5.
கனாஇறுத்தது
|
இதன்கண்: உதயண மன்னன் பதுமாபதியுடன் மகிழ்ந்திருத்தலும்,
அவள் தனக்கு யாழ் வித்தை கற்பிக்க வேண்டுதலும், அப்பதுமாபதி வாசவதத்தையைப் போல
யானும் நின் மாணவியாயிருந்து யாழ் கற்பேன் என்றமையால் அவன் வாசவதத்தையை நினைந்து
வருந்துதலும், அவள் அக்குறிப்பறிந்து தன்னிடம் செல்லுதலும், வயந்தகன் உதயணனிடம் வந்து
கூறுதலும், உதயணன் வாசவதத்தையை நினைந்து நினைந்து வருந்தித் துயில் கோடலும் அவன் கனவு
காண்டலும், எழுதலும், முனிவரைக் கண்டு வினாதலும், ஒரு முனிவன் கனாப்பயன் உரைத்தலும்,
அது கேட்ட உதயணன் செயலும் கூறப்படும். |
|
|
பொலிவுடை
நகர்வயின் புகலருங்
கோயிலுள்
வலிகெழு நோன்தாள் வத்தவர்
பெருமகன்
புதுமணக் காரிகை பூங்குழை
மாதர் பதுமா
தேவியொடு பசைந்துகண் கூடி
5 அசையுஞ் சீரும் அளந்துநொடி
போக்கி
இசைகொள் பாடலின் இசைந்துடன்
ஒழுக
விசைகொள் வீணை விருந்துபடப்
பண்ணி வசை
தீர் உதயணன் மகிழ்ந்துடன் இருந்துழி |
உரை |
|
|
நெடியோன்
அன்ன நெடுந்தகை மற்றுநின்
10 கடியார் மார்பம் கலந்துஉண்
டாடிய
வடிவேல் தடங்கண் வாசவ
தத்தை
வழிபாடு ஆற்றி வல்லள்
ஆகிய
அழிகவுள் வேழம் அடக்கும்
நல்லியாழ்
யானும் வழிபட்டு அம்முறை பிழையேன்
15 காணல் உறுவேன் காட்டி
அருளென
முள்எயிறு இலங்கச் செவ்வாய்
திறந்து
சில்லென் கிளவி மெல்லென
மிழற்றி
நகைநயக் குறிப்பொடு தகைவிரல் கூப்ப
|
உரை |
|
|
முற்றிழை
பயிற்றிய முற்பெரு நல்லியாழ்
20 கற்பேன் என்றசொல் கட்டழல்
உறீஇ
வேலெறிந் தன்ன வெம்மைத்
தாகிக்
காவல குமரற்குக் கதுமென
இசைப்ப
மாசில் தாமரை மலர்கண்
டன்ன ஆசில்
சிறப்பின் அமரடு தறுகண் 25
இளநலம் உண்ட இணையில்
தோகை
வளமயில் சாயல் வாசவ
தத்தையை
நினைப்பின் நெகிழ்ந்து நீர்கொள
இறைஞ்சிச்
சினப்போர் அண்ணல் சேயிழை
மாதர்க்கு
மனத்தது வெளிப்பட மறுமொழி கொடாஅன் |
உரை
|
|
|
30 கலக்கம் அறிந்த கனங்குழை
மாதர்
புலத்தல் யாவதும் பொருத்தம்
இன்றென
எனக்கும் ஒக்கும் எம்பெரு
மான்தன்
மனத்தகத் துள்ளோள் இன்னும்
விள்ளாள்
விழுத்தவ முடையள் விளங்கிழை பெரிதென |
உரை
|
|
|
35 ஒழுக்கம் அதுவாம்
உயர்ந்தோர்
மாட்டே
என்றுதன் மனத்தே நின்றுசில
நினையா
அறியாள் போலப் பிறிதுநயந்து
எழுந்துதன்
ஆயஞ் சூழ அரசனை
வணங்கி
மாவீழ் ஓதிதன் கோயில் புக்கபின் |
உரை
|
|
|
40 கவன்றனன் இருந்த காவல்
மன்னற்கு
வயந்தக குமரன் வந்து
கூறும்
வாலிழைப் பணைத்தோள் வாசவ
தத்தைக்கும்
பாசிழை அல்குல் பதுமா
பதிக்கும்
சீர்நிறை கோல்போல் தான்நாடு வாகி
45 நின்றி பேரன் பின்றுஇவன்
தாழ்த்து
நீங்கிற்று அம்ம நீத்தோள்
நினைந்தென
ஆங்கவன் உரைப்ப அதுவும் கேளான் |
உரை
|
|
|
முதிர்மலர்த்
தாமமொடு முத்துப்புரி
நாற்றிக்
கதிர்மணி விளக்கம் கான்றுதிசை அழல
50 விதியில் புனைந்த வித்தகக்
கைவினைப்
பதினைந்து அமைந்த படைஅமை
சேக்கையுள் புதுநலத்
தேவியொடு புணர்தல் செல்லான் |
உரை |
|
|
நறுந்தண்
இருங்கவுள் நளகிரி
வணக்கியதன்
இறும்புபுரை எருத்தம் ஏறிய ஞான்று
55 கண்டது முதலாக் கானம்
நீந்திக்
கொண்டனன் போந்தது நடுவாப்
பொங்குஅழல்
விளிந்தனள் என்பது இறுதி
யாக அழிந்த
நெஞ்சமொடு அலமரல்
எய்தி
மேநாள் நிகழ்ந்ததை ஆனாது அரற்றி |
உரை |
|
|
60 இகலிடை இமையா
எரிமலர்த்
தடங்கண்
புகழ்வரை மார்பன் பொருந்திய
பொழுதில்
கொள்ளென் குரலொடு கோட்பறை
கொளீஇ
உள்எயில் புரிசை உள்வழி
உலாவும்
யாமங் காவலர் அசைய ஏமம் 65
வாய்ந்த வைகறை வையக வரைப்பின் |
உரை |
|
|
நாற்கடல்
உம்பர் நாக வேதிகைப்
பாற்கடல் பரப்பில் பனித்திரை
நடுவண்
வாயுங் கண்ணுங் குளம்பும்
பவளத்து ஆயொளி
பழித்த வழகிற் றாகி 70
விரிகதிர்த் திங்களொடு வெண்பளிங்கு
உமிழும்
உருவொளி யுடைத்தாய் உட்குவரத்
தோன்றி
வயிரத்து அன்ன வைந்நுனை
மருப்பின்
செயிர்படு நோக்கமொடு சிறப்பிற்கு
அமைந்ததோர்
வெண்தார் அணிந்த வெள்ஏறு
கிடந்த 75 வண்டார்
தாதின் வெண்தா மரைப்பூ
அங்கண் வரைப்பின் அமர்இறை
அருள்வகைப்
பொங்குநிதிக் கிழவன் போற்றவும்
மணப்ப
மங்கலங் கதிர்த்த அம்கலுழ்
ஆகத்துத்
தெய்வ மகடூஉ மெய்வயின் பணித்துப்
80 பையுள் தீரக் கைவயின் கொடுத்தலும் |
உரை |
|
|
பயில்பூம்
பள்ளித் துயிலெடை
மாக்கள்
இசைகொள் ஓசையின் இன்துயில் ஏற்று
விசைகொண் மான்தேர் வியல்கெழு
வேந்தன்
கனவின் விழுப்பம் மனவயின் அடக்கி |
உரை |
|
|
85 அளப்பரும் படிவத்து
அறிவர் தானத்துச்
சிறப்பொடு சென்று சேதியம்
வணங்கிக்
கடவது திரியாக் கடவுளர்க் கண்டு
நின்று இடை
இருள்யாமம் நீங்கிய
வைகறை
இன்றியான் கண்டது இன்னது மற்றதை
90 என்கொல் தானென நன்குஅவர்
கேட்ட
உருத்தகு வேந்தன் உரைத்ததன் பின்றைத் |
உரை |
|
|
திருத்தகு
முனிவன் திண்ணிதின்
நாடி
ஒலிகடல் தானை உஞ்சையர்
பெருமகன்
மலிபெருங் காதல் மடமொழிப் பாவை
95 இலங்குகதிர் இலைப்பூண் ஏந்துமுலை
ஆகத்து நலங்கிளர்
நறுநுதல் நாறிருங்
கூந்தல்
மாசில் கற்பின் வாசவ
தத்தை
முழங்குஅழ மூழ்கி முடிந்தனள்
என்பது
மெய்எனக் கொண்டனை ஆயின் மற்றது
100 பொய்யெஎனக் கருது புரவ லாள. |
உரை |
|
|
இந்நாள்
அகத்தே சின்மொழிச்
செவ்வாய்
நன்நுதல் மாதரை நண்ணப் பெறுகுவை
பெற்ற பின்றைப் பெய்வளைத்
தோளியும்
கொற்றக் குடிமையுள் குணத்தொடும் விளங்கிய
105 விழுப்பெருஞ் சிறப்பின் விஞ்சையர்
உலகின்
வழுக்கில் சக்கரம் வலவயின்
உய்க்கும்
திருமகன் பெறுதலுந் திண்ணிது திரியா |
உரை |
|
|
காரணங்
கேண்மதி தார்அணி
மார்ப
ஆயிரம் நிரைத்த வாலிதழ்த் தாமரைப்
110 பூவெனப் படுவது பொருந்திய
புணர்ச்சிநின்
தேவி யாகும்அதன் தாதுஅகடு
உரிஞ்சி
முன்தாள் முடக்கிப் பின்தாள்
நிமிர்த்துக்
கொட்டை மீமிசைக் குளிர்மதி
விசும்பிடை
எட்டு மெய்யோடு இசைபெறக் கிடந்த
115 விள்ளா விழுப்புகழ் வெள்ஏறு
என்பதை
முகன்அமர் காதனின் மகஎனப் படும்அது் |
உரை |
|
|
முகன்அமர்
காதனின் மகஎனப்
படும்அது
பரந்த வெண்திரைப் பாற்கட
லாகி
விரும்பப் படும்அது வெள்ளியம்
பெருமலை
வெண்மை மூன்றுடன் கண்டதன் பயத்தால்
120 திண்மை ஆழி திருத்தக
உருட்டலும்
வாய்மை யாக வலிக்கல்
பாற்றென
நோன்மை மாதவன் நுண்ணிதின் உரைப்ப |
உரை |
|
|
அன்றும்
இன்றும் அறிவோர்
உரைப்பதை
என்றும் திரியாது ஒன்றே ஆதலின்
125 உண்டுகொல் எதிர்தல்என்று உள்ளே
நினையாப்
பெருந்தண் கோயிலுள் இருந்த
பொழுதில்
உருகெழு மந்திரி வரவுஅதை
உணர்த்தலின்
புகுதக வென்றுதன் புலம்புஅகன்று
ஒழிய
இகல்வேல் வேந்தன் இருத்தல் ஆற்றான் |
உரை |
|
|
130 ஆனா உவகையொடு தான்எதிர்
செல்லத்
தேன்ஆர் தாமரைச் சேவடி
வீழ்தலின்
திருமுயங்கு தடக்கையின் திண்ணிதின்
பற்றி
உரிமைப் பள்ளி புக்கனன்
மாதோ
பெருமதி அமைச்சனைப் பிரிந்துபெற் றான்என்.
|
உரை |
5.
கனாவிறுத்தது முற்றிற்று. |
|
|
|