10. பிரச்சோதனன்
தூதுவிட்டது
|
இதன்கண்: வாயிலோன் பிரச்சோதனன் தூதர் வந்தமையை உதயணனுக்குத்
தெரிவித்தலும்; பதுமை என்னும் தூதியின் இயல்பும், வாசவதத்தைக்குப் பிரச்சோதனன்
அளித்த பொருள்களும், பதுமை பிரச்சோதனன் ஓலையை உதயணனிடம் அளித்தலும், அவன் அதனை
வாங்குதலும், அவ்வோலையில் எழுதிய செய்தியும், உதயணன் பதுமையை வினவுதலும், பதுமை
விடையளித்தலும், உதயணன் கூற்றும், அவன் பண்ணிகாரங்களைக் காணுதலும், வந்தோரை
உபசரித்தலும், யூகிக்குக் கூறுதலும் கூறப்படும். |
|
|
ஒருங்குநன்கு இயைந்தவர்
உறைவுழி ஒருநாள்
திருந்துநிலைப் புதவில் பெருங்கதவு
அணிந்த வாயில் காவலன்
வந்துஅடி வணங்கி ஆய்கழல்
காலோய் அருளிக் கேண்மதி 5
உயர்மதில் அணிந்த உஞ்சையம்
பெருநகர்ப் பெயர்வில்
வென்றிப் பிரச்சோ
தனன்எனும் கொற்ற
வேந்தன் தூதுவர் வந்துநம்
முற்றம் புகுந்து முன்கடை யாரென |
உரை |
|
|
அந்தளிர்க் கோதையைப்
பெற்றது மற்றவள் 10 தந்தை தந்த
மாற்றமும் தலைத்தாள்
இன்பம் பெருக எதிர்வனன் விரும்பி
வல்லே வருக
என்றலின் மல்கி |
உரை |
|
|
வல்லே வருக என்றலின்
மல்கிய மண்ணியல்
மன்னர்க்குக் கண்என
வகுத்த நீதி நன்நூல் ஓதிய
நாவினள் 15 கற்றுநன்கு அடங்கிச்
செற்றமும் ஆர்வமும் முற்ற
நீங்கித் தத்துவ வகையினும்
கண்ணினும்
உள்ளே..............
குறிப்பின் எச்சம் நெறிப்பட
நாடித் தேன்தோய்த் தன்ன
கிளவியில் தெளிபடத் 20 தான்தெரிந்து உணருந்
தன்மை அறிவினள் |
உரை |
|
|
உறுப்புப்பல
அறுப்பினும் உயிர்முதல்
திருக்கினும் நிறுத்துப்பல
ஊசி நெருங்க ஊன்றினும்
கறுத்துப்பல கடிய காட்டினும்
காட்டாது சிறப்புப்பல
செயினும் திரிந்துபிறிது உரையாள்
25 பிறைப்பூண் அகலத்துப் பெருமகன்
அவன்மாட்டுக் குறித்தது
கூறுதல் செல்லாக் கொள்கையன் |
உரை |
|
|
இன்னது செய்கென ஏவல்
இன்றியும் மன்னிய
கோமான் மனத்ததை உணர்ந்து
முன்னியது முடிக்கும் முயற்சியள் ஒன்னார்
30 சிறந்தன பின்னும் செயினும்
அறியினும் புறஞ்சொல்
தூற்றாது புகழும் தன்மையள்
புல்லோர் வாய்மொழி ஒரீஇ
நல்லோர் துணிந்த
நூற்பொருள் செவிஉளம்
கெழீஇப் பணிந்த
தீஞ்சொல் பதுமை என்னும் 35 கட்டுரை மகளொடு
கருமம் நுனித்து |
உரை |
|
|
விட்டுரை விளங்கிய
விழுப்புகழ் ஆளரும் கற்ற
நுண்தொழில் கணக்கரும்
திணைகளும் காய்ந்த
நோக்கின் காவ லாளரும்
தேன்தார் மார்பன் திருநகர் முற்றத்துக் |
உரை |
|
|
40 கைபுனைந் தோருங் கண்டு
காணார் ஐஐந்து இரட்டி யவன
வையமும் ஒள்இழைத்
தோழியர் ஓரா
யிரவரும் சேயிழை
ஆடிய சிற்றில் கலங்களும்
பாசிழை அல்குல் தாயர் எல்லாம் 45 தம்பொறி
ஒற்றிய தச்சுவினைக்
கூட்டத்துச் செம்பொன்
அணிகலம் செய்த செப்பும் |
உரை |
|
|
தாயும் தோழியும்
தவ்வையும் ஊட்டுதல்
மேயலள் ஆகி மேதகு வள்ளத்துச்
சுரைபொழி தீம்பால் நுரைதெளித்து ஆற்றித் 50
தன்கை சிவப்பப் பற்றித்
தாங்காது மகப்பா ராட்டும்
தாயரின் மருட்டி முகைப்புரை
மெல்விரல் பானயம் எய்த
ஒளிஉகிர் கொண்டு வளைவாய்
உறீஇச் சிறகர் விரித்து
மெல்லென நீவிப் 55 பறவை கொளீஇப் பல்லூழ்
நடாஅய்த் தன்வாய் மழலை
கற்பித்து அதன்வாய்ப்
பரத கீதம் பாடுவித்து எடுத்த
மேதகு கிளியும் மென்நடை அன்னமும் |
உரை |
|
|
அடுதிரை முந்நீர் யவனத்து
அரசன் 60 விடுநடைப் புரவியும்
விசும்புஇவர்ந்து ஊரும்
கேடில் விமானமும் நீர்இயங்கு
புரவியும் கோடி வயிரமும்
கொடுப்புழிக் கொள்ளான்
சேடிள வனமுலைத் தன்மகள்
ஆடும் பாவை அணிதிறை
தருகெனக் கொண்டுதன் 65 பட்டத் தேவிப்
பெயர்நனி போக்கி
எட்டின் இரட்டி ஆயிர
மகளிரும் அணங்கி
விழையவும் அருளான்
மற்றென் வணங்கிறைப்
பணைத்தோள் வாசவ
தத்தைக்கு ஒருமகள் ஆகெனப்
பெருமகன் பணித்த 70 பாவையும் மற்றதன்
கோயிலும் சுமக்கும் கூனுங்
குறளும் மேல்நாம் கூறிய |
உரை |
|
|
நருமதை முதலா நாடக
மகளிரும் ஆன்வீற் றிருந்த
வரும்பெறல் அணிகலம்
தான்வீற் றிருத்தற்குத் தக்கன இவைஎன 75
முடியுங் கடகமும் முத்தணி
ஆரமும் தொடியும் பிறவும்
தொக்கவை நிறைந்த
முடிவாய்ப் பேழையும் முரசும்
கட்டிலும் தவிசும் கவரியும்
தன்கை வாளும் குடையும்
தேரும் இடையறவு இல்லா 80 இருங்களி யானை
இனமும் புரவியும் வேறுவே
றாகக் கூறுகூறு அமைத்துக்
காவல் ஒம்பிக் காட்டினிர் கொடுமின்என்று
ஆணை வைத்த அன்னோர்
பிறரும் நெருங்கிமேற்
செற்றி ஒருங்குவந்து இறுப்பப் |
உரை |
|
|
85 பழியில் ஒழுக்கில் பதுமை
என்னும் கழிமதி மகளொடு
கற்றோர் தெரிந்த
கோல்வ லாளர் கொண்டனர்
புக்குத்தம் கால்வல்
இவுளிக் காவலன் காட்டத் |
உரை |
|
|
தொடித்தோள் வேந்தன்முன்
துட்கென்று இறைஞ்சினள் 90 வடிக்கேழ்
உண்கண் வயங்கிழை குறுகி
முகிழ்விரல் கூப்பி இகழ்விலள்
இறைஞ்சி உட்குறும் உவணம்
உச்சியில் சுமந்த சக்கர
வட்டமொடு சங்குபல
பொறித்த தோட்டுவினை
வட்டித்துக் கூட்டுஅரக்கு உருக்கி 95
ஏட்டுவினைக் கணக்கன் ஈடறிந்து ஒற்றிய
முடக்கமை ஓலை மடத்தகை நீட்டி |
உரை |
|
|
மூப்பினும் முறையினும்
யாப்பமை குலத்தினும்
அன்பினும் கேளினும் என்றிவை
பிறவினும் மாசனம்
புகழும் மணிபுனைந்து இயற்றிய 100 ஆசனத்து
இழிந்த அமைதிகொள் இருக்கையன |
உரை |
|
|
சினைக்கெடிற்று அன்ன
செங்கேழ்ச் செறிவிரல்
தனிக்கவின் கொண்ட தகைய
வாக அருமறை தாங்கிய அந்த
ணாளரொடு பொருள்நிறை
செந்நாப் புலவர் உளப்பட 105 ஏனோர்
பிறர்க்கும் நாள்நாள்
தோறும் கலன்நிறை
பொழியக் கவியின்
அல்லதை இலமென மலரா
வெழுத்துடை அங்கையின்
ஏற்றனன் கொண்டு வேற்றுமை
இன்றிக் கோட்டிய முடியன்
ஏட்டுப்பொறி நீக்கி 110 மெல்லென
விரித்து வல்லிதின் நோக்கிப் |
உரை |
|
|
பிரச்சோ தனன்எனும்
பெருமகன் ஓலை உரைச்சேர்
கழற்கால் உதயணன் காண்க
இருகுலம் அல்லது இவணகத்து
இன்மையின் குருகுலக்
கிளைமை கோடல் வேண்டிச் 115 சேனையொடு
சென்று செங்களம்
படுத்துத் தானையொடு
தருதல் தானெனக்கு
அருமையின் பொச்சாப்பு
ஓம்பிப் பொய்க்களிறு
புதைஇ இப்படித் தருகென
ஏவினேன் எமர்களை
அன்றைக் காலத்து அந்நிலை நினையாது 120
இன்றைக் காலத்து என்பயந்து
எடுத்த கோமான் எனவே
கோடல் வேண்டினேன் |
உரை |
|
|
ஆமான் நோக்கி ஆயிழை
தன்னொடு மகப்பெறு தாயோடு
யானும் உவப்பப்
பெயர்த்துஎன் நகரி இயற்பட எண்ணுக 125 தன்அலது
இலளே தையலும் தானும்
என்அலது இலனே இனிப்பிறன்
ஆகல்என் பற்றா மன்னனைப்
பணிய நூறிக் கொற்றம்
கொண்டதும் கேட்டனென்
தெற்றென யான்செயப் படுவது
தான்செய் தனன்இனிப் |
உரை |
|
|
130 பாம்பும் அரசும் பகையும்
சிறிதென ஆம்பொருள்
ஓதினர் இகழார் இதனால்
தேம்படு தாரோன் தெளிதலொன்று
இலனாய் ஓங்குகுடை நீழல்
உலகுதுயில் மடியக்
குழவிகொள் பவரின் இகழாது ஓம்பிப் 135
புகழ்பட வாழ்க புகழ்பிறிது இல்லை |
உரை |
|
|
ஆகிய விழுச்சீர்
அரும்பெறல் அமைச்சன்
யூகியை எமரொடும் உடனே
விடுக்க கருமம் உண்டுஅவன்
காணல்உற் றனென்என
ஒருமையிற் பிறவும் உரைத்தவை
எல்லாம் 140 பெருமையில் கொள்கெனப்
பிரியாது புணர்த்த மந்திர
விழுப்பொருள் மனத்தே அடக்கி
வெந்திறல் வீரன் விளங்கிய முறுவலன் |
உரை |
|
|
ஆனாக் காதல் அவந்திகை
தன்னகர் மேநாள் காலை வெவ்வழல்
பட்ட 145 தீயுண் மாற்றம் வாயல
எனினும் உரைஎழுதி வந்தஇவ்
ஓலையுள் உறாக்குறை பழுதால் என்று
பதுமையை நோக்கப் |
உரை |
|
|
பவழச் செவ்வாய் படிமையில்
திறந்து முகிழ்விரல் கூப்பி
முற்றிழை உரைக்கும் 150 பரும யானையிற் பற்றார்
ஓட்டிய பெருமையின்
மிக்கஎம் பெருமகன் தன்னோடு
ஒருநாட்டுப் பிறந்த உயிர்புரை
காதல் கண்ணுறு கடவுள் முன்னர்
நின்றுஎன் ஒண்ணுதற்கு உற்றது
மெய்கொல்என் றுள்ளிப் 155 படுசொல்
மாற்றத்துச் சுடர்முகம் புல்லெனக்
குடைகெழு வேந்தன் கூறாது நிற்பச் |
உரை |
|
|
சினப்போர்ச் செல்வ முன்ன
மற்றுநின் அமைச்சரோடு அதனை
ஆராய்ந் தனன்போல் நூல்நெறி
மரபின் தானறிவு தளரான் 160 தொடுத்த மாலை எடுத்தது
போல முறைமையின் முன்னே தெரிய
அவன்எம் இறைமகற்கு உரைத்தனன்
இத்துணை அளவவள் மாய
இருக்கையள் ஆய்வ தாமென நீட்ட
மின்றுஅவள் நீயள விடினே 165 கூட்டம் எய்தும்
நாளும் இதுவென இன்றை நாளே எல்லை
ஆகச் சென்ற திங்கள் செய்தவன்
உரைத்தனன் |
உரை |
|
|
ஆணம் ஆகிய வருந்தவன்
வாய்மொழி பேணும் ஆதலின் பெருமகன்
தெளிந்தவன் 170 ஒத்த தோவது வத்தவ
வந்தென வாழ்த்துபு வணங்கிய வயங்கிழை
கேட்பத் |
உரை |
|
|
தாழ்த்துணைத் தலைப்பொறிக் கூட்டம்
போலப் பொய்ப்பின்று ஒத்தது செப்பிய
பொருளென உறுதவன் புகழ்ந்து மறுவில்
வாய்மொழி 175 மனத்தமர் தோழரொடு மன்னவன்
போந்து திருக்கிளர் முற்றம் விருப்பொடு
புகுந்து பல்வகை மரபின் பண்ணி
காரம் செல்வனல் எல்லாஞ் செவ்விதிற்
கண்டு |
உரை |
|
|
பல்வகை மரபின் பண்ணி
காரம் செல்வனல் எல்லாஞ் செவ்விதிற்
கண்டு |
உரை |
|
|
வந்தோர்க்கு ஒத்த இன்புறு
கிளவி 180 அமிர்துகலந்து அளித்த அருளினன்
ஆகித் தமர்திறந் தேவி தானுங்
கேட்கென வேறிடம் பணித்தவர் வேண்டுவ
நல்கி |
உரை |
|
|
யாறுசெல் வருத்தம் ஊறுஇன்று
ஓம்பி அவந்தியர் கோமான் அருளிட
நூல்நெறி 185 இகழ்ந்துபிழைப் பில்லா வியூகி
சென்றுஇவண் நிகழ்ந்ததுங் கூறிநின்
நீதியும் விளக்கி நெடித்தல் செல்லாது
வாவென வழிநாள் விடுத்தனன் அவரொடு
விளங்கிழை நகர்க்குஎன்.
|
உரை |
10.பிரச்சோதனன் தூதுவிட்டது
முற்றிற்று |
|
|
|