20. சங்க மன்னர்
உடைந்தது
|
இதன்கண் மகத மன்னன்
படைகளிடத்தும் சங்க மன்னர் படைஇடத்தும் அமைந்த காலாட்படை குதிரை மறவர் யானை
இவர்களின் இயல்பும், போர் நிகழ்ச்சியும், உதயணன் முதலியோர் செயலும், போரின்கண்
அச்சுவப் பெருமகன் இறந்து படுதலும், அச்செய்தியை உதயணன் தருசகனுக்குக் கூறுதலும், தருசகன்
வருந்துதலும், தருசகனும் உதயணனும் நகர் புகுதலும், நகர மாந்தர் செயலும், உதயணனைப்
புகழ்தலும், சிலர் வாசவதத்தையை இகழ்தலும்; சிலர் அவளைப் புகழ்தலும் பிறவும்
கூறப்படும். |
|
|
பரந்த பெரும்படை எதிர்ந்த
காலை
அருங்கணை நிறைந்த ஆவ
நாழிகை
பெரும்புறத்து இட்ட கருங்கச்
சீர்ப்பினர்
பிறர்ப்பிறக்கு இடீஇச் சிறப்பிகந்து
எள்ளி 5 நகுவன
போலத் தொகைகொண்டு
ஆர்ப்புறும்
பைங்கழல் அணிந்து பரிபுஅசை
வில்லா இசைகொள்
நோன்தாள் அசைவில் ஆண்மையர் |
உரை
|
|
|
வணங்குசிலைச் சாபம் வார்கணை
கொளீஇ
நிணம்பட நெஞ்சமும் நெற்றியும்
அழுத்திக் 10 கைபுடை
பரந்து கலங்கத் தாக்குநர்
புடைநிரைத் தாரைக் கடிநீர்க்
கைவாள்
படையு
நெருக்கிப்........................
பாலிகை விளிக்கும் பண்அமை
பற்றினர்
மாலையும் வயிரமும் ஊழூழ் பொங்கக்
15 கால்வல் இளையர் கலங்கத் தாக்கவும் |
உரை
|
|
|
படைமிசை நிரைத்த வடிவமை
வார்நூல்
சித்திரக் குரத்தின வித்தகக்
கைவினைப்
புடைப்பொன் புளகமொடு பொங்குமயிர்
அணிந்த
அரத்தப் போர்வைய யாப்பமை கச்சின
20 முற்றுமறை பருமமொடு பொற்பூஞ்
சிக்கத்
தாண வட்டத்து யாப்புப்
பிணிஉறீஇக்
கோண வட்டக் கோல
முகத்த
வெண்கடல் திரையென மிசைமிசை
நிவந்தரும்
பொங்குமயிர் இட்ட பொலிவின வாகி |
உரை
|
|
|
25 அரிபெய் புட்டில்
ஆர்ப்பக் கருவியொடு
மேலோர் உள்ளம் போல
நூலோர்
புகழப் பட்ட போர்வல்
புரவி
இகழ்தல் இன்றி ஏறிய
வீரர்
வெம்முரண் வீரமொடு தம்முள் தாக்கவும் |
உரை
|
|
|
30 போர்ப்பறை
முழக்கினும் ஆர்ப்பினும் அழன்று
கார்ப்பெயல் அருவியில் கடாஞ்சொரி
கவுள
கொலைநவில் பல்படை கொண்ட
மாட்சிய
மலைநிமிர்ந்து அன்ன மழகளிற்று
எருத்தில்
சிலையுங் கணையுஞ் சீர்ப்பமை வட்டும்
35 மழுவுங் குந்தமும் முழுமயிற்
பீலியும்
சங்கமுங் கணையமுஞ் சத்தியும்
வாளும்
பிண்டி பாலமும் பிறவும்
எல்லாம்
தண்டாக் கருவி தாந்துறை
போகிய
வண்டார் தெரியல் மறவர் மயங்கி
40 அருநிலம் அதிரத் திரிதரல்
ஓவா
வீதி வட்டமொடு ஆதிய
கதிவயின்
பாழி பயிற்றி நூழில் ஆட்டவும் |
உரை
|
|
|
போர்க்கள வட்டங் கார்க்கடல்
ஒலியெனக்
கடற்படைக் கம்பலை கலந்த காலை
45 மடற் பனை இடைத்துணி கடுப்பப்
பல்லூழ்
அடக்கரும் வேழத் தடக்கை
வீழவும்
வார்ப்பண் புதைஇய போர்ப்பமை
வனப்பின்
துடித்தலை போல வடித்தலை
அறவும்
சுற்றார் கருவில் துணியெனத் தோன்றி
50 அற்றம் இல்வால் அற்றன கிடப்பவும் |
உரை
|
|
|
சித்திரத் தாமரைப் பத்திரப்
பரூஉத்தொடி
நுதிமுக வெண்கோடு முதலற
எறிதலின்
செக்கர்க் குளிக்கும் வெண்பிறை
போல
உட்குவரு குருதியுள் ளுடன்பல வீழவும்
55 கார்முகக் கடுமுகில் ஊர்தி
யாக
விசும்பிடைத் திரிதரும் விஞ்சை
மாந்தரைக்
கடுந்தொழில் விச்சை கற்ற
மாற்றவர்
மறத்தால் நெருங்கி மற்றவர்
உடனே
நிறத்துஏ றுண்டு நிலத்துவீழ் வதுபோல்
60 மார்பின் வெம்படை ஆர
மாந்தி
வீர நோக்கினர் வேழமொடு வீழவும் |
உரை |
|
|
பூணேற்று
அகன்ற புடைகிளர்
அகலத்துத்
தாமேற்று அழுத்திய சத்தி
வாங்கிப்
புரைசை உய்த்த பொருகழல் காலினர்
65 வரைமிசை மறிநரின் மறப்படை
திருத்தி
வெம்முரண் வேழம் வீழ்த்து
மாற்றார்
தம்முயிர் நீங்கத் தாழ்ந்தனர் வீழவும் |
உரை |
|
|
அடுத்தெழு பெருந்திரை அகன்கடல்
நடுவண்
உடைத்த நாவாய்க் கடைத்தொடை தழீஇ
70 இடைத்திரைக்கு அணவரூஉம் எழுச்சி
ஏய்ப்ப
வாக்கமை பிடிவார் வலித்த
கையினர்
ஊற்றமில் புரவித் தாள்கழி
வாகிய
குருதிப் புனலிடைக் கருதியது
முடியார்
மாவொடு மறிந்து மயங்கி வீழவும் |
உரை |
|
|
75 அலைகடல் வெள்ள மலைய
ஊழி
உலக மாந்தரின் களைகண்
காணார்
ஒண்செங் குருதியில் செங்கணிப்
போரால் நீலக்
கொண்மூ நீர்த்திரைப்
பெய்வதோர்
கோலம் ஏய்ப்பக் கருந்தலை வீழவும் |
உரை |
|
|
80 கால்வல்
புரவியுங் கடுங்கண்
யானையும்
வேல்வல் இளையரும் விழுந்துகுழம்
பாகிய
அள்ளல் செஞ்சேறு உள்ளோர்
உழக்கலின்
துப்புநிலத்து எழுந்த துகளென
மிக்கெழுந்து
தந்தர விசும்பி னந்தியிற் பரப்பவும்
85 தெரிவருங் குணத்துத் திசைதொறும்
பொருந்தப்
போர்வலம் வாய்த்த பொங்குஅமர் அழுவத்து |
உரை |
|
|
வார்தளிர்ப் படலை வத்தவர்
பெருமகன்
எலிச்செவி அரசன் தம்பி
ஏறிய
கொலைப்பெருங் களிற்றின் எருத்தத்துப்
பாய்ந்தவன் 90 தம்முன்
காணத் தலைதுமித்
திடாது
நின்னின் முடியும்எம் கருமம்
ஈண்டுஎனக்
கடுத்த கட்டுரை எடுத்தனன்
கச்சின்
திண்டோள் கட்டிய வென்றி நோக்கி |
உரை |
|
|
ஒண்தார் மார்பன் கொண்டமை கண்டே
95 ஒருக்கி நிரல்பொரூஉம் உருமண்
ணுவாநம்
கருத்துவினை முடிக்குங் காலம்
இதுவென
வேக வெள்வேல் கேகயத்து
அரசனை
அடைதர்க வல்விரைந்து அமரார்
பெரும்படை
உடைவிடம் போல உண்டென உரையா |
உரை |
|
|
100 இருவருங் கூடி
எலிச்செவி அரசன்
பொருமுரன் படையொடு மயங்கிய
பொழுதவன்
அரணக் கருவி அழிய
வாங்கிக்
கரண வகையால் கண்இமைப்
பளவில்
மாசில் விழுச்சீர்க் கேகயத் தரசன்
105 ஆசில் பைந்தலை அரிந்துநிலஞ்
சேர
வீசிய வாளினன் விறலோர்ச் சவட்டி |
உரை |
|
|
வென்றோன் ஏறிய வேழஞ்
சார்ந்தவன்
ஆற்றல் தன்மையன் ஆதலின்
தம்பி
சிறைகொளப் பட்ட செல்லல் நோக்கி
110 உறைகழி வாளின் உருமண்
ணுவாவின் மத்த
யானை மருங்கில் குப்புற்று
ஒள்வாள் ஓக்கி எள்ளுநர்
ஒட்டிய
எம்பி உற்ற இன்னாச்
சிறைவிடின்
உய்ந்தனை யாகுதி அஞ்சல் நீயென
115 ஆர்ப்பக் கண்டே அடுதிறல் உதயணன் |
உரை |
|
|
தாக்கருந் தானைத் தருசகன்
தன்னொடு
வேற்றுமை இலன்இவன் போற்றினை
ஆயில் பெறற்கரு
நும்பியைப் பெறுதி
நீயெனத்
திறப்படக் கூறி மறப்படை நூறக் |
உரை |
|
|
120 கடும்புனல் நெருங்க
உடைந்துநிலை ஆற்றா
உப்புச் சிறைபோல் உள்நெகிழ்ந்து
உருகி
வெப்ப மன்னர் வீக்கஞ்
சாய
உடைந்துகை அகலஅவ ருரிமை
தழீஇக்
கடந்தலை கழித்துக் கடுவாய்
எஃகமொடு 125 இகலாள்
படுகளத்து அகலமர் ஆயத்து
உதயண குமரன் உற்றோர்
சூழ
விசய முரசொடு வியன்நகர்
அறிய
மகத மன்னற்கு உகவை போக்கலின் |
உரை |
|
|
கேட்டுப்பொருள் நல்கி வேட்டுவிரைந்து எழுந்து
130 வெற்றத் தானை முற்றத்துத்
தோன்றிப் பகைக்கடன்
தீர்த்த தகைப்பொலி
மார்பனைப்
பல்லூழ் புல்லி வெல்போர்
வேந்த
படைத்தொழில் மாற்றம் பட்டாங்கு உரைக்கென |
உரை |
|
|
எடுத்த பெரும்படை எழுச்சியு இறுதியும்
135 பரப்புஞ் சுருக்கும் பாழியும்
அறியான்
விலக்கவும் நில்லான் தலைக்கொண்டு
ஓடித்
தமரையுந் தீர்ந்து நமரையும்
நண்ணான்
கேள்அல் மன்னன் வாள்வாய்த்
துஞ்சி
மாக விசும்பின் இன்துயில்
ஏற்றனன் 140
கேகயத்து அரசன் எனவது கேட்டே |
உரை |
|
|
என்கடன் தீரேன் ஆயின்
ஏனவன்
தன்கடன் தீர்த்துத் தக்கது
ஆற்றினன்
என்பது கூறி அன்புநெகிழ்ந்து
உருகிப்
பேரா இடும்பையுள் ஆராய்ந்து அவனைக்
145 ரெரிப் படுத்துக் குறைவினை நீக்கி |
உரை |
|
|
மகதவர் இறைவனும் வத்தவ
மன்னனும் அகன்நகர்
புகுந்த காலை முகன்நக
மணிச்சுதைக் குன்றமும் மண்டபத்து
உச்சியும்
அணித்தகு மாடமும் அரும்பெறல் புரிசையும்
150 நிலைக்கால் ஏணியுந் தலைச்சிறந்து
ஏறி
இரும்பேர் உலகம் ஒருங்கியைந்
ததுபோல்
தெருவும் மன்றமும் திருமணல்
முற்றமும்
மலரணி முகத்து வந்துஇறை கொண்டு |
உரை |
|
|
கீழும் மேலுங் கேட்புழி எல்லாம்
155 வாழ்க மற்றிவ் வத்தவர்
பெருமகன்
என்நாடு இதுவன்று என்னான்
சென்றுழி
அந்நாட்டு இடுக்கணும் அச்சமும்
அகற்றும்
தத்துவ நெஞ்சத்து உத்தமன்
என்மரும்
வனப்பிற்கு ஏற்ற வலியும் விச்சையும்
160 சினப்போர் இவன்கே சேர்ந்தஎன்
போரும்
வஞ்சச் சூழ்ச்சியின் வணக்கின்
அல்லதை
அஞ்சாது இவனை அமர்வென்று
அழிக்கும்
வெஞ்சின வேந்தர்இங்கு இல்என் போரும் |
உரை |
|
|
ஆசில் செங்கோல் அவந்தியன் மடமகள்
165 வாசவ தத்தைஇவன் வலியொடு
புணர்ந்த
செருவடு தோள்மிசைச் சேர்ந்தனள்
வைகும்
திருவிலள் ஆதலின் தீப்பட்
டாள்எனப்
படுசொல் மாற்றம் தெளிந்த
பரிவினர்
தொடிகெழு தோளி திருஇழிப் போரும் |
உரை |
|
|
170 அலைகடல் ஞாலத்து
ஆக்கையொடு ஆருயிர்
நிலைநின்று அமையாது நிரைவளைத்
தோளி
துஞ்சியும் துஞ்சாள் தோள்நலம்
நுகர்ந்த
வெஞ்சின வேந்தன்அவள் விளிவு
முந்துறீஇப்
புன்கண் கூரப் புலம்புகொண்டு
ஆற்றான் 175
தன்நகர் துறந்து தலைமை
நீக்கிப்
பின்இவண் இரங்கப் பெற்றனள்
ஆதலின் அவளே
புண்ணியம் உடையள்என் போரும் |
உரை |
|
|
வலிகெழு நோன்தாள் வத்தவ
மன்னன்குத்
தருசகன் தங்கை தகைஏர் சாயல்
180 பத்திப் பைம்பூண் பதுமா
நங்கை
தக்கனள் கொடுப்பின் மிக்கதுஎன் போரும் |
உரை |
|
|
வேண்டி வந்த வேந்தனும்
வீய்ந்தனன்
ஈண்டுஇனி இவன்கே இயைந்த
பால்வகை ஆதலும்
உண்டுஅஃது அறிவோர் யாரென
185 வாயின் மிகுத்து வலித்துரைப் போரும் |
உரை |
|
|
பொன்அணி மார்பன் முன்னர் ஆற்றிய
நன்னர்க்கு உதவும் பின்உப காரம்
அலைதிரைப் பௌவம் ஆடை ஆகிய
நிலம்முழுது கொடுப்பினும் நேரோ என்மரும் 190
நகர மாக்கள் இவைபல பகர
மாசில் செங்கோல் மகத மன்னனொடு
கோயில்புக் கனனால் கோமகன் பொலிந்தென்.
(20.சங்கமன்னர் உடைந்தது முற்றிற்று)
|
உரை
|
|
|
|