| 9. மதனமஞ்சிகை 
 பிரிவு   | 
 
 | இதன்கண் : திருவிழாவும் 
 மானசவேகன் வருதலும், மானசவேகன் கண்டகாட்சியும், மானசவேகன் மதனமஞ்சிகையைக் 
 காணலும், மதனமஞ்சிகை பூதவடிவமொன்றைக் கண்டு அஞ்சுதலும், மானசவேகன் எண்ணுதலும், 
 நரவாணதத்தனும் மதனமஞ்சிகையும் இன்புறுதலும், மானசவேகன் மதனமஞ்சிகையை எடுத்துச் 
 செல்லலும் கூறப்படும்................ | 
 
 |  | 
 
 |  |             பதனறிந்து 
 நுகரும் பருவத்து 
 ஒருநாள்கோல 
 நீண்மதில் கொடிக்கோ 
 சம்பி
 ஞாலம் 
 எல்லாம் நயந்துடன் 
 காண
 முழவொடு 
 பல்லியம் முன்றில் ததும்ப
 5        விழவொடு பொலிந்த அழகிற் 
 றாகித்
 திசைதிசை தோறுந் திருக்கண் 
 கூடிய
 வசைஅறு திருநகர் வந்துடன் துவன்றிப்
 | உரை | 
 
 |  | 
 
 |  |             பொன்றா 
 வேட்கைப் புலங்களை 
 நெருக்கிவென்றார் ஆயினும் விழையும் விழவணி
 10        காணும் வேட்கையொடு சேணுயர் 
 உலகில்
 தேவ கணமும் மேவர 
 இழிதர
 விறல்கெழு சிறப்பின் விச்சா 
 தரரும்
 இறைகொண்டு இழிதர இப்பால் சேடியின்
 | உரை | 
 
 |  | 
 
 |  |             நுணங்குவினை 
 விச்சையொடு நூற்பொருள் நுனித்த15       மணங்கமழ் நறுந்தார் மானச 
 வேகன்என்று
 ஆற்றல் சான்ற நூற்றொரு 
 பதின்மர்
 அரைசர் உள்ளும் உரைசெல 
 விளங்கிய
 மின்னார் மணிமுடி மன்னனும் இழிந்து
 | உரை | 
 
 |  | 
 
 |  |             
 பத்திப் படாகையும் பல்பூங் கொடியும்20       சித்திரித் தெழுதிய வித்தக 
 விமானமும்
 இருநிலத் தியங்கு இயந்திரப் 
 பாவையும்
 அருவினை நுட்பத் தியவனப் 
 புணர்ப்பும்
 பொத்தகை யானையும் பொங்குமயிர்ப் 
 புரவியும்
 சித்திர மாலையு மக்கடந் தொட்டிலும்
 25       வெண்தார் ஒழுக்கும் விளக்குறு 
 பூதமும்
 தெரிவுறல் அரிய பலகலக் குப்பையும்
 | உரை | 
 
 |  | 
 
 |  |             
 கைந்நிமிர் 
 விளக்கு...................ம்எண்ணரும் பல்பொறி எந்திரப் 
 பொருப்பும்
 வண்ண.............................................களும்
 30       கண்ணு ளாளர் கைபுனை 
 கிடுகும்
 நாடு நகரமும் ஆடுநர் 
 பாடுநர்
 ஆடலும் பாடலும் அன்னவை 
 பிறவும்
 கூடிக் காணா மாடத்து 
 ஓங்கிய
 தண்கோ சம்பிப் பெண்சனம் நோக்கி
 | உரை | 
 
 |  | 
 
 |  |    35       விண்மிசை யவரும் 
 விழையுங் 
 காரிகைமண்ணியன் மகளிருள் உளள்கொல் 
 மற்றெனச்
 சேணெடுந் 
 தெருவுஞ் சிற்றுஅங் 
 காடியும்
 நாணொடு புணர்ந்த நலம்புணர் 
 மகளிர்
 நெரியுந் தெருவும் நிரம்பிய மறுகும்
 40       மன்றமுங் கோணமுஞ் சென்றுசென்று 
 உலாஅய்
 யாறுகிடந்து அன்ன வீறுசால் 
 வீதிதொறும்
 ஆனாது திரிதரு மானச 
 வேகன்
 | உரை | 
 
 |  | 
 
 |  |             கோலக் 
 கோயிலும் நால்வகை 
 நிலனும்புடைசூழ் நடுவண் பொன்மலர்க் காவின்
 45       இடைசூழ் அருவி ஏந்துவரைச் 
 சென்னி
 ஆய்மயில் அகவும் அணிச்சுதைக் 
 குன்றின்
 மீமிசை மருங்கின் மின்னென 
 நுடங்கிப்
 பழவிறல் மூதூர் விழவணி 
 நோக்கி
 மும்மணிக் 
 காசும் பன்மணித் தாலியும்
 50       பொன்மணிக் கொடியும் பூணுஞ் 
 சுடர
 மதன மஞ்சிகை நின்றோள் கண்டு
 | உரை | 
 
 |  | 
 
 |  | சென்றனன் அணுகி நின்றினிது 
 நோக்கி வெள்ளி விமானம் விதிர்விதிர்த்து ஏறி
 வள்ளி மருங்கின் ஏள்ளிழை 
 யேழையைக்
 55       கச்சார் வனமுலை விச்சா 
 தரியே
 ஆவள் என்னும் ஐயமோடு 
 அயலதோர்
 தேவ மாடஞ் சேர்ந்தனன் இருந்து
 | உரை | 
 
 |  | 
 
 |  |             
 வருவோர்ப் பற்றி வாங்குபு 
 விழுங்கும்இனைய நுட்பத்து யவனர் இயற்றிய
 60       பெருவலிப் பூதத்து உருவுகண்டு 
 உணரார்
 இன்னுயிர் உண்ணுங் கூற்றம் 
 இதுவெனப்
 பொன்னிழை சுடரப் பொம்மென 
 உராஅய்
 மைகொள் 
 கண்ணியர் வெய்துயிர்த்து 
 இரிய
 மாவீழ் ஓதி மதனமஞ் சிகையும்
 65       ஏயென அஞ்சும் சாயல் நோக்கி
 | உரை | 
 
 |  | 
 
 |  |             
 விச்சை மன்னன் நச்சுவனன் 
 ஆகிவிறல்கெழு விஞ்சையர் வெள்ளியம் பெருமலை
 இறைகொண்டு இருந்த எழிலுடை 
 மகளிருள்
 யாவரும் இல்லைமற்று இவளோர் அனையார்
 70       யாவ ளாயினும் எய்துவென் 
 யானென
 ஒருதலை வேட்கை உள்நின்று 
 நலியப்
 பெருவினை விச்சையில் தெரிய நோக்கி
 | உரை | 
 
 |  | 
 
 |  |             உயர்நிலை 
 உலகத் தவரும் 
 பிறரும்மேனிலை உயர்ச்சியின் மெய்யா மதிக்க
 75       வளமை நன்னிலத்து இளமுளை 
 போந்து
 கல்வி நீரில் கண்விட்டுக் 
 கவினிச்
 செல்வப் பல்கதிர் செறிந்துவனப் 
 பேறி
 இன்பம் விளைந்த நன்பெரு 
 நெல்லின்
 ஆண மடையிற் காண்வரப் பற்றித்
 80       துப்புர 
 வடிவி....தோயினும்
 வேட்கை நாவின் விருப்பொடு 
 சுவைக்கும்
 மாற்றல் 
 இல்லா மனத்தினர் ஆகி
 | உரை | 
 
 |  | 
 
 |  |             
 வலியும் வளமையு.....க்கு.. 
 யும்பொலிவும் புகழும் பொருந்திய சிறப்பிற்கு
 85       உவமம் ஆகும் உதயணன் 
 ஒருமகன்
 அவமில் சூழ்ச்சி ஆய்தார் 
 அண்ணலும்
 ஆணும் உட்கும் அச்சமும் 
 பயிர்ப்பும்
 பேணுங் கோலமும் பெருந்தகைக் 
 கற்பும்
 வாணுதல் மகளிர் மற்றுப்பிறர்க்கு இன்றித்
 90       தானே வவ்விய தவளையங் 
 கிண்கிணி
 மானேர் நோக்கின் மதனமஞ் 
 சிகையும்
 ஆனாக் காதலோடு டமர்ந்துவிளை 
 யாடிக்
 காமர் பள்ளியுள் கட்டளை 
 பிழையாத்
 தாமரை நெடுங்கண் தந்தொழில் தொடங்கப்
 95       பள்ளி கொண்ட பொழுதில் 
 பையென
 | உரை | 
 
 |  | 
 
 |  |             
 ஒள்வினை மாடம் உள்குவனன் 
 ஆகிவிச்சை மறைவின் அச்சம்ஒன் 
 றின்றி
 இகல்மிகு குமரனைத் துயில்மிசைப் 
 பெருக்கிக்
 கயல்மிகு கண்ணியைக் கவவுப்பிணி நீக்கிப்
 100       புகலும் உள்ளமோடு அகலத்து அடக்கி
 | உரை | 
 
 |  | 
 
 |  |           இகல்கொள் 
 வீரியன் இகழ்தல் 
 செல்லாமண்மிசை வந்தனென் மயக்கற 
 இன்று
 விண்மிசை உலகிற்கு விழுப்பொருள் 
 பெற்றேன்
 என்னும் முவகையின் மின்னேர் நுடங்கிட
 105      மிளிருங் கச்சையோடு ஒளிவிசும் 
 பெழுந்து
 பொ..................................
             
   9. மதன மஞ்சிகை பிரிவு 
 முற்றிற்று
 | உரை | 
 
 |  |  |  |