2. நாடு
பாயிற்று
|
இதன்கண் : உதயணமன்னன் அரசுகட்டிலேறிய பின்னர்க்
குடிமக்களுக்குஇருந்த குறைகளைப் போக்கித் தன் ஆட்சியைப் பரப்பியது கூறப்படும். |
|
|
விளங்குஅவை நடுவண் வீற்றினிது
இருந்த
வளங்கெழு தானை வத்தவர்
பெருமகன்
வெங்கோல் வேந்தன் வேற்றுநாடு
இதுவெனத்
தன்கோல் ஓட்டித் தவற்றின்
நாட்டிய 5
புன்சொல் படுநுகம் புதியவை
நீக்கிச்
செங்கோல் செல்வம் சிறப்ப
ஓச்சி
நன்னகர் அகத்து நாட்டக
வரைப்பினும்
தொன்மையின் வந்த தொல்குடி எடுப்பிப் |
உரை
|
|
|
தொன்மையின்
வந்த தொல்குடி
எடுப்பிப்
படிறு நீக்கும் படுநுகம் பூண்ட
10 குடிகட்கு எல்லாம் குளிர்ப்பக்
கூறித்
திருந்திய சிறப்பின் தேவ
தானமும்
அருந்தவர் பள்ளியும் அருகத்
தானமும்
திருந்துதொழில் அந்தணர் இருந்த
இடனும்
தோட்டமும் வாவியும் கூட்டிய நல்வினை
15 ஆவணக் கடையும் அந்தியுந்
தெருவும்
தேவ குலனும் யாவையும்
மற்றவை
சிதைந்தவை எல்லாம் புதைந்தவை
புதுக்கென்று
றிழந்த மாந்தரு மெய்துக
தமஎனத்
தழங்குரல் முரசம் தலைத்தலை அறைகெனச் |
உரை
|
|
|
20 செல்வப்
பெரும்புனல் மருங்குஅற
வைகலும்
நல்கூர் கட்டழல் நலிந்துகை
அறுப்ப
மானம் வீடல் அஞ்சித்
தானம்
தளராக் கொள்கையொடு சால்பகத்து
அடக்கிக்
கன்னி காமம் போல உள்ள
25 இன்மை யுரையா விடுக்கண் ஆளிரும் |
உரை
|
|
|
ஊக்கமும் வலியும் வேட்கையும்
விழைவும்
மூப்புஅடர்ந்து உழக்க முடங்கி
னீரும்
யாப்பணி நன்னலம் தொலைய
அசாஅய்த்
தீப்பிணி உற்றுத் தீரா தீரும் |
உரை
|
|
|
30 இடுமணல் முற்றத்து
இன்இயம்
கறங்கக்
குடுமிக் கூந்தலுள் நறுநெய்
நீவி
நல்லவை நாப்பண் பல்சிறப்பு
அயர்ந்து
கொண்டேன் துறந்து கண்கவிழ்ந்து
ஒழுக
வாழ்தல் ஆற்றாச் சால்புஅணி மகளிருமி |
உரை
|
|
|
35 நிறைப்பெருங்
கோலத்து நெறிமையின்
வழாஅ
உறுப்புக் குறை பட்டீர் உட்படப்
பிறரும்
வந்தனிர் குறுகி நுங்குறை
உரைத்துத்
துன்பம் நீங்க வின்பம்
பயப்ப
வேண்டின கொள்ளப் பெறுதிர் நீரென
40 மாண்ட வீதியொடு மன்றம்
எல்லாம்
ஆர்குரல் முரசம் ஓவாது அதிரக் |
உரை
|
|
|
கோடி
முற்றி நாள்தொறும்
வருவன நாடும்
நகரமும் நளிமலை
முட்டமும்
உள்கண்டு அமைந்த கொள்குறி நுகும்பில்
45 கணக்கருந் திணைகளும் அமைக்கும்முறை
பிழையாது
வாயில் செல்வம் கோயிலுள் கொணரப |
உரை |
|
|
போரின் வாழ்நரும் புலத்தின்
வாழ்நரும்
தாரின் வாழ்நரும் தவாஅப்
பண்டத்துப்
பயத்தின் வாழ்நரும் படியில்
திரியா 50 ஓத்தின்
வாழ்நரும் ஒழுக்கின்
வாழ்நரும்
யாத்த சிற்பக் கயிற்றின்
வாழ்நரும்
உயர்ந்தோர் தலையா இழிந்தோர்
ஈறா
யாவர்க்கு ஆயினும் தீதொன்று இன்றி |
உரை |
|
|
மறனில்
நெருங்கி நெறிமையின் ஒரீஇக்
55 கூற்றுயிர் கோடலும் ஆற்றா
தாக
உட்குறு செங்கோல் ஊறுஇன்று
நடப்ப
யாறுந் தொட்டவும் உறுவன
ஒழுகக்
காடும் புறவும் கவின்றுவளம்
சிறப்பப்
பொய்யா மாரித்து ஆகி வைகலும்
60 தண்டா இன்பம் தலைத்தலை சிறப்ப |
உரை |
|
|
விண்தோய் வெற்பின் விளைகுரல்
எனல்
குறவர் எறிந்த கோலக்
குளிர்மணி
முல்லை தலைஅணிந்த முஞ்ஞை
வேலிக்
கொல்லை வாயில் குப்பையுள் வீழவும்
65 புன்புல உழவர் படைமிளிர்த்
திட்ட
ஒண்கதிர்த் திருமணி அங்கண்
யாணர்
மருத மகளிர் வண்டலுள்
வீழவும் வயலோர்
எடுத்த கௌவைக்கு இருங்கழிக்
கயல்கொள் பொலம்புள் கதும்என
வெருவவும் 70 திணைவிராய்
மணந்து திருவிழை தகைத்தாக் |
உரை |
|
|
களவும் அரம்புங் கனவினும்
இன்றி
விளைதல் ஓவா வியன்பெரு
நாட்டொடு
பட்டி நியமம் பதிமுறை
இரீஇ முட்டுஇன்று
நிரம்பிய காலை ஒட்டாப்
75 பகைப்புலம் தேயப் பல்களிற்று
யானையொடு
தகைப்பெருந் தம்பியர் தலைச் சென்று
அகற்ற
ஆணை கேட்ட அகலிடத்து
உயிர்கட்கு
ஏம வெண்குடை இன்நிழல் பரப்பி |
உரை |
|
|
வீணை
வேந்தன் வியன்நாடு கெழீஇ
80 மகத மன்னவன் தானையொடு
வந்த
பகையடு மறவரைப் பதிவயின்
போக்கி
அருவிலை நன்கலம் அமைந்தவை
பிறவும் தருசகன்
கொள்கஎனத் தமரொடு
போக்கிப்
பட்டம் எய்திய பதுமா பதியொடு
85 முட்டில் செல்வத்து முனிதல்
செல்லான்
மட்டுவிளை கோதையொடு மகிழ்ந்துவிளை யாடிச் |
உரை |
|
|
செங்கதிர்ச்
செல்வன் எழுச்சியும்
பாடும்
திங்களும் நாளும் தெளிதல்
செல்லான்
அந்தளிர்க் கோதையை முந்துதான்
எய்திய 90 இன்பக்
கிழவன் இடவகை
அன்றி
மன்பெரு மகதன் கோயிலுள்
வான்தோய்
கன்னி மாடத்துப் பன்முறை
அவளொடு
கழிந்தவும் பிறவும் கட்டுரை
மொழிந்து
பொன்இழை மாதரொடு இன்மகிழ்வு எய்திப்
95 பெருநகர் வரைப்பில் திருமனை
இருந்து
தீயன நீக்கித் திருவிழை
தகைத்தாப்
பாயினன் மாதோ பயந்தநன் னாடுஎன். |
உரை |
|
2.
நாடு பாயிற்று
முற்றிற்று. |
|
|
|