| 19. படை 
 தலைக்கொண்டது   | 
 
 | இதன்கண் தருசகன் செயலும், ஓடிய 
 பகை மன்னர் மீண்டும் போர் செய்தற்குவரலும், அவர் மகதநாட்டுச் சோலை முதலியவற்றை 
 அழித்தலும், அஃதறிந்த தருசகன் படை திரட்டலும், உதயணன் செயலும், தான் போர் 
 செய்யச் செல்வதாகச் சொல்லி உதயணன் வயந்தகனைத் தருசகன்பால் விடுத்தலும், 
 வயந்தகன் செயலும், தருசகன் செயலும் கேகயத்தரசன் எண்ணுதலும், தெரிவித்தலும், தருசகன் 
 எண்ணுதலும், கேகய மன்னனைத் தருசகன் போருக்கு விடுத்தலும், தருசகன் வயந்தகனுக்குக் 
 கூறலும், அவனை விடுதலும், யானை, குதிரை முதலியவற்றின் வருணனையும், படை எழுச்சியும், 
 உதயணன் புறப்பாடும், பகைவர் செயலும் பிறவும் கூறப்படும். | 
 
 |  | 
 
 |  |               வத்தவற் 
 பெற்ற வலிப்பின 
 னாகிமத்த யானை மகத 
 மன்னனும்
 அருமுர ணடுதொழி லிளமைய 
 னிவனொடு
 தரும 
 சாத்திரந் தலைக்கொள் கென்று
 5 
      பூசனை வழக்கொடு புரையவை 
 நடுவண்
 வாசனைக் கேள்வி வழிமுறை தொடங்கலிற்
 | உரை | 
 
 |  | 
 
 |  |               பரந்த 
 மன்னர் நிரந்துகண் கூடிக்கற்ற நூலிற் செற்ற 
 வேந்தன்
 வேறுபடக் காட்டிக் கூறுபட வறுப்பத்
 10      தொலைதல் காரண மாகவது 
 துணிந்த
 நிலையி 
 னெஞ்சினர் நும்முள் 
 யாரெனத்
 தலைக்கூட் 
 டமைத்துத் தம்முள் 
 வினவத்
 தெய்வ 
 மிடைநிலை யாக 
 வதன்றிறம்
 ஐயந் 
 தீர வறிவம் யாமெனத்
 15      தம்பாற் றெளிந்த தன்மைய ராகி
 | உரை | 
 
 |  | 
 
 |  |               
 வெம்போர் நிகழ்ச்சி யென்கொன்மற் 
 றிதுவெனவருபடை 
 யொற்றரை வழுக்கி 
 மற்றவன்
 பொருபடை போதரப் புணர்த்த 
 தாகுமென்
 றதுவும் 
 பிறவு மாய்வுழிச் செவ்விதிற்
 | உரை | 
 
 |  | 
 
 |  |               றதுவும் 
 பிறவு மாய்வுழிச் செவ்விதிற்20     பேணி வாழும் பெற்றிய 
 ராகி
 வாணிக வுருவொடு வந்திடைப் 
 புகுந்த
 வீர ராகுவோர் வேறுதிரிந் 
 தொடுங்கி
 ஆரிருண் மறைஇ யருஞ்சின 
 மழித்தோர்
 போந்தில ராதலிற் பொருத்த முடைத்தென
 | உரை | 
 
 |  | 
 
 |  | 25      வேந்தனில் வந்தோர் வினவுதல் 
 வேண்டா அமர்மேற் கொண்டோர் யாரே 
 யாயினும்
 தமராக் கருதித் தம்வயிற் 
 றெளிதல்
 ஏல்வன் றென்ன மேலவை 
 கிளவா
 இளிவஞ்சு முனிவரே யாயினு மற்றினித்
       30     
  தெளிவஞ்சு தகைத்தெனத் தெளிவுமுந் 
 துறீஇவஞ்சினஞ் செய்து வெஞ்சினம் 
 பெருகக்
 கெடுத்த லூற்றமொடு கடுத்தன 
 ராகிப்
 பெயர்த்தும் பெரும்படை தொகுத்தனர் கொண்டு
 | உரை | 
 
 |  | 
 
 |  | நன்னாடு 
 நடுங்க நண்ணித் துன்னிய 35      ஈர நெஞ்சத் தார்வ 
 லாளர்
 பாரந் தாங்கும் பழமை 
 போல
 இலைக்கொடிச் செல்வமொடு தலைப்பரந் 
 தோங்கிய
 கணைக்கா லிகணையுங் கமுகும் 
 வாழையும்
 சினப்பெரு மாவும் பணைக்காற் 
 பலாவுங்
 40      
 கொழுமுதற் றெங்கொடு முழுமுத 
 றொலைச்சிக்
 கழனி விளைநெற் கனையெரி 
 கொளீஇப்
 பழன நன்னாடு படியழித் 
 துராஅய்ச்
 செயிர்ப்பிற் சிறந்தவர் பெயர்ச்சி 
 நோக்கிப்
 | உரை | 
 
 |  | 
 
 |  | படையொற் 
 றாளர் கடுகுபு குறுகிக் 45      காவலற் கிசைத்துக் கண்டுகை 
 கூப்பி
 வேக மன்னர் மீட்டும்வந் 
 திறுத்த
 வெங்கட் செய்தொழி றன்கட் 
 கூறலும்
 மறுநோய் மக்களி னாழ்ந்த 
 மனத்தன்
 செறுவேல் வேந்தன் செய்வதை யறியான்
 | உரை | 
 
 |  | 
 
 |  | 50     
  கூட்டம் பெருக்கி மீட்டுவந் 
 தனரெனின் ஆற்ற லெல்லா மளந்தபி 
 னல்ல
 தூக்க மிலரெனத் தூக்க 
 மின்றி
 மனத்தி னெண்ணி மற்றது 
 கரந்து
 சினத்த 
 நோக்கமொடு சீறுபு வெகுண்டு
 55      செருவுடை மன்னரைச் சென்றுமே 
 னேருங்குதும்
 பொருபடை தொகுத்துப் போதுகென் றேவலின்
 | உரை | 
 
 |  | 
 
 |  | விருத்தி காரரும் வேண்டியது 
 பெறூஉம் உரத்தகை யாளரு மொருங்குவந் 
 தீண்டுக
 செருச்செய வலித்தனன் செல்வன் 
 சென்றெனத்
 60      தானை யணியத் தலைத்தா 
 ளணியுள்
 யானை யேற்றி யணிமுர சறைதலும்
 | உரை | 
 
 |  | 
 
 |  | வணங்கார் வணக்கிய வத்தவர் 
 பெருமகன் நுணங்குபொரு 
 ளமைச்சரொ டுணர்ந்தன 
 னாகிக்
 கண்ணிய பொருட்குத் திண்ணியது தெரிய
 65      உறுப்போ ரன்ன வுள்பொரு 
 ளமைச்சரும்
 மறப்போர் மன்னனு மாணவே 
 றிருந்து
 செயற்படு கருமத் தியற்கை 
 யிற்றெனப்
 பெயர்த்தும் வருபடை யழிப்பது 
 வலித்து
 வயந்தக குமரற் கியைந்தது கூறும்
 | உரை | 
 
 |  | 
 
 |  |       70     
  மயங்கிதழ்ப் படலை மகதவற் 
 கண்டுசெருச்செய் 
 தானைப் பிரச்சோ 
 தனன்றன்
 பாவையை 
 யிழந்து பரிவு 
 முந்துறீஇச்
 சாவது துணிந்தியான் சேயிடைப் 
 போந்தனென்
 மன்னுயிர் ஞாலத் தின்னுயி 
 ரன்ன
 75     
  அடுத்த நண்புரைத் தெடுத்தனை யாகத்
 | உரை | 
 
 |  | 
 
 |  | தன்மேல் 
 வந்த தாக்கரும் 
 பொருபடை என்மேற் 
 கொண்டனெ னாகி 
 முன்னே
 எறிந்தனெ 
 னகற்றி யின்பம் 
 பெருகச்
 சிறந்ததோர் 
 செய்கை செய்தே னின்னும்
 80      மறிந்துவந் தனரே மாற்றோ 
 ரென்ப
 தறிந்தென 
 னதன்மாட் டவலம் வேண்டா
 | உரை | 
 
 |  | 
 
 |  | என்னி னாதற் கிசைகுவ 
 தாயிற் பின்ன 
 ரறிய பிறபொருள் 
 வலித்தல்
 யான்சென் 
 றிரியினஃ தறிகுந ரில்லைத்
 85      தான்சென் றுறுவழித் தளர்ந்த 
 காலை
 மகத 
 மன்னனை மலைந்துவென் 
 றனமென
 மிகுதி 
 மன்னர் மேல்வந்து 
 நெருங்கின்
 என்னா 
 மன்ன தின்னாத் 
 தரூஉம்
 எடுத்துநிலை 
 யரிதென வேதுக் காட்டி
 90     
  என்குறை யாக வொழிக வெழுச்சி
 | உரை | 
 
 |  | 
 
 |  | தன்படை 
 யெல்லாந் தருக 
 வென்னொடும் அடற்றொழில் 
 யானைப் படைத்தொழில் 
 பயின்றோர்
 எனைவ 
 ருளரவ ரனைவரும் 
 யானும்
 ஏறுதற் 
 கமைந்த விருங்கவுள் வேழமும்
 95       வீறுபெறப் பண்ணி விரைந்தன 
 வருக
 தன்பாற் 
 படைக்குத் தலைவ 
 னாகியோர்
 வன்பார் 
 மன்னன் வரினு 
 நன்றெனக்
 கூறினன் 
 மற்றெங் கோமக 
 னென்றவற்
 றேறக் 
 காட்டி மாறுமொழி 
 கொண்டு
 100      
 விரைந்தனை வருகெனக் கரைந்தவற் போக்க
 | உரை | 
 
 |  | 
 
 |  | வாயன் றாயினும் வந்துகண் 
 ணுற்றோர் மேவ 
 வுரைக்கும் மேதகு 
 வாக்கியம்
 வல்ல 
 னாகிய வயந்தக 
 குமரன்
 செல்வன் 
 றலைத்தாட் சென்றுகண் ணெய்தி
 105      இறைவன் மாற்றமுங் குறையுங் கூற
 | உரை | 
 
 |  | 
 
 |  | மகதவ 
 ரிறைவனுந் தமர்களைத் 
 தரீஇநமக் குறுதி 
 வேண்டு முதயண 
 னுரையிது
 மறுமொழி 
 யாதென மந்திர 
 மாக்கள்
 யாதவன் 
 வலித்த தப்பொரு ளறிதல்
 110       தீதன் றாதலிற் றெளிந்து 
 செய்கென
 மறுத்தல் 
 செல்லான் வாழி 
 யவர்நிலை
 அழிக்கும் 
 வாயி லறியுந் 
 தானென
 ஒன்றின 
 னுரைத்ததை யொன்றுவன னாகி
 | உரை | 
 
 |  | 
 
 |  | அருஞ்சின யானையும் புரவியு மமைந்த 115      இருஞ்சின விளையரும் வருகென 
 வேவி
 | உரை | 
 
 |  | 
 
 |  | வலிகெழு நோன்றாள் வத்தவன் 
 வலித்ததும் கலிகெழு 
 மைத்துனன் கருத்து 
 நோக்கி
 முற்கிளை 
 வேண்டுநர் மற்றவர்க் 
 கியைந்த
 அற்றந் 
 தீர்க்கினது பிற்பயம் பெருகும்
 120      அற்று மன்றிப் பற்றா 
 மன்னர்
 மேல்வந் 
 திறுப்ப வேல்பல 
 படையொடு
 மாயா 
 திருப்பிற் கிளையோ 
 மற்றிவன்
 வேற்றா 
 னெனவு மாற்றா 
 னெனவும்
 போற்றா மன்னர் புறஞ்சொற் படுமெனக்
 | உரை | 
 
 |  | 
 
 |  | 125     கேகயத் 
 தரசனுங் கிளந்துபல 
 வெண்ணிக் காவல் 
 வேந்தனைக் கண்டுகை 
 கூப்பி
 வானோர் 
 பெரும்படை வந்த 
 தாயினும்
 யானே 
 யமையு மடிக 
 ளென்னை
 விடுத்தற் 
 பாற்றென வெடுத்தவ னிசைப்பத்
 | உரை | 
 
 |  | 
 
 |  | 130     தந்தை 
 பெருங்கிளை காரண 
 மாக முந்து 
 மப்படை முருங்கத் 
 தாக்கி
 வந்த 
 வேந்தன் வலித்ததுந் 
 தங்கைக்குச்
 சென்ற 
 குமரன் முந்தைக் 
 கூறிய
 மாற்றமு 
 மனத்தே யாற்றுளி புடைபெயர்ந்
 135      தொலிக்குங் கழற்கா லுதயண 
 குமரன்
 வலிக்கும் 
 பொருண்மேல் வலித்தன னாகித்
 | உரை | 
 
 |  | 
 
 |  | தன்படைத் தலைவ னாக 
 வெம்மொடே வன்படை 
 யாளன் வருக 
 வென்றனன்
 மாண்ட 
 வத்தவ ராண்டகை யாதலின்
 140      நம்மேல் வந்த வெம்முரண் 
 வீரர்
 தம்மேற் 
 சென்று தருக்கற 
 நூறுதல்
 வத்தவ 
 ரிறைவனும் வலித்தன 
 னவனோ
 டொத்தனை 
 யாகி யுடன்றமர் 
 செய்ய
 வல்லை 
 யாயிற் செல்வது தீதன்
 145      றென்றவன் விடுப்ப நன்றென 
 விரும்பி
 ஒட்டிய 
 குமர னுள்ள நோக்கி
 | உரை | 
 
 |  | 
 
 |  | மட்டலர் பைந்தார் மகதவன் 
 வயந்தகற் குற்ற 
 நண்பி னுயிர்போ 
 லுதயணற்
 கிற்றிது 
 கூறுமதி யிளையோள் பொருட்டா
 150      வந்திவ ணிருந்த வெந்திறல் 
 வீரன்
 தன்னொடு 
 வந்து மன்னரை 
 யோட்டிப்
 போதரத் 
 துணிந்தன னேத 
 மின்றி
 ஆகும் 
 வாயி லெண்ணி 
 யப்படை
 போக 
 நூக்கல் பொருளெனக் 
 கூறி
 155      
 மீட்டவற் போக்க வேட்பனன் விரும்பியவன்
 | உரை | 
 
 |  | 
 
 |  | கூறிய 
 மாற்றங் கோமான் 
 றன்னொடு வீறியல 
 மைச்சர் வேறாக் 
 கேட்டுக்
 குறையின் 
 வேண்டுங் கரும 
 முறையிற்
 றானே 
 முடிந்ததென் றானா வுவகையன்
 160     யானையும் புரவியு மமையப் 
 பண்ணி
 மாண்வினைப் 
 பொலிந்தோர் வருக 
 மற்றோர்
 சேனை 
 நாப்பட் சேருக 
 வின்றெனப்
 பெயர்த்து 
 மற்றவற் குரைத்தலிற் 
 பெருமகன்
 களிற்றுப் 
 பாகனை விளித்தன 
 னிறீஇ
 165     
  அண்ணல் யானை பண்ணி வருகெனக்
 | உரை | 
 
 |  | 
 
 |  | கண்ணார் தகைய கவுளிழி 
 கடாத்தன மண்ணார் 
 நுதலின மாசின் 
 மருப்பின
 ஆற்ற 
 லமைந்தன நீற்பாற் 
 புறத்தன
 அமர்பண் 
 டறிந்தன வச்ச 
 மில்லன
 170     
  புகரில் வனப்பின போரிற் 
 கொத்தன
 கோலங் 
 கொளீஇச் சீலந் 
 தேற்றின
 இருபாற் 
 பக்கமு மெய்து 
 மெறிந்தும்
 பொருவோர்ச் 
 செகுக்கப் புன்படைக் 
 கருவி
 அடக்குபு 
 பண்ணித் துடக்குபு 
 காட்டும்
 175      
 தோட்டி கொளீஇக் கூட்டுபு 
 நிரைத்த
 வேல்வ 
 லிளையர் கால்புடை 
 காப்பக்
 கோயின் 
 முற்றத் துய்த்தலின் வாய்மொழி
 | உரை | 
 
 |  | 
 
 |  | கோயின் முற்றத் துய்த்தலின் 
 வாய்மொழி உதயணன் 
 றன்மாட் டுய்க்க 
 விவற்றொடு
 பொருபடைக் 
 குதவும் புரவியும் புரவியொடு
 180      செருவமர் மாந்தருஞ் செல்க 
 விரைந்தென
 ஒன்னா 
 ரோட்டிய வுதயணன் 
 கோயிற்
 பொன்னார் 
 முற்றம் புகுந்துடன் றுவன்ற
 | உரை | 
 
 |  | 
 
 |  | அருந்திறல் யானை யமைந்தது 
 நாடி இரும்பிடர்த் 
 தலையிற் பெருந்தகை மேல்கொள
 185      உயர்ந்த வூக்கத் துருமண் 
 ணுவாவும்
 வயந்தக 
 குமரனும் வாய்மொழிந் 
 தாய்ந்த
 உயர்ச்சி 
 யுள்ளத் திசைச்சனு 
 மேனைத்
 தடவரை 
 மார்பி னிடவக 
 னுளப்பட
 எந்நூற் 
 கண்ணு மிடம்பா 
 டுடைய
 190     
  முந்நூற் றறுவர் மொய்த்தொருங் 
 கீண்டி
 வலம்படு 
 நமக்கென வலங்கொண் டேற
 | உரை | 
 
 |  | 
 
 |  | ஒழிந்த மாந்தர் பொலிந்துபுறங் 
 காப்ப இறையுடைச் 
 செல்வ மியையத் 
 தழீஇக்
 குறைபட 
 லில்லாக் கொற்றமொடு போந்து
 195      முரசுஞ் சங்கு முருடு 
 மொலிப்ப
 அரசப் 
 பெருங்கொடி யொருவலத் 
 துயரி
 எழுந்த 
 பொழுதிற் றழங்குரன் 
 முரசிற்
 றருசக 
 குமரன் றான்பின் 
 வந்து
 கேகயத் 
 தரசனைக் காவல் போற்றென
 200      ஓம்படை கூறி யாங்கவ ணொழியப்
 | உரை | 
 
 |  | 
 
 |  | பவ்வத் தன்ன படையமை 
 நடுவண் வவ்வற் 
 கெண்ணிய வத்தவ 
 ரிறைவன்
 கெடலருஞ் 
 சிறப்பிற் கேகயத் 
 தரசனும்
 உடலுநர்க் 
 கடந்த வுருமண் ணுவாவும்
 205     முன்ன ராக முன்னுக 
 வென்னொடு
 பின்ன 
 ராவோ ரின்னரென் 
 றுரைத்துக்
 கூறுபடப் 
 போக்கி வேறுபடப் 
 பரப்பி
 எல்லை 
 யிகந்த விருங்கடல் 
 போலப்
 புல்லார் 
 பாடியிற் குறுகலி னொல்லென
 | உரை | 
 
 |  | 
 
 |  | புல்லார் பாடியிற் குறுகலி 
 னொல்லென 210    
  ஒற்றர் மாற்றம் பெற்றுமுன் 
 னிருந்தோர்
 வேழமும் 
 புரவியு மூழூழ் 
 விரைஇக்
 காழ்மண் 
 டெஃகமொடு காற்படை 
 பரப்பிப்
 புண்ணிய 
 முடையம் பொருமிவ 
 ணின்னரை
 நன்னர்ப் 
 பெற்றே நாமெனக் கூறி
 | உரை | 
 
 |  | 
 
 |  | 215      அங்கண் 
 மாதிரத் ததிர்ச்சி 
 யெய்த வெங்கண் 
 முரசொடு பல்லியங் 
 கறங்க
 அறியச் 
 செய்த குறியுடைக் 
 கொடியர்
 கூற்றுல 
 கின்று கொள்ளா 
 தாமென
 ஆற்றல் 
 கலந்த வார்ப்பின ராகி
 220      மலைத்துமேல் வந்த மகதவன் 
 படையொடு
 தலைப்பெய் 
 தன்றாற் பகைப்படை பரந்தென்.
 
 | உரை | 
 
 |  | 
 |  |