| 4. வயாத் 
 தீர்ந்தது   | 
 
 | இதன்கண் : உதயணன் செயலும், 
 அமைச்சர் செயலும், தச்சர் மறுத்தலும், பத்திராபதி தச்சஉருவங் கொண்டு வருதலும், 
 உதயணனுக்கு உருமண்ணுவா அறிவித்தலும், உதயணன் உடம்படலும், உருமண்ணுவாவின் செயலும், 
 பத்திராபதி எந்திரம் அமைத்துத் தருதலும், உதயணன் முதலியோர் எந்திரத்திலேறிச் 
 செல்லலும் கூறப்படும். | 
 
 |  | 
 
 |  |               
 விசும்பின் மின்என விரைந்தனன் 
 மறைந்தபின்பசும்பொன் பைந்தார்ப் பனிமதி 
 வெண்குடை
 ஒன்றிய ஒழுக்கின் உதயண 
 மன்னன்
 குன்றகச் சாரல் குளிறுபு வீழ்ந்த
 5          இரும்பிடித் 
 தோற்றமும் இறுதியும் 
 கேட்டு
 விரும்பிய உள்ளமொடு விரைந்தனன் இருந்தபின்
 | உரை | 
 
 |  | 
 
 |  | அருமறை விச்சைப் பெருமறை 
 தொடங்கி வடிக்கண் மாதர் வருத்தம் 
 நோக்கி
 நெடிக்கும் அவாவென நெஞ்சின் நினைஇ
 10          உள்ளத்து அன்னாட்கு 
 உள்ளழிந்து 
 உயிரா
 வள்ளிதழ் நறுந்தார் வத்தவன் உரைப்பத்
 | உரை | 
 
 |  | 
 
 |  |              தீரும் 
 வாயில் தேர்தும் 
 யாமெனப்பேரிய லாளர் பிறிதுதிறங் 
 காணார்
 முயற்சியின் 
 முடியாக் கருமம் இல்லென
 15         நயத்தகு நண்பின் 
 நாடுதொறும் 
 நாடித்
 தச்ச 
 மாக்களை எச்சார் 
 மருங்கினும்
 ஆணையில் தரீஇ அரும்பெறல் 
 தேவி
 பேணிய வசாநோய் தீர 
 வேண்டிச்
 சேயுயர் விசும்பில் செல்லும் எந்திரம்
 20         வாய்மையில் புணரும் 
 வல்விரைந்து என்றலின்
 | உரை | 
 
 |  | 
 
 |  | நீர்சார் 
 பாக ஊர்பவும் 
 மரத்தொடு நிலஞ்சார் 
 பாகச் செல்பவும் 
 அலங்குசினை
 இலைசார் பாக இயல்பவும் 
 என்றிந்
 நால்வகை மரபின் அல்லதை நூல்வழி
 25        ஆருயிர் கொளினும் அதுஎமக் 
 கரிதெனச்
 சார்புபிறிது 
 இன்மையில் சாற்றுவனர் இறைஞ்ச
 | உரை | 
 
 |  | 
 
 |  | அந்தர 
 விசும்பின் அறிவனள் 
 நோக்கி இவருரு வாகி இவ்வினை 
 முடிப்பலென்று
 அமருரு ஒழித்துச் சென்றனள் 
 குறுகிக்
 30         
 களைகண் நீகுவென் கையறல் 
 ஒழிகெனத்
 தளைஅவிழ் தாமமொடு தச்சுவினைப் 
 பொலிந்தஓர்
 இளையனில் தோன்றி இவர்களை 
 அலைத்தல்
 வேண்டா விடுக விரைந்தென உரைத்தலின்
 | உரை | 
 
 |  | 
 
 |  | பூண்தாங்கு 
 அகலத்துப் புரவலன் குறுகி 35        உருமண் ணுவாவும் பெருவிதுப் 
 பெய்திக்
 கண்ணியன் 
 கழலினன் கச்சினன் 
 தாரினன்
 வண்ண 
 ஆடையன் வந்திவண் 
 தோன்றித்
 தச்சுவினைப் 
 பொலிந்த விச்சையின் 
 விளங்கி
 என்னே 
 மற்றிவர் அறியார் ஒழிகெனத்
 40        துன்னிய துயரம் துடைப்பான் 
 போன்றனன்
 மன்னருள் 
 மன்னன் மறுமொழி 
 யாதென
 | உரை | 
 
 |  | 
 
 |  | விருப்புறு 
 நெஞ்சின் வியந்துவிரல் 
 நொடித்தவன் உரைப்பவை 
 எல்லாம் ஒழியாது 
 ஆற்றி
 நெடித்தல் 
 செல்லாது அரியவை ஆயினும்
 45        கொடுத்தல் குணமெனக் 
 கோமகன் 
 அருளி
 விடுத்தலில் 
 போந்து வேணவா 
 முடித்தற்கு
 உரிய 
 முறைமையின் உரிய கொடுப்ப
 | உரை | 
 
 |  | 
 
 |  | நிறையுடன் 
 கொண்டோர் மறைவிடங் 
 குறுகிச் சின்னாள் 
 கழிந்த பின்னாள் எல்லையுள்
 50        அமைவுநனி காண்கென்று ஆங்கவன் 
 உரைப்ப
 | உரை | 
 
 |  | 
 
 |  | உமையொடு 
 புணர்ந்த இமையா 
 நாட்டத்துக் கண்அணங்கு 
 அவிரொளிக் கடவுளைப் 
 போலத்
 தடவரை 
 மார்பன்..................
 தானும் 
 தேவியும் தகைபெற ஏறி
 55        வானோர் கிழவனின் வரம்பின்று 
 பொலியத்
 தேனார் 
 கோதையொடு திறவதின் இருப்ப
 | உரை | 
 
 |  | 
 
 |  | உருமண் 
 ணுவாவுடம் னேறு 
 அதற்குத் தெருமரல் 
 எய்திச் செய்திறம் 
 அறியான்
 என்துணைக்கு 
 உற்ற நோயும் இதுவென
 60         வென்றடு தானை வேந்தன் 
 விரும்பித்
 தச்சனை 
 நோக்கி மெச்சுவனன் 
 ஆக
 ஏறுக இருவரும் என்றவன் 
 உரைத்தலின்
 வீறுபெறு 
 விமானத்து விரைந்தவர் ஏறலும்
 | உரை | 
 
 |  | 
 
 |  | மற்றை மூவரும் கொற்றவன் குறுகி 65        விசும்பாடு ஊசலின் வேட்கை 
 தீர்க்கெனப்
 பசும்பொன் 
 கிண்கிணிப் பாவையர் 
 எல்லாம்
 ஒல்லா 
 நிலைமைகண்டு உரைத்தனம் 
 யாமென
 வெல்போர் வேந்தனும் விரும்பினன் 
 ஆகித்
 தச்சன் ஆயவன் தன்னை நோக்கி
 70        அச்சின் அமைதி அறியக் கூறென
 | உரை | 
 
 |  | 
 
 |  | உலகம் எல்லாம் ஏறினும் 
 ஏறுக பலர்புகழ் வேந்தே என்றவன் 
 பணிதலும்
 உவந்த 
 உள்ளமொடு நயந்துடன் 
 இவர
 வடுத்தீர் குருசிற்கு அறிய மற்றவன்
 75        கடுப்பும் தவிர்ப்பும்நின் 
 உளத்துள் 
 ளனவென
 தோடலர் 
 தாரோன் தோன்றக் கூறி
 | உரை | 
 
 |  | 
 
 |  | ஏறும் இடமும் இழியும் 
 வகையும் ஆறுந் 
 தீபமும் அடையா 
 விடனும்
 கூறுவனன் நோக்கிக் குறிக்கொளற்கு அமைந்த
 80        இலக்கண வகையும் இதுவென 
 விளக்கி
 நலத்தக மறையாது நன்கனம் விரித்தபின்
 | உரை | 
 
 |  | 
 
 |  | விளங்கொளி விமானம் வெங்கதிர்ச் 
 செல்வன் துளங்கொளி தவிர்க்குந் தோற்றம் 
 போல
 நாளும் நாளும் நன்கனம் ஏற்றி
 85        ஊழி னூழி னுயர 
 வோட்டிக்
 கோளுங் குறியுங் கொண்டனன் 
 ஆகி
 முகிலுளம் கிழிய அகலப் 
 போகி
 வடக்கும் மேற்கும் வானுற 
 நிமிர்ந்து
 தொடக்கொடு தொடர்ந்த தாமம் துயல்வர
 | உரை | 
 
 |  | 
 
 |  | 90        ஏற்றரு 
 மலையும் செலற்குஅருந் 
 தீவும் நோற்றவர் உறையும் ஆற்றயற் 
 பள்ளியும்
 பதினாறு ஆயிரம் பரந்த 
 செல்வத்து
 விதிமாண் தந்தை வியனாடு 
 எய்தலும்
 ஐயமோடு இவனும் அமரர்ஊ ராமெனக்
 95        கைவயின் கொண்டு காழகில் 
 நறும்புகை
 பலிவீடு எய்திப் பரவுவனன் 
 ஒத்துக்
 கலிகொல் மன்னன் கழலடிக் 
 கணவாக்
 கணையில் தேறிக் கலந்துகண் 
 உறாது
 பணைவேய் மென்தோட் பதுமா தேவி
 100        நன்னகர் குறுகலின் நயந்துமுகம் 
 நோக்கிப்
 | உரை | 
 
 |  | 
 
 |  | பொன்னிழை இந்நகர் புகுது 
 மோவென வேண்டா என்றபின் மீண்டுமேக் 
 கோங்கி
 நாளும் நாளும் நன்கன 
 ஓட
 யாழின் கிழவன் இங்ஙனம் நினைஇ
 105       ஊழின் ஊழின் உள்ளம் 
 ஊக்கிக்
 கோளுங் குறியுங் கொண்டனன் 
 ஆகி
 முகிலுளம் கிழிய அகல்விசும்பு 
 ஒறி
 எழுச்சி எல்லை முனிந்த பின்னர்
 | உரை | 
 
 |  | 
 
 |  | விழுச்சீர் விசும்பின் இயங்குதற்கு அறிதலின் 110       மூரிப் பசும்பொன் மால்வரை 
 கண்ணுற்று
 ஓசனை இழிந்து முகடுவலஞ் 
 செய்து
 துகள்தீர் பெருமைச் சேதியந் 
 தொழுது
 விதியிற் போதல் மேவினன் ஆகி
 | உரை | 
 
 |  | 
 
 |  |             
 எறிவளி எடுப்ப எழுந்துநிலங் கொள்ளும்115       வெதிரிலை வீழ்ச்சியின் வேண்டிடத்து 
 அசைஇ
 வினைகொள் விஞ்சை வீரியர் 
 உலகின்
 புனைவமை நகரமும் பூந்தண் 
 காவும்
 நிறைப்பருங் காட்சி இயற்கைய 
 வாகிச்
 சென்றுசேண் ஓங்கிய சேதி எங்கணும்
 120       ஒன்றே போல்வன ஒருநூ 
 றாயிரம்
 வந்தனை செய்குநர் பூசனைக் களரியும்
 | உரை | 
 
 |  | 
 
 |  | கிளர்சேண் இமயமுங் கெங்கையுஞ் 
 சிந்துவும் வளமலர்க் கயமும் மணிநிலப் 
 பூமியும்
 மேதகு மேருவும் அதன்மிசைக் காவும்
 125       சிந்துவுஞ் சீதையுஞ் சீதோ 
 தகையும்
 அந்தமில் விதையமும் அணிதிக 
 ழந்தியும்
 தேவ குருவும் உத்தர 
 குருவும்
 ஈரைந் திரதமும் இறுதி 
 யாக
 மனத்தினும் வளியினும் மிசைப்பி னோட்டி
 | உரை | 
 
 |  | 
 
 |  | 130       எச்சார் மருங்கினும் 
 இனிதி 
 உறையும் விச்சா தரரின் விதியினைக் 
 காட்டி
 விராய்மலர்க் கோதையர் ஊராஅ 
 ஊக்கமொடு
 ஓருங்குபல கண்டு விரும்புவன 
 ராகி
 அசும்புசோர் முகிலுடை விசும்புபோழ்ந்து இயங்கிய
 135      அப் பால் எல்லை முடிந்தபின் இப்பால்
 | உரை | 
 
 |  | 
 
 |  | அவந்திகை 
 நாடும் அணியுஞ் 
 சேனையும் மலைமருங்கு உறையும் மழகளிற்று 
 ஈட்டமும்
 கலைமான் ஏறுங் கவரியுங் 
 களித்த
 அருவித் தலையும் அணிமலை இடமும்
 140      குளிர்பொழில் சோலையும் குயில்தொகைப் 
 பரப்பும்
 மயில்விளை யாட்டும் மான்கண 
 மருட்சியும்
 புயல்வளம் 
 படுக்கும் பொருவில் 
 வளமை
 அவந்தி 
 நாடும் இகந்துமீ தியங்கித்
 | உரை | 
 
 |  | 
 
 |  | தண்டா 
 ரணியமுந் தாபதப் பள்ளியும் 145       வண்டார் சோலையும் வளங்கெழு 
 மலையும்
 மயிலாடு சிமையப் பொதியிலும் அதன்மிசைக்
 குளிர்கொள் சந்தனத்து 
 ஒளிர்மலர்க் 
 காவும்
 காவின் 
 நடுவண வாவியுங் 
 கதிர்மணித்
 தேவ குலனுந் தென்பால் 
 இலங்கையும்
 150       ....................காண்டகப் 
 பொலிந்த
 அராஅந் தாணமும் அணிமணல் 
 தெண்டிரைக்
 குமரித் துறையும் அமர்வனர் நோக்கி
 | உரை | 
 
 |  | 
 
 |  |            விண்ணவும் 
 மலையவும் மேவன 
 பிறவும்ஒண்ணுதல் மாதர் உவப்பக் காட்டி
 155     
  நற்றுணைத் தோழர் நால்வருந் 
 தானும்
 பொற்றொடி மாதரும் போதுபல 
 போக்கித்
 தன்னர்க் காகிய அருங்கலந் தழீஇ
 நன்னகர்ச் செல்வமும் மெலிவு 
 நோக்கி
 உரிமைத் தேவி யுறுநோய் நீக்கிப்
 160      பொன்னகர் புக்கனன் புகழ்வெய் 
 யோன்என்.
                 4. 
 வயாத் தீர்ந்தது முற்றிற்று    | உரை | 
 
 |  |  |  |