4. உருமண்ணுவா
வந்தது
|
இதன்கண் : கோடவதி காரணமாக வாசவதத்தையை நினைந்த உதயணன்
நிலையும், தருசகமன்னன் உருமண்ணுவாவைச் சிறைவீடு செய்ய முயலுதலும், சங்கமன்னர்
உருமண்ணுவாவைச் சிறைவிடுத்தலும், உருமண்ணுவாவின் செயலும், சாதகன் செயலும், யூகி சாதகனை
உருமண்ணுவாவிடம் விடுத்தலும், சாதகன் செயலும், உருமண்ணுவா சாதகனை வினவுதலும், சாதகன்
கூற்றும், உருமண்ணுவாவின் செயலும் கூறப்படும். |
|
|
பள்ளி
எய்திய நள்ளிருள்
நீங்கலும்
விளியா விருப்பினொடு ஒளிபெறப்
புதுக்கி
மாசில் கற்பின் மருந்தேர்
கிளவி வாசவ
தத்தையை வாய்மிக்கு அரற்றி
5 எனக்குஅணங் காகி நின்றநீ
பயிற்றிய
வனப்பமை வீணை வந்தது
வாராய்
நீயே என்வயின் நினைந்திலை யோவென |
உரை
|
|
|
வகைத்தார்
மார்பன் அகத்தே
அழல்சுடத்
தம்பியர்ப் பெற்றும் தனியாழ் வந்தும்
10 இன்பம் பெருக இயைந்துஉண்டு
ஆடான்
செல்லும் காலை மல்லல்
மகதத்துச்
செருமுன் செய்துழிச் சிறைகொளப்
பட்ட உருமண்
ணுவாவிற்கு உற்றது கூறுவென் |
உரை |
|
|
சங்க
மன்னர் தம்தம் உரிமை 15
புன்கண் தீரப் புறந்தந்து
ஓம்பி
வாள்தொழில் தருசகன் மீட்டனன்
போக்கி
மன்னர் சிறையும் பின்னர்ப்
போக்குதும்
உருமண் ணுவாவை விடுக
விரைந்துஎனக்
கரும மாக்களைப் பெருமகன் விடுத்தலின் |
உரை
|
|
|
20 பகைகொள் மன்னர்
மிகஉவந்து
ஒன்றி
இழிந்த மாக்களொடு இன்பம்
ஆர்தலின்
உயர்ந்த மாக்களொடு உறுபகை
இனிதென
மகிழ்ந்த நெஞ்சமொடு மன்னவன்
புகழ்ந்து
செயப்படு கருமம் செறியச் செய்ய
25 மயக்கமில் அமைச்சனை மன்னர் விட்டபின் |
உரை
|
|
|
திருவலக்
கருமம் திண்ணிதின்
செய்துவந்து
உருமண் ணுவாவும் தருசகன்
கண்டு
சிறைநனி இருந்த சித்திராங்
கதனைப்
பொறைமலி வெந்நோய் புறந்தந்து ஓம்பிப்
30 போக்கிய பின்றை வீக்கங்
குன்றாத்
தலைப்பெருந் தானைத் தம்இறைக்கு
இயன்ற
நிலைப்பாடு எல்லாம் நெஞ்சுணக்
கேட்டு
வரம்பில் உவகையொடு இருந்த பொழுதினி |
உரை
|
|
|
இயைந்த
நண்பின் யூகியோடு இருந்த 35
பயன்தெரி சூழ்ச்சிப் பதின்மர்
இளையருள்
தீதில் கேள்விச் சாதகன்
என்போன்
உருமண் ணுவாவும் யூகியும்
தறியாக்
கரும மேற்கோள் தெரிநூ
லாகப்
பாவிடு குழலின் ஆயிடைத் திரிதர |
உரை
|
|
|
40 முனிவிலன் ஆதலின்
முன்நாள்
எண்ணிய
செய்வினை முடிதல் நோக்கித்
தேவியைக்
கைவயின் கொடுத்தல் கருமம்
என்றுதன்
அருமறை ஓலை அரும்பொறி
ஒற்றி
உருமண் ணுவாவினைக் கண்டுஇது காட்டுஎன |
உரை |
|
|
45 விரைவனன் போந்து
தருசகன்
காக்கும்
இஞ்சி ஓங்கிய இராச
கிரியத்து
வெஞ்சின வேந்தன் கோயில்முற்
றத்துக்
குஞ்சரத் தானத்து நின்றோன்
குறுகிக்
குறியில் பயிர்ந்து மறையில் போகி
50 ஓலை காட்ட உள்ளம் புகன்று |
உரை |
|
|
50 ஓலை காட்ட உள்ளம்
புகன்று மேலை
பட்டவும் தேவி
நிலைமையும் வாசனை
யகத்தே மாசற
உணர்ந்தும்
எம்வயின் தீர்ந்தபின் செய்வகை
எல்லாம்
வாயின் உரைக்கெனச் சாதகன் கூறும் |
உரை |
|
|
55 அற்புஅழல் ஊர்தர
அடல்வேல்
உதயணன்
ஒற்கம் படாமை உணர்ந்தனம்
ஆகி
அரும்பெறல் தோழி ஆற்றும்
வகையில்
பெருந்தண் கானம் பிற்படப்
போகிப்
பற்றின் மாதவர் பள்ளியுள் இருப்பின்
60 அற்றம் தரும்என அதுநனி வலீஇத் |
உரை |
|
|
தண்புனல்
படப்பைச் சண்பைப்
பெரும்பதி மித்திர
காமன் நற்பெருங்
கிழத்தியொடு ஆப்புற
இரீஇய பிற்றை
ஆருணி காப்புறு
நகர்வயின் கரந்துசென்று ஒழுகும்
65 கழிபெரு நண்பிற் காள
மயிடன்என்று
அழிவில் அந்தணன் அவ்விடத்து
உண்மையின்
புறப்படும் இதுவெனத் திறப்படத் தெரிந்து |
உரை |
|
|
செட்டி
மகனொடு ஒட்டினம்
போகிப்
பண்டம் பகரும் பட்டினம் பயின்ற
70 புண்டரம் புகீஇப் புதைத்த
உருவொடு
பொருத்தஞ் சான்ற புரைதபு
நண்பின்
வருத்த மானன் மனைவயின்
வைத்தபின்
வருத்த மானற்கு ஒத்த
தம்முன்
இரவி தத்தன் என்னும் உரவோன்
75 பெரும்படை தொகுத்துவந்து எரம்புசெய்
தலைத்தலின்
இருந்த நகரமுங் கலங்க
மற்றவன்
அருந்தொழின் மலையரண் அடைந்தன
மாகி இருந்த
பொழுதில் இப்பால் அரசற்கு |
உரை |
|
|
இருந்த
பொழுதில் இப்பால்
அரசற்கு
நிகழ்ந்ததை எல்லாம் நெறிமையில் கேட்டுப்
80 பொன்இழை மாதரைப் புணர்த்தல்
வேண்டும்
இன்னே வருகென நின்உழைப்
பெயர்த்தந்து
ஆங்கவர் இருந்தனர் ஆதலின்
நீங்கினிச்
செய்வதை எல்லாம் மெய்பெற
நாடுஎனத்
தூதுசெல் ஒழுக்கின் சாதகன் உரைப்ப. |
உரை |
|
|
85 ஆற்றல் சான்ற தருசகன் கண்டவன்
மாற்றம் எல்லாம் ஆற்றுளிக் கூறி
அவன்உழைப் பாட்டகத்து அதிபதி யாகிய
தவறில் செய்தொழில் சத்தி யூதியை
வேண்டிக் கொண்டு மீண்டனன் போந்துழி |
உரை |
|
|
90 அப்பால் நின்று முற்பால்
விருந்தாய்ப் புண்டர
நகரம் புகுந்தனன்
இருந்த
மண்டமர்க் கடந்தோன் விரைந்தனன்
வருகென
எதிர்வரு தூதனொடு அதிரக்
கூடிச் சத்தி
யூதி முதலாச் சண்பையுள
95 மித்திர காமனைக் கண்டுமெலி
வோம்பி
வருத்தந் தீர்ந்தபின் வருத்த மானன் |
உரை |
|
|
வருத்தந்
தீர்ந்தபின் வருத்த
மானன் பூமலி
புறவில் புண்டரங்
குறுகித்
தேமொழித் தேவியொடு தோழனைக் கண்டு
தலைப்பாடு எய்தித் தாங்கா
உவகையொடு 100 நலத்தகு நாகத்து
உறைவோர் போல
இன்ப மகிழ்ச்சியொடு நன்கனம்
போந்து
புகழ்க்கோ சம்பிப் புறத்துவந்து
அயர்வறும்
மகிழ்ச்சி எய்தி மனம்பிணி
உறூஉம்
மதுகாம் பீர வனமெனும்
காவினுள் 105 புகுதந்து
அவ்வழிப் புதுவதின் வந்த |
உரை |
|
|
105 புகுதந்து அவ்வழிப் புதுவதின்
வந்த
விருந்தின் மன்னர் இருந்துபயன்
கொள்ள
இயற்றப் பட்ட செயற்கருங்
காவினுள்
மறைத்தனன் அவர்களைத் திறப்பட
இரீஇயபின்
உவந்த உள்ளமோடு உருமண் ணுவாவும்
110 புகுந்தனன் மாதோ பொலிவுடை நகர்என்.
|
உரை |
4.
உருமண்ணுவா வந்தது முற்றிற்று |
|
|
|