| 24. மேல்வீழ் 
 வலித்தது   | 
 
 | இதண்கண் : உதயணனுக்குத் தருசகன் 
 விடை கொடுத்தலும், உதயணன் தருசகன்பால் கூறுதலும், உதயணன் செயலும், தம்பியருடைய வரவை 
 வயந்தகன் கூறலும், அது கேட்ட உதயணன் செயலும், படைகள் வருதலும், தம்பியர் உதயணனை 
 வணங்கிப் புலம்பிக் கூறுதலும், உதயணன் தம்பியரைத் தழுவிக் கூறுதலும், உதயணன் 
 அமைச்சர்களுடன் ஆராய்தலும், வருடகாரன் கூறுதலும், பட்டத் தேவியின் கலக்கமும், 
 குற்றேவல் மகளிரின் துயரமும், நகரத்தார் மகிழ்ச்சியும் கூறப்படும். | 
 
 |  | 
 
 |  | இருளிடை எழுந்த இகல்அடு 
 பெரும்படை அருளுடை வேந்தன் வழிதொடர்ந்து 
 ஒழியான்
 வான்தோய் பெரும்புகழ் வத்தவர் 
 இறைவன்குத்
 தேன்தோய்த்து அன்ன திருமொழி அளைஇ
 5     இடையறவு இல்லா இன்பமொடு 
 உயர்ந்த
 நன்குடைக் கேள்விமுதல் நின்கண் 
 தோன்றிய
 கலக்கமில் நிலைமையுங் கைம்மாறு 
 இல்லதோர்
 கிளைப்பெருந் தொடர்ச்சியும் பயந்தஇன்று 
 எமக்கென
 அற்புத்தளைக் கிளவி பற்பல பயிற்றிப்
 | உரை | 
 
 |  | 
 
 |  | 10     பீடுகெழு தானைப் 
 பிரச்சோ தனற்குக் கூடிய கிளைமைக் குணம்பல 
 கூறி
 ஓடுகால் இளையரை ஓலையொடு 
 போக்கின்
 நாடுவது அல்லது அவனும் 
 நம்மொடு
 தீது வேண்டா நிலைமையன் ஆகும்
 15    மலைத்தலைத் தொடுத்த மல்லல் 
 பேரியாற்றுத்
 தலைபெயல் மாரியில் தவிர்தல் 
 இன்றி
 நிலைக்களந் தோறுங் கொலைப்படை 
 விடுத்தபின்
 யானும் வேண்டின் வருகுவன் ஏனைச்
 | உரை | 
 
 |  | 
 
 |  | யானும் வேண்டின் வருகுவன் 
 ஏனைச் சேண்நில மன்னர் கேண்மை உடையோர்க்கு
 20    அறியப் போக்கின் அவர்களும் 
 வருவர்
 செறியச் செய்த குறியினிர் 
 ஆமின்
 நிலம்படக் கிடந்தநின் நேமிஅம் 
 தடக்கை
 வலம்படு வினைய ஆகெனப் 
 பல்லூழ்
 பொய்யா வாய்ப்புள் மெய்பெறக் கிளந்து
 25    திருவளர் அகலம் இருவருந் 
 தழீஇப்
 பிரியல் உற்ற தரிசகன்கு உரைக்கும்
 | உரை | 
 
 |  | 
 
 |  | இருமணம் எய்திய இன்பம் எல்லாம் உருமண் ணுவாவினை 
 உற்றதன் 
 பின்னை
 ஐம்முந் நாளின் அவனைச் சிறைவிடுத்து
 30    எம்முன் னாகத் தருதனின் 
 கடனென
 அமைச்சன் பெருமையும் அரசனது 
 ஆர்வமும்
 மனத்தின் உவந்து மகதவர் 
 கோமான்
 அதுஒருப் பட்டாங்கு அகன்ற பின்னர்
 | உரை | 
 
 |  | 
 
 |  | உதயண 
 குமரன் உரிமை தழீஇ 35    
 அடல்பேர் யானையும் அலங்குமயிர்ப் 
 புரவியும்
 படைக்கூழ்ப் பண்டியும் பள்ளி 
 வையமும்
 நடைத்தேர் ஒழுக்கும் நற்கோட்டு 
 ஊர்தியும்
 இடைப்படப் பிறவும் இயைந்தகம் 
 பெய்து
 கொடிப்படை போக்கிப் படிப்படை 
 நிறீஇப்
 40    புடைப்படை 
 புணர்த்துப் புள்ளில் போகி
 | உரை | 
 
 |  | 
 
 |  | மள்ளரொடு புணர்ந்த மாண்பிற் 
 றாகிக் கள்ளரொடு புணர்ந்த கட்டரண் 
 குறுகிப்
 போர்மேற் கொண்ட புகற்சியன் 
 புரவலன்
 ஆர்மேற் போங்கொல் அஞ்சுதக 
 உடைத்தெனச்
 45    சேனை 
 மன்னர் சிந்தையுள் தேம்ப
 வலிப்பது தெரிய ஒலித்துடன் 
 குழீஇ
 விட்டனன் இருந்த காலை ஒட்டிய
 | உரை | 
 
 |  | 
 
 |  | எழுச்சி வேண்டி யூகி விட்ட அருமறை ஓலை ஆய்ந்தனன் அடக்கி
 50    வரிமலர்ப் படலை வயந்தகன் உரைக்கும்
 | உரை | 
 
 |  | 
 
 |  | பின்னிணைக் குமரர் பிங்கல 
 கடகர் இன்னாக் காலை எள்ளி 
 வந்த
 பரும யானைப் பாஞ்சால 
 ராயன்
 அருமுரண் அழிய நூறலின் அவனமர்க்
 55    காற்றா ருடைந்து நோற்றோர் 
 ஒடுங்கும்
 குளிர்நீர் யமுனைக் குண்டுகயம் 
 பாய
 வளிஇயல் புரவி வழிச்செல 
 விட்டவர்
 பொன்னியல் புரிசையோர் பெண்உறை 
 பூமி
 அவண்எதிர்ப் பட்டாஅங்கு இவணகம் விரும்பாது
 60    ஈரறு திங்கள் இருந்த பின்றை
 | உரை | 
 
 |  | 
 
 |  | ஆரரண் நகர மாண்டனன் ஒழுகும் ஆருணி அரசன் வார்பிணி 
 முரசம்
 நிலனுடன் அதிர நெருப்பில் 
 காய்ந்து
 தலமுதற் கெடுநோய் தரித்தல் ஆற்றார்
 65    போந்தனர் போலும் புரவல 
 மற்றுநம்
 ஓங்கிய பெருங்குலம் உயர்தற்கு 
 உரித்தென்று
 ஆங்கவன் உரைப்ப அமர்படக் கடந்த
 | உரை | 
 
 |  | 
 
 |  | தடக்கை கூட்டித் தாங்கா 
 உவகையொடு படைப்பெரு வேந்தன் பல்ஊழ் புல்லி
 70    இருவயின் உலகம் இயையப் 
 பெற்ற
 பெருமகன் போல உவகையுள் 
 கெழுமிப்
 பொருமுரண் அண்ணல் புகன்ற பொழுதில்
 | உரை | 
 
 |  | 
 
 |  | பாடுபெறு சிறப்பின் பைந்தார் 
 மன்னன் சேடுபடு அத்தம் சேர்வது பொருளென
 75    அறியக் கூறிய குறிவயின் 
 திரியார்
 முன்னீ ராயினு மகந்துடன் 
 புகுவோர்
 பன்னீ ராயிரம் படைத்தொழில் 
 இளையரொடு
 அற்றக் காலைக்கு அமைக்கப் 
 பட்ட
 கொற்றத் தானையும் குழூஉக்கொண்டு ஈண்டத்
 | உரை | 
 
 |  | 
 
 |  | 80    தப்பினார் என்ற 
 தம்பியர் வந்துஅவன் பொற்கழல் சேவடி பொருந்தப் 
 புல்லி
 ஓர்த்தனந் தேறி உறுதிநோக் 
 காது
 சேர்த்தியில் 
 செய்கையொடு சிறைகொளப் 
 பட்டுப்
 பெருங்குடி ஆக்கம் பீடற வெருளி
 85    அருங்கடம் பூண்ட அவியாக் 
 காதலொடு
 பயந்தினிது எடுத்த படைப்பருங் 
 கற்பினம்
 கொற்ற இறைவிக்குக் குற்றேல் 
 பிழையாது
 ஒருங்கியாம் உறைதல் ஒழிந்ததும் அன்றி
 | உரை | 
 
 |  | 
 
 |  | இருங்கடல் வரைப்பின் இனியோர் எடுத்த 90    இறைமீக் கூறிய விராமன் 
 தம்பி
 மறுவொடு பெயரிய மதலைக்கு 
 இயைந்த
 ஆனாப் பெரும்புகழ் யாமும் 
 எய்தத்
 தேனார் தாமரைத் திருந்துமலர்ச் 
 சேவடி
 வழிபாடு டாற்றலும் வன்கணின் நீத்தனெம்
 | உரை | 
 
 |  | 
 
 |  | 95    கழிபெருஞ் 
 சிறப்பின் காவல் வேந்தே இம்மை என்பது எமக்குநெறி 
 இன்மையின்
 முன்னர்ப் பிறப்பின் மூத்தோர்ப் 
 பிழையாது
 உடன்வழிப் படூஉம் உறுதவம் 
 இல்லாக்
 கடுவினை யாளரேம் யாம்எனக் கலங்கிப்
 100    பொள்ளெனச் சென்னி பூமி 
 தோய
 உள்ளழல் வெம்பனி உகுத்தரு 
 கண்ணீர்த்
 துன்பமொடு இறைஞ்சிய தம்பியர்த் தழீஇ
 | உரை | 
 
 |  | 
 
 |  | இருபான் மருங்கினும் திரிதரும் 
 கண்ணின் அழல்திரண் டன்ன வாலி சோர்ந்துஅவர்
 105    குழல்திரண்டு அணவருங் கோல 
 எருத்தின்
 பல்ஊழ் தெறித்துஎழப் புல்லி 
 மற்றுநும்
 அல்லல் காண்பதற்கு அமைச்சுவழி 
 ஓடாப்
 புல்லறி வாளனேன் செய்தது 
 நினைஇக்
 கவற்சி வேண்டா காளைகள் இனியென
 | உரை | 
 
 |  | 
 
 |  | 110    அகத்துநின்று எழுதரும் 
 அன்பில் பின்னிக் குளிர்நீர் நெடுங்கடல் கொண்ட 
 அமிழ்தென
 அளிநீர்க் கட்டுரை அயல்நின் 
 றோர்க்கும்
 உள்ளம் பிணிப்ப ஒன்ற 
 வுரைத்தினி
 எள்ளும் மாந்தர் எரிவாய்ப் பட்ட
 115    பன்னற் பஞ்சி அன்னர் 
 ஆகென
 வெகுளித் தீயில் கிளைஅறச் 
 சுடுதல்
 முடிந்தது இந்நிலை முடிந்தனர் அவரெனச்
 | உரை | 
 
 |  | 
 
 |  | முடிந்தது இந்நிலை முடிந்தனர் 
 அவரெனச் செப்பிய மாற்றம் பொய்ப்பது 
 அன்றால்
 பொரக்குறை இலம்என இரப்ப இன்புற்று
 120    இளையோர் தம்மோடு ஈன்றவள்கு 
 இரங்கிக்
 களைகண் ஆகிய காதல்அம் 
 தோழனை
 வளைஎரிப் பட்ட தெளிபேர் 
 அன்பின்
 தளைஅவிழ் கோதையொடு தருதலும் 
 பொருளோ
 நும்மைத் தந்துஎன் புன்மை நீக்கிய
 125    உம்மைச் செய்த செம்மைத் 
 தவத்தன்எனத்
 தம்பியர் தாமரைத் தடங்கண் 
 சொரியும்
 வெம்பனி துடைத்துப் பண்புளி 
 பேணிக்
 கண்ணுற வெய்திய கருமம் 
 போல
 மண்ணுறு 
 செல்வம் நண்ணும் நமக்கென
 | உரை | 
 
 |  | 
 
 |  | 130    அன்னவை கிளந்த 
 பின்னர்த் தன்னோடு ஒன்னாற் கொள்ளும் உபாயம் 
 நாடி
 வருட காரனொடு இடவகன் 
 தழீஇ
 அளப்பருங் கடுந்திறல் ஆருணி 
 ஆருயிர்
 கொளப்படும் முறைமை கூறுமின் எமக்கென
 | உரை | 
 
 |  | 
 
 |  | 135    வருட காரன் 
 வணங்கினன் கூறும் இருளிடை மருங்கின் விரைவனர் 
 ஓடி
 அற்றம் இதுவென ஒற்றர் 
 காட்டிய
 நீள்நிலை நெடுமதில் ஏணி 
 சாத்தி
 உள்ளகம் 
 புக்கு நள்ளிருள் நடுநாள்
 140    முதுநீர்ப் பௌவம் கதுமெனக் 
 கலங்கக்
 கால்வீழ் வதுபோல் மேல்வீழ் 
 மாத்திரம்
 விள்ளாப் படையொடு வேறுநீ 
 இருப்பக்
 கொள்ளா வேந்தனைக் கோயிலொடு முற்றிச்
 | உரை | 
 
 |  | 
 
 |  | சேவக 
 நிலைஇக் காவல் தோறும் 145    ஆறுஈ ராயிரம் அறியப் 
 பட்ட
 வீரரை விடுத்துப் போர்செயப் 
 போக்கித்
 துயிலும் பொழுதில் துளங்கக் 
 குப்புற்று
 அயிலுறு 
 வெம்படை அழல 
 வீசிக்
 கதுவாய் 
 எஃகமொடு கடைமுதல் தோறும்
 150    பதுவாய்க் காப்புறு படைத்தொழில் 
 இளையரைப்
 பாயல் அகத்தே சாய நூறி
 | உரை | 
 
 |  | 
 
 |  | மாவும் வேழமும் மாமணித் 
 தேரும் தானைக் கொட்டிலொடு ஆணக் 
 காப்பமைத்து
 ஒன்னார்க் கடந்த உதயணன் வாழ்கென
 155    இன்னாச் செய்தெம் எழில்நகர் 
 வௌவிய
 குடிப்பகை யாளர் அடைத்தகத் 
 திராது
 பெண்பாற் பேரணி நீக்கித் 
 திண்பாற்
 போரொடும் 
 ஒன்றிற் போதுமின் 
 விரைந்தெனக்
 காரொலி முழக்கின் கடுத்தனம் ஆர்ப்பக்
 | உரை | 
 
 |  | 
 
 |  | 160    கதுமென நிகழ்ந்த 
 கலக்கமொடு கல்என மதிதவழ் புரிசை வளநகர் 
 கலங்கப்
 பெருமழை நடுவண் இருளிடை 
 எழுந்ததோர்
 கடுவன் போலக் காவலனன் 
 உரறி
 மகிழ்ச்சி எய்தி மாற்றோர் இல்லெனும்
 165    இகழ்ச்சி ஏதந் தலைத்ததுஎனக்கு 
 இன்றெனக்
 கவலை 
 கூராக் கலங்கினன் எழவும்
 | உரை | 
 
 |  | 
 
 |  | எழுந்த மன்னன் செழும்பூண் 
 அகலத்து ஈர்நறுஞ் சாந்தத் தாரொடு 
 குழையப்
 பரத்தையர்த் தோய்ந்தநின் பருவரை 
 அகலம்
 170    திருத்தகைத்து 
 அன்றால் தீண்டுதல் 
 எமக்கெனப்
 புலவியின் நடுங்கிப் பூப்புரை 
 நெடுங்கண்
 தலைஅளிச் செவ்வியின் அமர்ப்பன 
 இமைப்ப
 ஆற்றா அனந்தரொடு அசைந்த 
 இன்துயில்
 கூற்றார்ப் பிசைப்புஇதுஎன் என்றனள் வெரீஇ
 | உரை | 
 
 |  | 
 
 |  | 175    விசைப்புள் வெங்குரல் 
 இசைப்பக் கேட்ட நாகப் பெதும்பையின் நடுங்கி 
 ஆகத்
 துத்தியுந் தொடரும் முத்தொடு 
 புரள
 ஒளிக்காசு ஒருபால் தோன்றத் 
 துயிற்பதத்து
 அசைந்த அந்துகில் கையகத்து அசைய
 180    நெகிழ்ந்த நீரில் கண்கை 
 யாக
 முகிழ்ந்த முலைமுதல் முற்றத்து 
 இயைந்த
 தருப்பை பொன்கொடி யாக 
 இரக்கமொடு
 ஓருயிர்க் கணவற்கு நீர்உகுப் 
 பனள்போல்
 முகங்கொள் காரிகை மயங்கல் கூராச்
 | உரை | 
 
 |  | 
 
 |  | 185    சீரலங் காரச் 
 சித்திர முடிமிசைத் தாரணி கோதை தாழ்ந்துபுறத்து 
 அசைய
 உற்றதை அறியா தெற்றென 
 இரங்கி
 ஆவி வெய்துயிர்ப்பு அளைஇஅகம் 
 உளைவனள்
 தேவி திருமகன் தானை பற்றி
 190    ஆகுலப் பூசலின் அஞ்சுவனள் எழவும்
 | உரை | 
 
 |  | 
 
 |  | அருமணி 
	திகழும் ஆய்பொன் மாடத்துத் திருமணிக் கட்டில் பாகத்து அசைந்த
 உழைக்கல மகளிர் உள்ளழல் ஊர்தரக்
 குழைக்கணி கொண்ட கோல வாண்முகத்து
 195    
	அரிபரந்து அலமரும் அச்சுறு கண்ணினர்
 வெருவுறு பிணையின் 
	விம்மாந்து எழாஅப்
 பட்டதை 
	அறியார் பகைப்புல வேந்தன்
 கெட்டுஅகன் றனனால் மற்றிது என்னெனக்
 கோயில் மகளிர் ஆகுலப் 
	பூசலொடு
 200    வாயிலுந் தகைப்பும் 
	அறியார் மயங்கவும்
 | உரை | 
 
 |  | 
 
 |  | நகரம் எல்லாம் முழுவதும் 
 அறிந்து திருவார் மார்பின்எம் பெருமான் 
 உதயணன்
 கூற்றிடம் புக்கு மீட்டும் 
 வந்தனன்
 நம்பொருட் டாக நகரம் உற்றனன்
 205    அமைச்சருந் தானும் அமைத்த 
 கருமம்
 முடித்தனன் ஆகலின் முற்றவம் 
 உடையம்
 அன்றிஈன் வாரான் ஆதலின் 
 எங்கோன்
 வென்றி எய்துதல் வேண்டுதும் 
 நாமென
 வெருப்பறை கொட்டி உருத்துவந்து ஈண்டி
 210    நமக்குப்படை யாகி மிகப்புகுந்துஎற்றவும்
 | உரை | 
 
 |  | 
 
 |  |             
 இன்னோர் அனையன இன்னா 
 வெய்துறஒன்னா மன்னனை உயிருடன் 
 பருகுதும்
 இந்நிலை அருளென எண்ணினன் 
 உரைப்ப
 அந்நிலை நோக்கி மன்னனும் உவந்து
 215    பொருத்தம் உடைத்தென ஒருப்பாடு 
 எய்திப்
 புள்ளும் இல்லா வொள்ளொளி 
 இருக்கையுள்
 மறைபுறப் படாஅச் செறிவினர் 
 ஆகி
 உளைப்பொலி மான்தேர் உதயண 
 னோடு
 வலித்தனர் 
 மாதோ வளைத்தனர் கொளஎன்.
 (24. மேல்வீழ் வலித்தது 
 முற்றிற்று)
 | உரை | 
 
 |  |  |  |