| 3. இயக்கன் 
 போனது   | 
 
 | இதன்கண் : இயக்கன் கூறுதலும், 
 உதயணன் கூறுதலும் அதற்கு அவன் கூறுதலும், பிடியின் வரலாறும், பத்திராபதி யானைப்பிறப்பை 
 விரும்பலும், அவள் குபேரன்முன் செல்லுதலும், பத்திராபதி சாபவிடை வேண்டுதலும், குபேரன் 
 சாபவிடையும்,  பத்திராபதி பழைய உருப்பெற்றுக் குபேரனைஅடைந்து வணங்குதலும், 
 குபேரன் சௌதருமேந்திரனை ஏத்தலும், சௌதருமேந்திரன் சோதவனுக்குக் கட்டளை இடுதலும், 
 அவனை விடுத்தலும், சௌதருமேந்திரன் சோதவனை விடுத்தலும், சோதவன் பத்திரையை உதயணன் 
 பால் விடுத்தலும், பத்திராபதியின் நன்றி அறிவும், இயக்கன் பத்திராபதியை 
 நினைக்கும்படி கூறலும், அவன் ஒரு மந்திரத்தைச் செவியறிவுறுத்தலும், அவன் செல்லுதலும் 
 கூறப்படும். | 
 
 |  | 
 
 |  |               
 இயக்கன் அவ்வழி இழிந்தனன் 
 தோன்றிமயக்கம் தீர்த்த மாசறு 
 நண்பின்
 அலகை ஆகிய அரச 
 குமரனை
 உலகுப சாரத் துறைமுறை கழித்துக்
 | உரை | 
 
 |  | 
 
 |  | 5       கிளையின் 
 மன்னர் கேளிர் 
 சூழத் தளைஅகப் பட்ட காலையும் 
 தளைஅவிழ்
 வண்ணக் கோதை வாசவ 
 தத்தையொடு
 பண்ணமை பிடிமிசைப் படைநரும் 
 ஒழியத்
 தனியே போந்தோர் கனிகவர் கானத்துக்
 10         கூட்டிடைப் பட்ட கோட்புலி 
 போல
 வேட்டிடைப் 
 பட்ட வெவ்வப் பொழுதினும்
 | உரை | 
 
 |  | 
 
 |  |              அருந்திறல் 
 அமைச்சன் அறிவின் 
 நாடித்திருந்திழை அல்குல் தேவியைப் 
 பிரிப்ப
 வருந்திய நெஞ்சமொடு மகத நன்னாட்டு
 15        அரசுஇகந்து அடர்த்த ஆறா 
 வெகுளித்
 தருசகன் தங்கையைத் தலைப்பட்டு 
 எய்திய
 துயரக் காலத்துத் தொன்னகர் 
 எய்திய
 பகைகொண் மன்னனைப் பணித்த பொழுதினும்
 | உரை | 
 
 |  | 
 
 |  | துயரந் 
 தீர்க்குந் தோழனென்று என்னைப் 20        பெயராக் கழலோய் பேணாய் 
 ஆகி
 ஒன்றிய செல்வமொடு உறுகண் 
 இல்லா
 இன்று நினைத்தது என்னெனப் 
 படுமென
 வெஞ்சின வீரனை நெஞ்சுறக் கழறப்
 | உரை | 
 
 |  | 
 
 |  | பட்டவை 
 எல்லாம்..................எங்களின் 25        மாறடு வேலோய் மற்றவை 
 தீர்தலின்
 எம்மில் 
 தீரா இடர்வரின் 
 அல்லதை
 நின்னை 
 நினைத்தல் நீர்மைத்து 
 அன்றென
 உள்ளியது இல்லென உள்ளங் 
 குளிர்ப்பத்
 தகுவன நாடி முகமன் கூறி
 | உரை | 
 
 |  | 
 
 |  | 30        அம்சொல் 
 மழலை அவந்திகை 
 என்னுநின் நெஞ்சமர் தோழி நிலைமை 
 கேண்மதி
 மிசைச்செல அசாஅ விழும 
 வெந்நோய்
 தலைச்செலத் தானும் தன்மனத்து 
 அடக்கி
 ஏறாக் கருமம் இதுவென எண்ணிக்
 35        கூறாள் மறைப்ப ஊறுஅவள் 
 நாடி
 உற்றியான் வினவ இற்றென 
 இசைத்தனள்
 | உரை | 
 
 |  | 
 
 |  | மற்றியாந் 
 தீர்க்கும் மதுகை 
 அறியேம் நயந்த நண்பின் நன்னர் நோக்கி்
 உடைஅழி காலை உதவிய 
 கைபோல்
 40        நடலை தீர்த்தல் நண்பனது 
 இயல்பென
 உரத்தகை 
 யாள உள்ளினேன் 
 என்னத்
 திருத்தகு மார்வன் திறவதின் கிளப்பத்
 | உரை | 
 
 |  | 
 
 |  | தாரணி மார்ப காரணம் 
 கேண்மதி மெச்சார்க் கடந்த மீளி மொய்ம்பின்
 45        விச்சா தரர்உறை உலகம் 
 விழையும்
 திருமக னாநின் பெருமனைக் 
 கிழத்தி
 வயிற்றுஅகத்து உறைந்த நயப்புறு 
 புதல்வன்
 அன்னன் ஆகுதல் திண்ணிதின் 
 நாடி
 மெய்ப்பொருள் தெரியும் மிடைதார் மன்னவ
 50       பொய்ப்பொருள் நீங்கிய 
 இப்பொருள் 
 கேண்மதி
 உள்ளிய அசாஅஃது ஒளியின்று கிளப்பின்
 | உரை | 
 
 |  | 
 
 |  | மஞ்சுசூழ் 
 நெடுவரை விஞ்சத்து 
 அடவித் திருமலர் கெழீஇய தெள்நீர்ப் 
 படுவின்
 நருமதைப் 
 பெயர்யாற்று ஒருகரை மருங்கின்
 55       எண்ணரும் பருப்பதம் என்னும் 
 மலைமிசை
 ஒண்நிதிக் கிழவன் உரிமையொடு இருந்துழிக்
 | உரை | 
 
 |  | 
 
 |  | கண்அணங் 
 குறூஉம் காரிகை 
 நீர்மைப் பத்திரை மேனகை திலோத்தமை 
 ஒருத்தி
 பத்திரா பதியோடு உருப்பசி அரம்பைமுதல்
 60       பாடகம் சுமந்த சேடுபடு 
 சேவடி
 நாடக மகளிர் நாலிரு 
 பதின்மருள்
 பல்வளைப் பணைத்தோள் பத்திரா 
 பதிஎனும்
 மெல்லியல் தன்னை வேந்தன் விடுக்கஅப்
 | உரை | 
 
 |  | 
 
 |  | பணியொடு சென்று பனிமலர் பொதுளிய 65       ஆலங் கானத்து 
ஆற்றயல் மருங்கின்
 இணரும் தளிரும் இருஞ்சினைப் போதும்
 பிணர்படு தடக்கையில் பிறவும் ஏந்தி
 ஒண்ணுதல் இரும்பிடி ஒன்றே போலக்
 கண்அயல் கடாஅத்துக் களிவண்டு ஓப்ப
 | உரை | 
 
 |  | 
 
 |  | 70      மாறுதனக்கு இன்றி 
 மறமீக் கூரி ஆறுதனக்கு அரணா அணிநலம் 
 நுகர்ந்து
 மருப்பிடைத் தாழ்ந்த பருப்புடைத் 
 தடக்கை
 செருக்குடை மடப்பிடி சிறுபுறத்து 
 அசைஇ
 நறுமலர் நாகத் தூழ்முதிர் வல்லிப்
 75      பொறிமலர் கும்பம் புதைய 
 உதிர
 அஞ்சாப் பைங்கண்ஓர் வெஞ்சின 
 வேழம்
 எழுவகை மகளிர் இன்பம் 
 எய்தி
 அகமகிழ்ந் தாடும் அண்ணல் 
 போல
 நின்ற இன்ப நேயங் காணா
 | உரை | 
 
 |  | 
 
 |  | 80      விழுநிதிக் 
 கிழவன் விழையும் 
 காதலின் நாடக மகளிர் நலத்தொடு 
 புணர்ந்த
 பாடகச் சீறடிப் பத்தி 
 ராபதி
 தான மகளிரொடு தண்புனல் 
 யாற்றுஅயல்
 கானத்து ஆடிக் கடவா நின்றோள்
 85       ஊழலர்ச் சோலைஊடு வந்துவிளை 
 யாடும்
 வேழப் பிறவும் விழைதக்கு 
 அதுவென
 உள்ளம் 
 பிறழ்ந்ததை உள்ளகத்து அடக்கி
 | உரை | 
 
 |  | 
 
 |  |             
 வள்ளிதழ் நறுந்தார் வச்சிர 
 வண்ணன்அடிநிழல் குறுகிய காலை மற்றென்
 90       மனத்ததை இயைகென நினைத்தனள் 
 செல்லா
 | உரை | 
 
 |  | 
 
 |  | பிடிஎழில் நயந்து பெயர்ந்தனள் 
 இவளென ஒன்றிய 
 உறுநோய் ஓதியின் 
 நோக்கிச்
 செயிர்த்த உள்ளமொடு தெய்வ 
 இன்பம்
 பொறுத்தல் செல்லாது வெறுத்தனை போன்மென
 | உரை | 
 
 |  | 
 
 |  | 95       வேழம் நினைஇ 
 வேட்கை 
 மீதூர்ந்து ஊழ்வினை 
 வகையின் உடம்பிட்டு ஏகி
 நன்றியில் 
 விலங்கின் பிறவி 
 நயந்துநீ
 கானஞ் செய்தது காரண 
 மாக
 மலைக்கணத் தன்ன மாசில் யானையுள்
 100       இலக்கணம் அமைந்ததோர் 
 இளம்பிடியாகிப்
 பிறந்த பின்றைச் சிறந்துநீ 
 நயந்த
 வேக யானையொடு விழைந்துவிளை 
 யாடிப்
 போகம் நுகர்கெனப் போற்றான் 
 ஆகிச்
 சாவம் 
 மற்றவன் இடுதலுஞ் சார்ந்து
 | உரை | 
 
 |  | 
 
 |  | 105       தேவ வாய்மொழி 
 திரியாது 
 ஆகலின் நீடுபெறல் 
 அரிதா நெடுங்கை 
 விலங்கின்
 வீடுபெறல் யாதென விளங்கிழை வினவ
 | உரை | 
 
 |  | 
 
 |  |              அண்ணல் 
 நல்தாள் அவந்தியர் 
 கோமான்பண்ணமை வாரியுள் பண்ணுப் பிடியாப்
 110        பற்றப் படுதி பட்ட 
 பின்னாள்
 அலகை ஆகிய ஐம்பெருங் 
 குலத்துக்
 கொலைகெழு செவ்வேல் குருகுலக் 
 குருசில்
 உலகம் 
 புகழும் உதயண 
 குமரனைப்
 பிறைமருப் பியானைப் பிரச்சோ தனன்தமர்
 115        சிறைகொளப் பட்டுச் செல்லா 
 நின்றுழி
 | உரை | 
 
 |  | 
 
 |  | மண்ணமை நெடுந்தோள் மறமாச் 
 சேனன்குப் பண்ணமை 
 பிடியாய் நீயும் 
 அவற்றுள்
 யானை 
 வித்தகர் தானத்தின் 
 வடிப்ப
 நடையொடு நவின்ற காலை அவ்வழிப்
 120         படையுடை வேந்தன் பனிநீர் 
 விழவினுள்
 குடைகெழு வேந்தன் குருகுலக் 
 குருசில்
 ஒண்நறுந் தெரியல் லுதயணன் 
 ஏறப்
 பண்ணிச் செல்க பத்திரா பதியென
 | உரை | 
 
 |  | 
 
 |  | வீர வேந்தன் விளங்கிழைக் குறுமகள் 125         வார்வளைப் பணைத்தோள் 
 வாசவ 
 தத்தையை
 ஆர்வ 
 உள்ளத்து அவனுடன் 
 ஏற்றி
 ஊரப் 
 படுநீ ஓரிருள் 
 எல்லையுள்
 உலப்பரும் 
 நீளதர் தலைச்செல 
 ஓடிக்
 கால 
 கூடம் என்னும் வெந்நோய்
 130        சாலவும் பெருக மேன்மேல் 
 நெருங்கி
 விலக்குவரை நில்லாது வெம்பசி 
 நலிய
 வீழ்ந்த காலை மேயவன் அத்தலை
 | உரை | 
 
 |  | 
 
 |  | ஆய்ந்த 
 உள்ளமொடு சேர்ந்தனன் 
 ஆகி அஞ்சாது ஐம்பதம் நினைமதி நீயென
 135        எஞ்சா தவணீ இயல்பினில் 
 திரியாது
 சிந்தையொடு முடிந்தது காரண 
 மாக
 ஊனமை விலங்கின் உடம்பவண் ஒழிய
 | உரை | 
 
 |  | 
 
 |  | ஈனமில் 
 யாக்கையோடு இவ்வழி 
 வந்துநின் முன்னைப் 
 பேரொடு பெண்ணுருவு எய்தி
 140        இத்துணை வாழ்தியென்று 
 உரைக்கப் 
 பட்ட
 அன்ன தன்மையோஇ இறந்த ஆயிழை
 | உரை | 
 
 |  | 
 
 |  | மன்னருள் 
 மன்னன் நின்னருள் 
 நிகர்க்கும் மாற்றுப 
 காரம் மனத்திண் 
 எண்ணி
 நிச்ச 
 நிரப்பின் நிலமிசை உறைநர்க்கு
 145       எச்சம் பெறுதல் இன்பம் 
 ஆதலின்
 மற்றது 
 முடிக்கும் முயற்சியோடு 
 உற்றதன்
 வளநிதிக் 
 கிழவனை வாழ்த்துவனள் 
 வணங்கி
 அளவில் 
 இன்பத்து ஆடலில் 
 பணிந்து
 பெருவரம் 
 பாகிய பொருவில் செல்வவோர்
 150       சிறுவரம் வேண்டுவென் திரியாது 
 ஈமென
 | உரை | 
 
 |  | 
 
 |  |             நிவந்த 
 அன்பின் உவந்தது 
 கூறெனக்விழ்ந்த 
 சென்னியள் கைவிரல் 
 கூப்பி
 வன்கண் 
 உள்ளத்து மன்னர்க்கு 
 ஒவ்வா
 அங்கவன் 
 உள்ளமோடு டருண்முந்து உறீஇ
 155       என்குறை முடித்தேன் இனியென் 
 னாது
 துன்புறு கிளவியின் தொன்னலம் 
 அழுங்கத்
 திருமலர் 
 நெடுங்கண் டெண்பனி 
 உறைத்தந்து
 அருமணி ஆகத்து அகலம் 
 நனைப்ப
 எவ்வ 
 உள்ளமோடு இரத்தல் ஆற்றான்
 | உரை | 
 
 |  | 
 
 |  | 160        தைவந் 
 தளித்துத் தக்கது 
 செய்தோய் படர்கூர் யாக்கையுள் பற்று 
 விட்டகன்று
 இடர்தீர்ந்து இனியை ஆகவென் 
 குறையெனக்
 கடவது 
 கழித்த காவலன் 
 தனக்கோர்
 மறுவில் சிறப்பின்ஓர் மகனை வேண்டுவேன்
 165       பெறுதற்கு ஒத்த பிழைப்பிலன் 
 ஆயினும்
 அறாஅ 
 அருநிதிக் கிழவன் 
 அதனை
 மறாஅது அருளென மடமொழி 
 உரைப்பப்
 பெரிதவன் உணர்ந்து பெற்றனை நீஎனச்
 | உரை | 
 
 |  | 
 
 |  | சொரிதரு 
 விசும்பில் சோதமன் குறுகிப் 170        பாத்தில் பெருமைப் பரதன் 
 முதலாச்
 சேய்த்தின் வந்தநின் குலமும் 
 செப்பமும்
 வைத்த காட்சியும் வல்லிதின் 
 கூறிச்
 சிதைவில் செந்நெறி சேர்ந்துபின் 
 திரியா
 உதையண குமரன்கு உவகையின் தோன்றுமோர்
 175        சிறுவன் வேண்டுமது சிறந்ததென்று 
 ஏத்தப
 | உரை | 
 
 |  | 
 
 |  |              
 பின்னை மற்றவன் மன்னிய 
 வேட்கையொடுவிச்சை எய்தி வெள்ளிஅம் 
 பெருமலை
 அச்சமில் 
 ஆழிகொண்டு அரசுவீற்று 
 இருத்தற்கு
 நச்சி நோற்றவோர் கச்சமில் கடுந்தவச்
 180        சோதவன் என்னும் இருடி 
 உலகத்துத்
 தேவ யாக்கையொடு போகம் 
 எய்திய
 நிதான வகையின் நினைத்தினிது இருந்தனன்
 | உரை | 
 
 |  | 
 
 |  | நாவலம் 
 தண்பொழில் நலத்தொடு 
 தோன்றிப் பாவம் நீக்கிய பரதன் பிறந்த
 185       ஆய்பெருந் 
 தொல்குடித் தோன்றி 
 இப்பால்
 மாசில் 
 விஞ்சையர் மலைஅகந் 
 தழீஇ
 ஆழி உருட்டி என்வயின் 
 வரூஉம்
 ஊழி இதுவென உணரக் கூறி
 | உரை | 
 
 |  | 
 
 |  |               
 ஆய வெள்ளத்து அவனை அழைத்தே190        குறையா இருந்தவக் கிழவனை 
 நோக்கி
 மன்னிய வத்தவன் தேவி 
 வயிற்றுள்
 துன்னினை படுநாள் இன்னது 
 ஆதலின்
 ................................................
 | உரை | 
 
 |  | 
 
 |  | ......................நூலவன் 
 உரைப்ப மேலையம் பாற்கடல் வெள்ளேறு கிடந்த
 195        வாலிதழ் நறுமலர் வைகறை 
 யாமத்துக்
 கனவின் 
 மற்றவன் கையில் 
 கொடுத்து
 வினையின் 
 எதிர்பொருள் விளங்கக் 
 காட்டென
 இந்திரன் 
 விடுத்த காலை 
 வந்தவன்
 பைந்தளிர்க் 
 கோதைப் பத்திரைக்கு அளிப்ப
 | உரை | 
 
 |  | 
 
 |  | 200       ஒள்அரி 
 மழைக்கண் தேவியை 
 உள்ளிநீ பள்ளி 
 கொண்டுழிப் பரிவுகை 
 அகல
 வெள்ளிய 
 நறும்பூத் தந்தனள் 
 விளங்கிழை
 ஆர்வ 
 உள்ளம் உடையோர் 
 கேண்மை
 தீர்வதன்று 
 அம்ம தேர்ந்துணர் வோர்க்கே
 | உரை | 
 
 |  | 
 
 |  | 205       ஆயினும் 
 அக்குறை முடித்தல் 
 ஆற்றுவென் தானவள் 
 தந்தனள் தளிரியல் 
 ஆதலின்
 இதுவும் 
 நன்னயஞ் சிறிதென 
 அதனைத்
 தான்வெளிப் 
 படாஅள் இன்னும் 
 நுனக்கோர்
 வான்வெளிப் 
 படூஉம் வாரி விழுப்பொருள்
 210        தருதல் வேட்கை ஒருதலை 
 உடையள்
 | உரை | 
 
 |  | 
 
 |  | ஆனாக் 
 கடுந்திறல் அண்ணல் 
 அதனால் மேனாள் 
 கிழமை விண்ணவர் 
 மகளை
 மனத்தின் 
 உள்ளி மந்திரம் 
 கூறி
 நினைத்த பொழுதின் நின்முனர்த் தோன்றும்
 215        தோன்றிய பின்னர்த் 
 தோன்றலைத் 
 தந்த
 மகனது 
 வரவும் முறைமையின் 
 உணர்த்துநீ
 அகனமர்ந்து 
 உரைத்த வயாஅ 
 அரும்பொருள்
 இற்றென 
 உரைத்தலும் முற்றிழை 
 தீர்க்கும்
 மற்றிது 
 முடியாது ஆயின் மறித்தும்
 220       வருவல் யானென ஒருபதங் 
 கொடுத்துக்
 | உரை | 
 
 |  | 
 
 |  | குறிகொள் மாற்றங் கொள்ளக் 
 கூறிச் சென்றியான் வருவல் செம்மல் 
 போற்றெனக்
 குன்றா 
 நன்மொழி ஒன்றல பயிற்றிக்
 | உரை | 
 
 |  | 
 
 |  |              
 கடிகமழ் மார்ப கவலல் என்று225        தொடியுடைத் தடக்கையின் 
 தோழனைப் 
 புல்லிப்
 பசும்பொன் 
 பல்கலம் பல்லூழ் 
 இமைப்ப
 விசும்பின் 
 மின்என மறைந்தனன் விரைந்துஎன்.
                3. 
 இயக்கன் போனது முற்றிற்று 
 | உரை | 
 
 |  |  |  |