| 6. நரவாணதத்தன் 
 பிறந்தது   | 
 
 | இதன்கண் : நரவாணதத்தன் 
 பிறத்தலும், அவன் பிறந்த நாட் சிறப்பும், பிறந்த நாட்கணிப்பும், யாவருக்கும் 
 பரிசளித்தலும், உதயணன் தன் தம்பி முதலியோர்க்குச் செய்திகூறி விடுத்தலும், 
 பெயரிடலும், உருமண்ணுவா முதலியோரின் மக்கட்குப் பெயரிடலும், நகரமாந்தர் மகிழ்ந்து 
 கூறுலும், கூறப்படும். | 
 
 |  | 
 
 |  |               
 புனைஇழை தன்நகர் புக்கபின் இப்பால்துனைசேர் 
 நெடுந்தேர் துவன்றிய 
 தானை
 வத்தவர் பெருமகன் வானோர் 
 விழையும்
 அத்தகு சிறப்பின் வந்தியன் மடமகள்
 5          உசாவின் அன்ன 
 நுண்இடை 
 உசாவினைப்
 பேதைக் குரைப்போன் பிழைப்பிற்று 
 ஆகிய
 பொற்பமை சுணங்கில் பொம்மல் 
 வெம்முலைப்
 பட்டத் தேவியைப் பதுமையின் 
 நீக்கி
 முட்டில் செல்வமொடு முறைமையில் பிழையாது
 10          ஒழுகா நின்ற 
 வழிநாள் காலைப்
 | உரை | 
 
 |  | 
 
 |  | பிறைபுரை திருநுதல் அஃகப் 
 பிறையின் குறைவிடந் தீர்ந்த கொள்கை 
 போலத்
 திருவயிற்று வளர்ந்த திங்கள் 
 தலைவர
 ஒருமையில் தீயவை நீங்கப் பெருமையின்
 15          முழுநோக் காக 
 ஐம்பெருங் 
 கோளும்
 வழுவா வாழ்நாள் மதியொடு 
 பெருக்கிப்
 பெருஞ்சிறப்பு அயர்வர நல்கி 
 ஒழிந்துழி
 நோக்கி 
 மற்றவை ஆக்கம் பெருகப்
 | உரை | 
 
 |  | 
 
 |  |              பகைமுதல் 
 சாயப் பசிபிணி நீங்க20        மாரியும் விளையுளும் வாரியும் 
 சிறப்ப
 வழுக்கா வாய்மொழி வல்லோர் 
 வாழும்
 விழுத்தகு வெள்ளி வியன்மலை 
 விளங்கத்
 திருத்தகு தேவி வருத்தம் 
 இன்றிப்
 பொய்கைத் தாமரைப் பூவின் உறையும்
 25        தெய்வத் திருமகள் சேர்ந்துமெய் 
 காப்பப்
 | உரை | 
 
 |  | 
 
 |  | பொய்யில் 
 பொருளொடு புணர்ந்த 
 நாளால் தெய்வ விளக்கந் திசைதொறும் 
 விளங்க
 ஐவகைப் 
 பூவும் பல்வகை 
 பரப்ப
 மதிஉறழ் சங்க நிதியம் சொரிய
 30         அந்தர விசும்பின் 
 ஆழிக் 
 கிழவன்
 வந்துடன் பிறந்தனன் பிறந்த பின்றைச்
 | உரை | 
 
 |  | 
 
 |  | சிறந்தோர் நாப்பண் சேதியர் 
 பெருமகன்கு அறஞ்சேர் நாவின் அவந்திகை 
 திருவயிற்று
 அரியவை 
 வேண்டிய வசாவொடு 
 தோன்றிப்
 35         பெரியவர் 
 ஏத்தப் பிறந்த 
 நம்பிக்கு
 உதையண 
 குமரன் துதைத்தார்த் 
 தோழரும்
 அகன்அமர் 
 அவையு ஐம்பெருங் 
 குழுவும்
 நகரமும் நாடும் தொகைகொண்டு ஈண்டி
 | உரை | 
 
 |  | 
 
 |  | ஆயுள் தானம் யாவைஎன் 
 னாது 40         மேயவை 
 எல்லாங் காவலன் 
 வீசி
 முத்துமணல் 
 பரந்த நற்பெருங் 
 கோயில்
 முற்றந் 
 தோறும் முழங்குமுரசு 
 இயம்பப்
 பொலிகெனும் 
 மாந்தர்க்குப் புறங்கடை 
 தோறும்
 மலிபொன் 
 மாசையும் மணியும் 
 முத்தும்
 45         ஒலியமை 
 தாரமு மொளிகால் 
 கலங்களும்
 கோடணை இயற்றிக் கொடையொடு 
 புரிகென
 ஆய்புகழ் வேந்தன் ஏயினன் ஆகிக்
 | உரை | 
 
 |  | 
 
 |  | கொலைச்சிறை 
 விடுக தளைச்சிறை 
 போக்குக கொற்றத் தானையொடு கோப்பிழைத்து 
 ஒழுகிய
 50         குற்ற 
 மாந்தரும் கொடிநகர் 
 புகுதுக
 அருங்கடி நகரமும் நாடும் 
 பூண்ட
 பெருங்கடன் விடுக இருங்கடல் 
 வரைப்பின்
 நல்குரவு அடைந்த நசைசால் 
 ஆடவர்
 செல்லல் தீரவந்து உள்ளியது கொள்க
 | உரை | 
 
 |  | 
 
 |  | 55         பொருந்தா 
 மன்னரும் பொலிகெனுங் 
 கிளவி பெருந்திறை ஆக விரைந்தனர் 
 வருக
 நிலைஇய சிறப்பின் நாட்டுளுங் 
 காட்டுளும்
 கொலைவினை கடிக கோநகர் 
 எல்லாம்
 விழவொடு புணர்ந்த வீதிய ஆகெனப்
 60         பெருங்கை யானைப் 
 பிணர்எருத் 
 தேற்றி
 இருங்கண் அதிரப் பொற்கடிப்பு 
 ஓச்சிப்
 பெருங்கண் வீதிதொறும் பிறபுலம் 
 அறிய
 இன்னிசை முரசம் மியமர மெருக்க
 | உரை | 
 
 |  | 
 
 |  |             மன்னிய 
 சும்மையொடு மகாஅர் துவன்றி65         வல்லோர் வகுத்த 
 மாடந் 
 தோறும்
 நல்லோர் எடுத்த பல்பூம் 
 படாகை
 ஈர்முகில் உரிஞ்சி எறிவளிக்கு 
 எழாஅச்
 சீர்மைய ஆகிச் சிறந்துகீ 
 ழெழுந்த
 நேர்துகள் அவித்து நிரந்துடன் 
 பொலிய
 70        மையார் 
 யானை மன்னரொடு 
 மயங்கி
 நெய்யாட்டு அரவமும் நீராட் 
 டரவமும்
 மறப்போர் 
 உதயணன் மகிழ்ந்த பின்னர்ப்
 | உரை | 
 
 |  | 
 
 |  | பிறந்த 
 நாளும் பெற்ற 
 மூர்த்தமும் சிறந்த நற்கோள் உயர்ந்துழி 
 நின்று
 75         வீக்கஞ் 
 சான்றதும் விழுப்பம் 
 அறாத
 ஆக்கஞ் சான்ற ஆருயிர் 
 ஓகையும்
 நோக்கி யவரும் நுகருஞ் 
 செல்வத்து
 யாண்டுந் 
 திங்களுங் காண்டகு 
 சிறப்பின்
 பக்கமுங் கோளும் உட்கோள் 
 அளைஇ
 80         
 இழிவும் இவையென இசைய 
 நாடி
 வழியோர் அறிய வழுவுதல் 
 இன்றிச்
 சாதகப் பட்டிகை சாலவை 
 நாப்பண்
 அரும்பொறி நெறியின் ஆற்ற 
 அமைத்த
 பெருங்கணிக் குழுவுக்குப் பெறுதற்கு 
 ஒத்த
 85         
 ஈரெண் கிரிசை யியல்புளி நடாஅய்
 | உரை | 
 
 |  | 
 
 |  | ஆரியல் 
 அமைநெறி அரசன் 
 தன்னுரை ஏத்திய லாளருங் கூத்தியர் 
 குழுவும்
 கோயில் மகளிரும் கோப்பெரு 
 முதியரும்
 வாயில் 
 மறவரும் சாயாச் 
 செய்தொழில்
 90         
 கணக்கருந் திணைகளும் காவிதிக் 
 கணமும்
 அணித்தகு மூதூர் ஆவண 
 மாக்களும்
 சிறப்பொடு புணரும் மறப்பெருங் 
 குழுவும்
 ஏனோர் 
 பிறர்க்கும் இவையென 
 வகுத்த
 அணியும் ஆடையு மணியு நல்கித்
 | உரை | 
 
 |  | 
 
 |  | 95         தணியா 
 இன்பந் தலைத்தலை 
 பெருகத் தம்பியர் தமக்கும் தருசகன் 
 தனக்கும்
 நங்கையைப் பயந்த நலத்தகு சிறப்பின்
 உரத்தகு தானைப் 
 பிரச்சோ 
 தனன்கும்
 உவகை போக்கி யூகியும் 
 வருகெனத்
 100         தவிர்வில் 
 செல்வம் தலைவந்து 
 ஈண்ட
 ஆசான் முதலா வந்த 
 ணாளரும்
 மாசில் வேள்வி மகிழ்ந்தனர் 
 தொடங்கி
 ஏனை 
 வகையின் மேனிலை 
 திரியாது
 பன்னிரு நாளும் பயத்தொடு கழிப்பிப்
 | உரை | 
 
 |  | 
 
 |  | 105         
 பெயர்நிலை பெறீஇய பெற்றி 
 நாடி உயர்நிலை உலகின் உலோக 
 பாலன்
 நயமிகு சிறப்பொடு நகர்மிசைப் 
 பொலிந்த
 பலர்புகழ் செல்வன் தந்தன 
 ஆதலின்
 உருவாண மாகிய ஓங்குபுகழ்ச் 
 செல்வன்
 110          நரவாண 
 தத்தன் என்றுபெயர் போக்கி
 | உரை | 
 
 |  | 
 
 |  | உறுவிறல் தானை உருமண் 
 ணுவாவும் அறிநரை வழிபட்டு அன்றே 
 பெயர்தலின்
 ..................................................................
 பொருவின் மாக்கள் பூதிஎன் 
 றுரைஇ
 ஒழிந்த மூவர் உருவார் 
 குமரருள்
 115          கழிந்தோர் 
 ஈமத்துக் கட்டழல் 
 சேர்ந்த
 கரியகல் ஏந்திக் காவயின் 
 பெற்றோன்
 அரிசிக னாகப் பெயர்முதல் 
 கொளீஇப்
 பயந்தலை நிற்கும் பல்கதிர்ச் 
 செல்வன்
 நயந்துதரப் 
 பட்டோன் தவந்தகன் 
 ஆமெனத்
 120          
 தாயர் போலத் தக்கது 
 நாடிய
 ஆவழிப் படுதலின் ஆகிய 
 இவனே
 கோமுகன் என்று குணங்குறி 
 யாக
 மற்றவர் மகிழ்ந்து...........................
 | உரை | 
 
 |  | 
 
 |  | .....................தொன்னகர் 
 ஆளரும் 125         
 பெற்றனம் பண்டே பெருந்தவம் 
 என்மரும்
 இன்னோர் அன்ன எடுத்துரை 
 சொல்லித்
 தன்னோர் அன்ன தன்மையன் 
 ஆகி
 மதலை மாண்குடி தொலைவழி 
 ஊன்றும்
 புதல்வன் பெற்றான் எனப்புகழ் 
 வோரும்
 130         
 உதவி நண்ணரும் உதயண 
 குமரன்
 போகமும் பேரும் புகழ்மேம் 
 பட்டதும்
 ஆகிய அறிவின் அரும்பெறல் 
 சூழ்ச்சி
 யூகியின் அன்றோ எனவுரைப் 
 போரும்
 குறிகோள் கூறிய நெறிபுகழ் வோரும்
 | உரை | 
 
 |  | 
 
 |  | 135        வெண்முகில் ஒழுகிய 
 வெள்ளியம் 
 பெருமலை உண்முதல் உலகிற்கு ஒருமீக் 
 கூறிய
 தெய்வ வாழி கைவலத்து 
 உருட்டலும்
 பொய்யாது 
 ஆதல் உறுபொருள் 
 என்மரும்
 இவையும் பிறவும் இயைவன கூறி
 | உரை | 
 
 |  | 
 
 |  |   140        நகரத் தாளரொடு 
 நாடுபுகழ்ந்து 
 ஏத்தநிகரில் செல்வத்து நிதியம் 
 தழீஇ
 யாப்புடை மகன்வயின் காப்புடன் 
 புரிகென
 விதிஅறி மகளிரொடு மதிபல 
 நவின்ற
 மருந்துவகுப் பாளரைப் புரந்துறப் 
 பணித்துத்
 145         
 தளர்வில் ஊக்கந் தலைத்தலை சிறப்ப
              6. 
 நரவாணதத்தன் பிறந்தது
 | உரை | 
 
 |  |  |  |