27. பறை
விட்டது
|
இதன்கண் : கால்வல் இளைஞர்
ஆருணிக்குக் கூறுதலும், வருடகாரன் செயலும், ஆருணியின் உட்கோளும், வருடகாரன் செயலும்,
உதயணன் செயலும், ஆருணியின் மனநிலையும், தீய நிமித்தங்கள் தோன்றுதலும் பூரண குண்டலன்
கூற்றும், வருடகாரன் கூற்றும், ஆருணியின் செயலும், போர் நிகழ்ச்சியும், உதயணன்
செயலும், ஆருணியின் செயலும், கடகபிங்கலர் செயலும், ஆருணியின் கூற்றும், உதயணன்
செயலும், ஆருணியின் செயலும், உதயணன் செயலும், உதயணன் தருமதத்தன் ஆருணிஅரசனைக்
கொல்லலும், உதயணன் செயலும், வருடகாரன் செயலும், நகரமாந்தர் கூறுதலும், யாவரும்
நகர்புகுதலும் விரிவாகக் கூறப்படும். |
|
|
பெருஞ்சிறப்பு எய்தியவன் இருந்த
செவ்வியுள்
வண்டார் தெரியல் வருட
காரனின்
பண்டே பயிர்குறிக் கொண்டுநன்
கமைந்த
கால்வல் இளையர் பூசல் வாயா
5 வேல்வல் வேந்தன் விரும்புபு
கேட்ப
வடுவில் பெரும்புகழ் வத்தவன்
மந்திரி
இடவகன் பணியின் ஏழா
யிரவர் சவரர்
புளிஞரும் குவடுஉறை குறவரும்
குறுநில மன்னரும் நிறைவனர் ஈண்டி
10 வஞ்ச காந்தையொடு கந்த
வதிஎனும்
குளிர்புனல் பேரியாறு கூடிய
எல்லையுள்
நளிபுனல் நாட்டகம் நடுங்கக்
கவர்ந்துஆண்டு
ஒளிதரும் இருக்கையின் ஒடுங்கினர் தாமெனப் |
உரை
|
|
|
பைந்தளிர்ப் படலைப் பாஞ்சால ராயற்கு
15 வந்துகண் கூடிய வருட
காரன்
அருளிக் கேண்ம்எனத் தெருளக்
கூறும் மாரிப்
பெரும்புனல் வருவாய்
அடைப்பின்
ஏரிப் பெருங்குளம் நீர்நிறை
இலவாம்
அற்றே போலப் பற்றா மன்னற்குத்
20 தலைவரும் பெரும்படை தொலைய
நூறில்
சுருக்கம் அல்லது பெருக்கம் இல்லை
|
உரை
|
|
|
கல்லிடை இட்ட காட்டகம்
கடந்து
வெள்ளிடைப் புகுந்த வேட்டுவப்
படையினை
ஆட்டுதும் சென்றென அத்திசை மருங்கினும்
25 வாள்படை வகுத்துச் சேண்படப்
போக்கி
மறுத்தும் உரைத்தனன் மன்னவன் கேட்ப |
உரை
|
|
|
வெறுத்த வேந்தனை வெற்பிடை
முற்றி
நாற்பெரும் படையும் நம்புறஞ்
சூழ
மேற்படை நெருங்கு காலை மாற்றவன்
30 சில்படை யாளரொடு செல்படை
இன்றிக் கூழ்பட
அறுப்பப் பாழ்படப்
பாய்ந்து
பற்றிய படைஞரும் அப்பாற்
படர்தர
உற்றது செய்தல் உறுதி உடைத்தென |
உரை
|
|
|
இயற்கை யாக வென்தொழில் மாட்டுஇவன்
35 முயற்சி உடைமையின் முடிக்குவன்
தானெனப்
பெயர்த்தும் மவற்கோர் பெருஞ்சிறப்பு
இயற்றிச்
சொல்லிய எல்லாம் நல்குவனன்
ஆகித்
தன்படை சிறிதே ஆயினும்
இவன்படை
என்படை என்னும் எண்ணம் உண்மையின்
40 எழுதும் என்றவன் மொழியா மாத்திரம் |
உரை
|
|
|
கருதியது
எல்லாங் கால்வல்
இளையரின்
உருவ வெண்குடை உதயணற்கு உணர்த்த் |
உரை
|
|
|
அடற்கரும் பெரும்படை அற்றப்
படாமைப்
படுப்பதோர் வாயில் பாங்குற நாடி
45 வெம்பரி மான்தேர்த் தம்பியர்த்
தழீஇ
மதில்வடிவு ஆகிய மலைப்புடை
மருங்கே
அதிர்குரல் வேழமும் புரவியும்
அடக்கி
அவற்றுமுன் மருங்கே அகற்றுதற்கு
அரிய
ஒள்வாள் பெரும்படை உள்ளுற அடக்கி
50 அப்படை மருங்கே அயில்படை நிறீஇத் |
உரை |
|
|
தரும
தத்தனைப் பெருமுகம்
பெய்தவன்கு
எருத்துப்புடை யாக இடவகன்
கொளீஇயவன்
உருத்தெழு பெரும்படைக் கோடுபுறம்
காட்டிப்
பவட்த்தொழு வாரியின் இடைப்படப்
புகுத்தி 55 உருள்படி
போல வருட
காரன்
போக்கிடம் இன்றி யாப்புற அடைப்ப |
உரை |
|
|
இருங்கணி
காரன் எண்ண
மாக
வரம்பணி வாரியுள் வந்துடன்
புகுந்த
அருந்திறல் ஆருணி என்னும் யானையைப்
60 படைக்கலப் பாரம் பற்பல
சார்த்தி
இடுக்கண் யாம்செய இயைந்தது
இன்றென
வாரிப் பெரும்படை மற்றவண்
வகுத்து
நேரா மன்னனை நீதியில்
தரீஇப்
போரில் கோடற்குப் புரிந்துபடை புதையா
65 வார்கழல் நோன்றாள் வத்தவன் இருப்ப |
உரை |
|
|
வாய்த்த
சூழ்ச்சி வருட
காரனொடு
யாத்த நண்பினன் யானென
ஆருணி
மேற்சென்று அழித்தல் மேயினன் விரும்ப |
உரை |
|
|
அந்தமில்
ஆற்றல் அலவந்தியன் யானை
70 வெந்திறல் நளகிரி தன்படி
வாகும்
மந்தரம் என்னும் மத்த
யானை
நீல நெடுவரை நெற்றித்
தாகிய
கோலக் கோங்கின் கொழுமலர்
கடுப்புறு
சூறைக் கடுவளி பாறப் பறந்தெனப்
75 பட்டம் அடுத்த கொட்டையொடு
பாறவும்
உருமுறழ் முரசின் கண்கிழிந்து
அதனொடு
சக்கர நெடுங்கொடி அற்றன
ஆகி
இருநில மருங்கில் சிதைவன
வீழவும்
புள்ளும் நிமித்தமும் பொல்லா வாகி |
உரை |
|
|
80 விள்ளா நண்பின்
விறலோன்
அமைச்சன்
பூரண குண்டலன் தாரணி
மார்ப
பெயர்த்தும் நகரம் புகுதும்
இந்நாள்
அகைத்தது அறிந்தனை அருண்மதி
நீயேன்று
அடையார்க் கடந்து தடைபாடு அகற்றிய
85 அறிந்துபடை விடுப்பது அன்னது
பொருளெனச்
செறிந்த தாகச் செப்பலில் சீறிக் |
உரை |
|
|
கொள்ளார் அழிவினைக் கூறும்
இவையென
வள்ளிதழ் நறுந்தார் வருட
காரன்
ஊக்கங் கொளுவ ஆக்கங் கருதி |
உரை |
|
|
ஊக்கங்
கொளுவ ஆக்கங் கருதி 90
ஆருணி யரசன் அடற்களிறு
கடாஅய்க்
காரணி முகிலிடைக் கதிரொளி
கரந்து
மங்கும் அருக்கனின் மழுங்குபு
தோன்றச்
சங்கமும் முரசுஞ் சமழ்த்தன
இயம்பப்
பொங்குநூல் படாகையொடு வெண்கொடி நுடங்க
95 நிரந்த பெரும்படை பரந்தெழுந்து
ஓடி
மாற்றோன் இருந்த மலையகம் அடுத்துக் |
உரை |
|
|
கூற்றாய்
எடுத்த கோல விற்படை
காற்றிசை மருங்கினுங் கார்த்துளி
கடுப்பக்
கடுங்கணை சிதறிக் கலந்துடன் தலைப்பெய
100 நடுங்கினர் ஆகி உடைந்துபுறங்
கொடுத்துப்
பொறிப்படை புதைந்த குறிக்களம்
புகலும்
எண்திசை மருங்கினும் இயமரத்
தொலியொடு
விண்தோய் வெற்பொலி விரவுபு
மயங்கி
ஆர்ப்பிசை அரவமும் போர்க்களிற்று
அதிர்ச்சியும் 105
கார்க்கடல் ஒலியெனக் கலந்துடன் கூடித் |
உரை |
|
|
திமிரம்
பாய்ந்த அமர்மயங்கு
அமயத்துச்
சிலைத்தன தூசி மலைத்தன
யானை
ஆர்த்தனர் மறவர் தூர்த்தனர்
பல்கணை
விலங்கின ஒள்வாள் இலங்கின
குந்தம் 110 விட்டன
தோமரம் பட்டன
பாய்மாத்
துணிந்தன தடக்கை குனிந்தன
குஞ்சரம்
அற்றன பைந்தலை இற்றன
பல்கொடி
சோர்ந்தன பல்குடர் வார்ந்தன
குருதி
குழிந்தது போர்க்களம் எழுந்தது செந்துகள்
115 அழிந்தன பூழி விழுந்தனர் மேலோர் |
உரை |
|
|
இப்படி
நிகழ்ந்த காலை
வெப்பமொடு
பெரும்படைச் செற்றத்து இருங்கடன்
மாந்திக்
குஞ்சரக் கொண்மூக் குன்றுஅடைந்து
குழீஇக்
காலியல் இவுளிக் கடுவளி
ஆட்ட 120 வேலிடை
மிடைந்து வாளிடை மின்னக்
கணைத்துளி பொழிந்த கார்வரைச்
சாரல்
ஒருபெருஞ் சிறப்பின் உதயண
குமரன்
பொருபடை உருமில் பொங்குபு தொடரத் |
உரை |
|
|
தாரணி மார்பன் ஆருணி யரசனும்
125 காந்தா ரகனுங் கழற்கால்
சாயனும் தேந்தார்ச்
சூரனும் திறல்பம
சேனனும்
இந்நால் தலைவரும் எரிகான்று
எதிர்ப்பச்
செந்நே ராகச் செல்வுழி எதிரே |
உரை |
|
|
காந்தா
ரகனைக் கடக பிங்கலர்
130 தேந்தார் மார்பம் திறப்ப
வெய்ய
ஆழ்ந்த அம்போடு அழிந்தனன்
ஆகி
வீழ்ந்தனன் அவனும் வீழ்ந்த பின்னர் |
உரை |
|
|
பெய்கழல்
ஆருணி பிறந்த
நாளுள்
செவ்வாய் விருச்சிகஞ் சென்றுமேல் நெருங்க
135 ஆற்றல் சான்ற வடல்வேல்
ஆருணி
ஏற்றோர் யாவர் ஈண்டுவந்து எதிர்க்கெனச் |
உரை |
|
|
சீற்றத் துப்பில் சேதியர்
பெருமகன்
கழலணி காலினன் கரண
யாப்பினன்
நிழலணி நல்வாள் அழல வீசித்
140 தாங்கருங் காதல் தம்பியர்
சூழப்
பூங்கழல் தோழர் புடைபுடை
ஆர்தர
ஒன்னாப் பகையான் உதயணன்
என்பேன்
இன்னா மன்ன நின்னுயிர்
உணீஇய
வந்தனென் என்றே சென்றுமேல் நெருங்க் |
உரை |
|
|
145 இடுகளி யானை
எதிர்கண்
டாங்குஉருத்து
அடுதிறல் ஆருணி அவனுரை
பொறாஅன்
பன்மயிர் அணிந்த பத்திச்
சேடகம்
மின்னொளிர் வாளொடு பின்னவன் வாங்கக் |
உரை |
|
|
காதி
வெவ்வினை கடையறு காலைப்
150 போதி பெற்ற புண்ணியன்
போல வீதல்
சான்ற வெகுளி முந்துறீஇ
எதிர்த்த மன்னனைச் செயிர்த்தனன்
தலைப்பெய்து
யாவரும் வேண்டா இதன்பின்மற்று
இவனை
வீய நூறி வெஞ்சினந்
தணிகென 155 ஏயர்
பெருமகன் எதிர்வது விரும்ப் |
உரை |
|
|
வேற்று வேந்தனை வீழ
நூறுதல்
மாற்றாது எனக்கு மன்ன
அருளெனக்
கருமம் ஆதல் காரணங் காட்டித்
தரும தத்தன் என்னுங் கடுந்திறல்
160 அருமுரட் கலுழனின் ஆர்த்துமேல்
ஓடிப்
பொருமுரண் அழிக்கும் புனைபடை பயிற்றி
இமைப்போர் காணா இகல்தொழில்
திரிவொடு
பலர்க்குப் பதமின்றிப் பாஞ்சால
ராயனைத்
தனக்குப் பதமாகத் தலைப்பெய்து ஏற்றலின் |
உரை |
|
|
165 வார்கவுள்
வேழமும் வசத்தது
அன்றியவன் ஊர்வழிச்
செல்லாது ஒல்குபு
நிற்றரக்
கூர்கெழு வச்சிரங் கொண்டு
வானவன்
கார்கெழு மாமலைக் கவின்அழித்
ததுபோல்
தாரணி மார்பன் யானையை
வீழாக் 170
கனல்சொரி மலையின் கவிய
நூறித் தார்கெழு
மார்புந் தலையுந்
தகர
முடிஅணி ஆரம் முத்துநிரை
துளங்கத்
தொடிஅணி திண்தோள் துணிந்துநிலஞ்
சேரப்
பணிவிலன் எறிதலின் படைக்கலஞ் சோரத் |
உரை |
|
|
175 தறுகண் இமையான்
தருக்கினொடு உறுதியேய்பு
இறுமுனை மருங்கின் ஏடுபடத்
திருகி
மான்முதல் வகையின் நான்மறை
யாளன்
மழுவேறு உண்ட மன்னவன்
போலக்
கொழுநிணக் குருதியுள் குஞ்சரத் தோடும்
180 அழிவுகொண்டு ஆருணி அவிந்தனன் வீழ்தலின் |
உரை |
|
|
கொற்றம்
பெற்றனன் குருகுலத்து
இறையென
வெற்றி முரசம் வேழம்
ஏற்றி
நகரினும் நாட்டினும் பகர்வனர்
அறைகெனப்
பின்னுரை போக்கி ன்னான்
குறுகிப் 185
படைத்தொழில் வதுவை நம்மாட்டு
எய்த
முடித்தனன் என்று சமழ்த்தனன்
நோக்கி
நடுக்கமில் வேந்தனை நாமும்
முன்னின்று
அடக்கற் பாலம்என்று யாழறி
வித்தகன்
அமரார் புகழத் தமரின்
அடக்குவித்து 190
ஈமம் ஏற்றியவன் உரிமைச்
சனத்திற்கு ஏமம்
ஈகென்று றிடவகன் போக்கி |
உரை |
|
|
வரிகழழ் நோன்தாள் வருட
காரன்
இரியல் படையொடு இயைந்துஒருங்கு
ஈண்டிக்
கொடிக்கோ சம்பிக் கொற்ற
வாயில் 195
அடுத்தனன் குறுகி அஞ்சன்மின்
யாவிரும்
வடுத்தீர் பெரும்புகழ் வத்தவர்
கோமான்
படுத்தனன் கண்டீர் பாஞ்சால
ராயனை
அடைத்தனிர் வையாது அகற்றுமின் கதவென |
உரை |
|
|
நகரத்
தாளர் புகரறக் கூறுவர் 200
தொல்வழி வந்தஎம் பெருமகன்
எழுதிய
வெல்பொறி ஓலை விடுத்தபின்
அல்லது
புகுதர விடோம்இந் நகர்வயின் யாமென |
உரை |
|
|
உடன்அயிர்ப்பு இரிய உதயணன்
மந்திரி
இடவகன் வந்தமை இசைத்தலும் விரும்பிக்
205 கொடியும் படாகையும் வடிவுபட
உயரிச்
செறிந்த கதவம் திறந்தனர் எதிர்கொள |
உரை |
|
|
வென்றியொடு புக்கு நின்ற
மறவருள்
தலைவன் ஆகிய தொலைவில்
விழுச்சீர்ப்
பாடுசால் சிறப்பின் பாஞ்சால
ராயன் 210 கண்மணி
அன்ன திண்அறி
வாளன்
கும்பன்என் போனை வெம்ப நூறி |
உரை |
|
|
இன்று மற்றுஇங்கு இவன்தமர்
உளரெனில்
குன்றார் அவரைக் கோறும்
நாமெனக்
கழிப்புறு வெள்வாள் தெழித்தனர் உரீஇ
215 ஒழுக்கஞ் சான்றோர் பிழைப்பிலர்
ஓம்ப மலைத்தொகை
அன்ன மாட வீதியுள்
சிலைப்பொலி தடக்கைச் சேதியன்
வாழ்கென
அலைகடல் வையம் அறிய
எங்கும்
பிறைமருப்பு யானைப் பிணர்எருத்து
ஏற்றிப்
220 பறைவிட்டு அன்றால் பகைமுதல் அறுத்துஎன்.
27.
பறை விட்டது முற்றிற்று
மூன்றாவது
மகத காண்டம் முற்றுப் பெற்றது.
|
உரை |
|
|
|