8. மதனமஞ்சிகை
வதுவை
|
இதன்கண் : யூகி உதயணனுக்குக்
கூறலும், உதயணன் செயலும், நரவாணதத்தனுடைய இளமைப் பருவமும், நரவாணதத்தனது
காளைப்பருவமும், கணிகையர் இயல்பும், கலிங்கசேனையும், மதனமஞ்சிகை பந்தாடுகையில்
பந்து கீழே விழுதலும், நரவாணதத்தன் உலா வரலும், நரவாணதத்தன் மதனமஞ்சிகையைக் கண்டு
விரும்பலும், நரவாணதத்தன் கோமுகனை வினாதலும், கோமுகன் மதனமஞ்சிகையின் உருவத்தை
எழுதுவதும், கோமுகன் மதனமஞ்சிகை வீடு சென்று பரிசங் காட்டலும், பரத்தையர் செயலும்,
கோமுகன் கூறலும், உதயணன் மதனமஞ்சிகைக்குப் பொன் விடுத்தலும் நரவாணதத்தன் மணமும்
கூறப்படும். |
|
|
நலம்பெறு
நகரம் புக்கனன்
ஆகி
நிலம்பெறு திருவின் நெடுமுடி
அண்ணலைக்
கண்டுகண் கூடிக் கழலுறப்
பணிந்து
மண்டமர்க் கடந்த மறமாச் சேனன்
5 உள்ளத்து அன்ன உவகைசெய்
தனவும்
வள்ளல் தனமும் வகுத்தனன் கூறி |
உரை |
|
|
அவந்தி
நாடும் அணியுஞ்
சேனையும்
இயைந்து முந்துறீஇ இருபால்
குலனும்
தெம்முன் இழியாத் தெளிவிடை யாகச்
10 செம்மையின் செய்த செறிவும்
திண்மையும்
நம்பிக்கு ஈத்த நன்புகழ்
நாடும்
இன்னவை என்று பன்முறை பயிற்றி |
உரை |
|
|
நாட்டு
வாயுளுங் காட்டு
வாயுளும்
கரத்தல் இன்றிப் பரத்தல் நன்றெனத்
15 தாமுடை நாடும் நகரமும்
தரீஇ
வாய்முறை வந்த வழக்கியல்
வழாமை
ஏட்டுமிசை எற்றி இயல்பினின்
யாப்புறுத்து
ஆற்றல் சான்ற அரும்பெறல்
சுற்றமொடு்
கூற்றமும் விழையக் கோல்இனிது ஓச்சிக் |
உரை |
|
|
20 கோட்டம்
இன்றிக் குடிபுறங்
காத்து
வாள்தொழில் தானை வத்தவர்
பெருமகன்
அன்புடைத் தோழரோடு இன்புற்று
ஒழுகச்
சிறந்த திருவொடு செல்வம்
பெருகப்
பிறந்த நம்பி திறங்கிளந்து உரைப்பேன் |
உரை |
|
|
25
குலக்குவிளக் காகத் தோன்றிக்
கோலமொடு நலத்தகு
சிறப்பின் நல்லோர்
நாப்பண்
இலக்கணம் பொறித்த வனப்புடை
யாக்கையன்
விசும்பிற்கு அவாவும் வேட்கையன்
ஆகிப்
பசும்பொன் பல்படை இலங்குங் கழுத்தினன்
30 திருஆ ணாய தேங்கமழ்
மார்பன் நரவாண
தத்தன் நள்தொறும் நந்தி |
உரை |
|
|
உலம்பொரு மார்பின் உதயண
குமரன்
நலம்பெறு தோழர் நால்வரும்
பெற்ற
வலம்பெறு சிறப்பின் வனப்பொடு புணர்ந்த
35 நலம்பெறு கோமுகன் நாம
வரிசிகன்
தகைமிகு பூதி தவந்தகன்
என்னும்
நன்னர் அமைந்த நால்வருஞ்
சூழத் |
உரை |
|
|
தளர்நடைக் காலத்து இளமை
இகந்து
நல்ஆ சாரமொடு நல்லோர் காட்ட
40 நற்பொருள் ஞானம் நவின்றுதுறை
போகி
விற்பொருள் நன்னூல் விதியின்
நுனித்துப்
படைக்கலக் கரணம் பல்வகை
பயிற்றிக்
கொடைக்கடம் பூண்ட கொள்கைய னாகிக் |
உரை |
|
|
குறைவில் செல்வமொடு குமார காலம்
45 நிறையுற உய்த்து நீர்மையின்
வழாஅ
ஏமஞ் சான்ற இந்நில
வரைப்பின்
காமன் இவனெனக் கண்டோர்
காமுறத்
தாளுந் தோளுந் தருக்கி
நாளும்
நடவா நின்ற காலை மடனார்ந்து |
உரை |
|
|
50 ஈற்று மந்தி
இற்றெழு
பூங்கொடி புற்புல
முதிரக நல்துற
விக்கே
போல்வர் என்னுஞ் சால்வுடை
ஒழுக்கிற்
கலைதுறை போகிய கணிகா
சாரத்துப்
பலதுறை பயின்று பல்லுரைக் கேள்வியொடு
55 படிவம் குறிக்கும் பாவனை
மேற்கொண்டு
அடிமையிற் பொலிந்த வகன்பரி
யாளத்துத்
தலைக்கோல் சிறப்பின் அலத்தகு
மகளிர்
ஆயிரத்து இரட்டி ஐந்நூற்
றுவர்களுள் காசில்
சிறப்பிற் கலிங்க சேனையென்று
60 ஓசை போகிய ஒளியின
ளாகிய
மாசில் கற்பின் மடமொழி மடமகள் |
உரை |
|
|
வானோர்
உலகின் அல்லது
மற்றவட்கு
ஈனோர் உலகின் இணைதான் இல்லெனக்
கண்டோர் ஆயினுங் கேட்டோர்
ஆயினும் 65 தண்டாது
புகழுந் தன்மையள்
ஆகித்
துதைபூங் கோதை சுமத்தல்
ஆற்றா
மதர்மான் நோக்கின் மாதர்அம்
சாயல்
பதரில் பணிமொழிப் பணைத்தோள்
சின்னுதல்
மதர்வை நோக்கின் மதனமஞ் சிகைதன்
70 மலைபுரை மாடத்து உயர்நிலை
மருங்கின்
அணிச்சா லேகத்து அணித்தகு
துளையூடு
எறிபந்து இழுக்குபு விழுதலின் நோக்கிச் |
உரை |
|
|
செறிவளைத் தோளி செம்முக
மாக
வேகத் தானை வேந்தன் ஒருமகன்
75 போகுகொடி வீதியில் புகுந்துபலர்
ஏத்த
அருவரை மருங்கின் அருவி
போல
இருகவுள் மருங்கினுஞ் சொரிதரு
கடாத்ததோர்
இடுமணி யானை எருத்தம்
ஏறிப்
படுமுகில் மீமிசைப் பனிமதி போல
80 உலாஎனப் போந்தோன் நிலாவுறழ்
பூந்துகில்
தானைப் படுதலின் தானே
கொண்டுஇஃது
இட்டோள் ஆர்கொஎன்று எட்டி நோக்கினன் |
உரை |
|
|
நிறைமதி
வாள்முகத்து உறழ்வன
போல
நீளரி ஒழுகி நிகர்தமக் கில்லா
85 வாள்புரை தடங்கண் வளைத்தவள்
வாங்கி
நெஞ்சகம் படுப்ப வெஞ்சின
வீரன்
அறியா மையின் மறுகுறு
சிந்தையன்
பந்துவலி யாகப் பைஎனப்
போகியோர்
அந்தண் காவினுள் அசைந்தனன் இருந்து |
உரை |
|
|
90 கொய்ம்மலர்ப்
படலைக் கோமுகன்
கூஉய்க்
கைபுனை வனப்பில் கணிகையர்
சேரியில்
செய்பந்து ஈதுடைச் சேயிழை
மாதரை ஐய
மின்றி அறிதி
யாயின்
மெய்பெற உரையென மேயினன் வினவக் |
உரை |
|
|
95 கையில் கொண்டோன்
கண்டனன்
அதன்மிசை
ஒற்றிய ஒற்றைத் தெற்றெனத்
தெரிந்து
நறுவெண் சாந்தம் பூசிய
கையால்
செறிவுறப் பிடித்தலின் செறிவிரல்
நிரைவடுக்
கிடந்தமை நோக்கி உடங்குணர் வெய்தி |
உரை |
|
|
100 விரலும்
விரலிற்கு ஏற்ற
அங்கையும்
அங்கைக் கேற்ற பைந்தொடி
முன்கையும்
முன்கைக் கேற்ற நன்கமை
தோளும்
தோளிற் கேற்ற வாளொளி
முகமும்
மாப்படு வடுஉறழ் மலர்நெடுங் கண்ணும்
105 துப்பன வாயும் முத்தொளி
முறுவலும்
ஒழுகுகொடி மூக்கும் எழுதுநுண்
புருவமும்
சேடமை செவியும் சில்லிருங்
கூந்தலும்
ஒல்குமயிர் ஒழுக்கும் அல்குல்
பரப்பும்
மருங்கின் நீளமும் நிறங்கிளர் சேவடித்
110 தன்மையும் எல்லாம் முன்முறை
நூலின்
அளந்தனன் போல வளம்பட எழுதிப் |
உரை |
|
|
பாவை
இலக்கணம் பற்றி
மற்றதன்
நிறமும் நீளமும் பிறவுந்
தெரியாச்
செறிதாள் அண்ணலைச் செவ்வியின் வணங்கி
115 இதன்வடி ஒப்போள் இந்நகர்
வரைப்பின்
மதன மஞ்சிகை ஆகுமென வலித்துப் |
உரை |
|
|
பந்துகைக் கொண்டு மைந்தன்
போகிக்
காழார் வனமுலைக் கணிகையர்
சேரித்
தோழன் உள்ளத்து ஆழ்நனி
கலக்கிய 120 மாதர்
மனைவயின் தூதுவன்
ஆகிப்
பல்கால் சென்று மெல்லெனச்
சேர்ந்து
குறிப்புடை வெந்நோய் நெறிப்பட
நாடிய
பாசிழை நன்கலம் பரிய
மாக
மாசில்பந்து அறிவு படமேல்
வைத்தாண்டு 125
ஈன்ற தாய்முதல் தோன்றக் காட்டிப் |
உரை |
|
|
பட்டது
கூறலின் ஒட்டிய
உவகையள் வழிபடு
தெய்வம் வரந்தரு
கின்றென
மொழிவன ளாக முகத்தின்
விரும்பித் தாயுந்
தவ்வையுந் தம்மொடு
பயின்ற 130 ஆய்வளை
மகளிரும் நிகழ்ந்ததை
அறிந்து
சீரின மதித்துச் சிற்றினம்
ஒரீஇப்
பேரினத்து அவரொடு பெருங்கிளை
பிரியாத் தலைக்கோல்
மகளிர் தன்மை கூறிக்
|
உரை |
|
|
கற்கெழு
கானவன் கைக்கோல்
உமிழ்ந்த 135 எற்படு
சிறுதீ எழுச்சியில்
காமம்
மிகுமனத்து உவகையின் ஒல்லை
விருப்பம்
முறையின் முறையின் முறுக
மூட்டிக்
கொடித்தேர்க் கோமான் குறிப்பின்
அல்லதை அடித்தியை
அருளுதல் யாப்பின்று
எமக்கெனப் 140 படிற்றுரை
மகளிர் பரிய மறுப்ப |
உரை |
|
|
இருங்கண்
வையகத்து ஏந்தலும்
உரியன்
மருந்தேர் கிளவி மதனமஞ்
சிகைதன்
காமரு நோக்கங் காணக் கூடும்
ஏம வைகல்
இயல்வதாம் எனினென |
உரை |
|
|
145 அன்றுகை நில்லாது சென்ற
உள்ளமொடு பகல்மதி
போலப் பசந்த குமரன்
இகல்மிசை உள்ளத்து எவ்வங்
கேட்டுத்
தலைப்பெருந் தேவியுந் தந்தையுங்
கூடிக்
குலப்பெருந் தேவியாக் கோடி
விழுநிதி 150 சிறப்பின்விட்
டிருந்து நலத்தகு
கிழமைக்கு யாவரும்
உரியோர் இவளின்
இல்லெனக் காவல்
வேந்தன் காணங் காண்டலின |
உரை |
|
|
உறாஅர்
போல உற்ற
காதலொடு
மறாஅர் மாதர் வதுவை
வலித்தபின் 155 மதிபுரை
முகத்தியை மன்னவன்
ஒருமகன்
வதுவைச் செல்வமொடு வான்றோய்
வியன்நகர்
விதியின் எய்தி விழவு
முந்துறீஇப்
பதனறிந்து நுகருமால் பண்புமிகச் செறிந்துஎன்.
8.மதன
மஞ்சிகை வதுவை
முற்றிற்று
|
உரை |
|
|
|