலின்
பொருபடை கலங்கவாட்
டுதல்எனக் கருத்திடை வலித்து |
உரை |
|
|
மலையின் இழிந்து விலைவரம்பு
அறியா அருவிலை
நன்மணி போத்தந்து
அவ்வழிப் பெருவிலைப்
பண்டம் பெய்வது புரிந்து
125 செழுமணிக் காரர் குழுவினுள்
காட்டி |
உரை |
|
|
உறுவிலை கொண்டு பெறுவிலை
பிழையா வெண்பூந்
துகிலுஞ் செம்பூங்
கச்சும்
சுரிகையும் வாளும் உருவொடு
புணர்ந்த
அணியினர் ஆகிப் பணிசெயற்கு உரிய
130 இளையரை ஒற்றித் தளைபிணி
உறீஇப் |
உரை |
|
|
பல்உறைப்
பையின் உள்அறை
தோறும் நாகத்து
அல்லியும் நயந்ததக்
கோலமும் வாசப்
பளிதமுஞ் சோணப்
பூவும்
குங்குமக் குற்றியுங் கொழுங்கால் கொட்டமும்
135 ஒண்காழ்த் துருக்கமும்
ஒளிநா
குணமும்
காழகில் நூறுங் கட்சா
லேகமும்
கோழிரு வேரியும் பேர்இல
வங்கமும் அந்தண்
தகரமும் அரக்கும்
அகிலும் சந்தனக்
குறையொடு சாந்திற்கு உரியவை
140 பிறவும் ஒருவா நிறைய
அடக்கி |
உரை |
|
|
முதிர்பழம் மிளகும் எதிர்வது
திகழ்ந்த மஞ்சளும்
இஞ்சியுஞ் செஞ்சிறு
கடுகும் தலைப்பெருங்
காயமும் நலத்தகு
சிறப்பின்
சீரகத்து அரிசியும் ஏலமும் ஏனைக்
145 காயமும் எல்லாம் ஆய்வனர்
அடக்கி |
உரை |
|
|
அஞ்சன
மனோசிலை அணிஅரி
தாரம்
துத்த மாஞ்சி யத்தவத்
திரதம் திப்பிலி
இந்துப்பு ஒப்புமுறை
அமைத்துத்
தாழி மேதை தவாத துவர்ச்சிகை
150 வண்ணிகை வங்கப் பாவையோடு
இன்ன
மருத்துறுப்பு எல்லாம் ஒருப்படுத்து அடக்கி |
உரை |
|
|
இலைச்சினை ஒற்றிய தலைச்சுமைச்
சரக்கினர்
நானம் மண்ணிய நீல்நிறக்
குஞ்சியர்
மணிநிறக் குவளை அணிமலர் செரீஇ
155 யாப்புற அடக்கிய வாக்கமை
சிகையினர்
மல்லிகை இரீஇ வல்லோர்
புணர்ந்த
செம்பொன் மாத்திரை செரீஇய
காதினர் அங்கதிர்ச்
சுடர்மணி அணிபெற
விரீஇ
மாசின்று இலங்கு மோதிர விரலினர்
160 வாச நறும்பொடி திமிர்ந்த
மார்பினர் |
உரை |
|
|
மகரிகை நிறைய வெகிர்முக
மாக்கிப்
பாடி மகளிர் விழையுஞ்
சேடொளிப்
பத்திக் கடிப்பும் பவழத்
திரியும் முத்து
வடமும் முழுமணிக் காசும்
165 பன்மணித் தாலியும்
மென்முலைக்
கச்சும்
உத்திப் பூணும் உளப்படப்
பிறவும்
சித்திரக் கிழியின் வித்தக
மாகத்
தோன்றத் தூக்கி ஆங்கவை
அமைத்து
நாற்றிய கையர் ஏற்றிய கோலமொடு |
உரை |
|
|
170 நுரைவிரித்து அன்ன நுண்ணூல்
கலிங்கம்
அரைவிரித்து அசைத்த அம்பூங்
கச்சொடு
போர்ப்புறு மீக்கோள் யாப்புறுத்து
அசைஇப்
பொன்தொடி நிறைக்கோல் பற்றிய
கையினர்
கழலும் கச்சும் கலிங்கமும்
மற்றவர் 175 விழைவன
அறிந்து வேறுவேறு அடக்கிக |
உரை |
|
|
காட்சிமுந் துறுத்த மாட்சியர்
ஆகிப் படைத்திற
மன்னர் பாடி
சார்ந்து
விடைப்பேர் அமைச்சன் மேனாள்
போக்கிய
அறிவொடு புணர்ந்த இசைச்சனும்
அவ்வழிக் 180 குறிவயின்
பிழையாது குதிரையொடு தோன்றலும் |
உரை |
|
|
அதிராத்
தோழனை அவணே
ஒழித்துக்
குதிரை யாவன கொண்டுவிலை
பகரிய வழுவில்
சூழ்ச்சி வயந்தக
குமரனைக் குழுவினோர்
கட்குத் தலைஎனக் கூறி
185 வெம்முரண்
வென்றியொடுமேல்வந்து
இறுத்த
ஒன்னார் ஆடற்கு ஒருப்பாடு எய்தி |
உரை |
|
|
வழக்கொடு புணர்ந்த வாசி
வாணிகம்
உழப்பே மற்றிவன் ஒன்பதிற்று
ஆட்டையன்
மண்டமர்த் தானை மகத மன்னனும்
190 பண்டையன் போலான் ஆதலின்
படையொடு
தொன்னகர் வரைப்பகம் எந்நக
ராக்க
இருந்தனம் வலித்தனம் யாமெனப் பலவும்
பொக்கம் உடையவை பொருந்தக்
கூறிப் பகைகொள்
மன்னன் அகநகர் வரைப்பின்
195 யாவர் ஆயினும் அறிந்துவந்து
அடைவது
காணுங் காலைக் கருமம்
நமக்கெனக்
கணங்கொள் மன்னரும் இணங்குவனர் ஆகிப் |
உரை |
|
|
பெரும்பரி சாரம் ஒருங்குடன்
அருளி
அற்றம் அவர்மாட்டு ஒற்றினர் ஆகி
200 அருத்தம் அருங்கலம் நிரைத்தனர்
தந்திட்டு இன்றைக்
கொண்டும் இவண்இ
ராமின்என்று
ஒன்றிய காதலோடு உள்நெகிழ்ந்து உரைப |
உரை |
|
|
வத்தவர் இறைவனொடு மொய்த்திறை
கொண்டு
பாடியுள் தமக்கிடம் பாற்படுத்து அமைத்து
205 வீட்டின் தளவும் விறற்படை
வீரமும்
கூட்ட மன்னர் குறித்தவும்
பிறவும்
இருளும் பகலும் மருவினர்
ஆராய்ந்து
அருந்திற லாளர் ஒருங்குஉயிர்
உண்ணும்
கூற்றத்து அன்ன ஆற்றலர் ஆகி |
உரை |
|
|
210 மண்டிலம் மறைந்த மயங்குஇருள்
யாமத்து
எண்திசை மருங்கினும் இன்னுழி
எறிதுமென்று
அறியச் சூழ்ந்த குறியினர் ஆகி |
உரை |
|
|
நூலில்
பரந்த கோல
வீதியுள்
படைநகர் வரைப்பகம் பறைக்கண் நெருக்கிப்
215 பாடி காவல ரோடியாண்டு
எறிந்து
புறக்காப்பு அமைத்துத் தலைக்காப்
பிருக்கும்
வல்வில் இளையர்க்கு எல்லை
தோறும்
காப்புநன்கு இகழன்மின் கண்படை
உறந்தென்று
யாப்புறக் கூறி அடங்கிய பொழுதில் |
உரை |
|
|
220 கலங்கத் தாக்கலின் மெலிந்தது
ஆகி உடையினும்
உடையா தாயினும்
யாவரும்
அடையும் தானம் அறியக்
கூறி
நாற்பால் வகுத்து மேற்பால்
அமைத்துக் காவலன்
தன்னையுங் காவலுள் நிறீஇப் |
உரை |
|
|
225 பொற்புடைப் புரவி பொலிய
ஏறி நற்படை
நலியா நன்மையொடு
பொலிந்த சாலிகைக்கு
அவயங் கோல
மாகப் புக்க
மெய்யினர் பூந்தார்
மார்பிற் தாளாண்
கடுந்திறல் விரிசிகன் வாழ்கென
230 மேலாள் மல்லன் பாடி
காத்த நீலக்
கச்சை நிரைகழல்
மறவரை வேலில்
சாய்த்துங் கோல மான்தேர் |
உரை |
|
|
அடவி
வாழ்கென ஆர்த்தனர்
உராஅய்த் தடவரை
மார்பின் தளராச் செங்கோல்
235 மிலைச்சன் வாழ்கெனத்
தலைக்காப்பு
இருந்த தண்ட
மள்ளரைத் தபுத்துஉயிர் உண்டும |
உரை |
|
|
கொண்ட வார்ப்பொடு கூட எலிச்செவி
பண்டரும் பல்லியம் பாற்படத் துவைத்தும் |
உரை |
|
|
விறல்வே
சாலி பாடி
குறுகி 240
அடலருஞ் சீற்றத்து அரசுபல
கடந்த விடலரும்
பைந்தார் வேந்தருள்
வேந்தன் சங்கரன்
வாழ்கெனத் தங்கலர் எறிந்தும் |
உரை |
|
|
வத்தவன்
கொண்ட மாமுரசு
இயக்கி அயிலில்
புனைந்த வெயில்புரை
ஒள்வாள் 245
உரீஇய கையர் ஆகி
ஒரீஇக் காவல்
மறவரைக் கண்படை
அகத்தே வீழ
நூறி வேழந்
தொலைச்சி
மலைஎனக் கவிழ மாமறித்து
இடாஅக்
கொலைவினைப் படைமாக் கொடிஅணி நெடுந்தேர்
250 வத்தவன் மறவர் மொய்த்தனர் எறியக |
உரை |
|
|
கடுவளி உற்ற கடலின்
உராஅய் அடலரும்
பெரும்படை ஆர்ப்பொடு
தொடங்கித் தம்முள்
தாக்கிக் கைம்மயக்கு
எய்தி
மதக்களி யானை வத்தவன் வாழ்கஎன்று
255 உரைப்ப மற்றவர் அறிந்தனர் ஆகி |
உரை |
|
|
எம்வயின்
எம்வயின் எண்ணினர்
கோளெனத் தம்வயின்
தம்முளுந் தெளியார்
ஆகிப் அருங்கலம்
பட்டுழிக்
கிடப்ப நீடிருள்
அகத்து நீங்குதல்
பொருளெனச் 260 செவிசெவி
அறியாச் செயலினர்
ஆகித் தவிர்வில்
வேகமொடு தலைவந்து
இறுத்த கடுந்தொழில்
மன்னர் உடைந்தனர்
ஓடி அடைந்தனர்
மாதோ அரணமை மலையென்.
17. இரவு எழுந்தது முற்றிற்று
|
உரை |
|
|
|