|
உரை | | 1. உஞ்சைக்காண்டம் | | 32. கரடு பெயர்த்தது | | பன்மணி
விளக்கும் பள்ளிக் கட்டிலும்
பொன்னி னடைப்பையும் பூரண
கலசமும்
கவரியுங் கடகமுங் கதிர்முத்
தாரமும் 75 நிகரின் மாண்கல
நிதியொடு நிறைந்த
ஆரியச் செப்பும் யவனமஞ்
சிகையும்
பொன்செய் பேழையொடு பொறித்தாழ்
நீக்கி
நன்கனம் படுத்து நகுமலர்
பரப்பி
விரைவிரி யாளர் புரைவுறப்
புணர்த்த 80 பண்டம் புதைத்த
வண்டுபடு வளநகர்
| | (கணக்கர்
முதலியோர் உதயணனுக்காகக் குஞ்சரச் சேரி மாளிகையில்
பல பொருள்களையும் தொகுத்து
வைத்தல்)
72 - 80: பன்மணி.......வளநகர்
| | (பொழிப்புரை) மன்னவன்
பணியை மேற்கொண்ட கணக்கரும், கருவூலக் காவலரும், விரைந்து சென்று
குஞ்சரச் சேரியின்கண் (88) அமைந்த வளவிய விருந்து மாளிகையின்
பொறித்தாழக் கோலைத் திறந்து நன்றாகத் தளம்படுத்து மணம் பரப்பும்
கந்தப் பொடிக்காரரைக் கொண்டு உயர்வுண்டாகப் புதிய மலரைப் பரப்பிச்
சீர் செய்வித்து, பலவாகிய மணி விளக்கும், பள்ளிக் கட்டிலும்,
பொன் அடைப்பையும், நிறை குடமும், சாமரையும், கடகமும்,
ஒளிமுத்து மாலையும் ஆகிய இன்னோரன்ன மங்கலப் பொருள் களையும் ஒப்பற்ற
பேரணிகலமாகிய நிதியாலே நிரப்பப்பட்ட ஆரிய நாட்டுச் செப்புக்களையும்,
யவன நாட்டு மஞ்சிகைப் பேழையினையும் பொன்னாற் செய்த பேழைகளையும் பிற
பொருள் களையும் நிரப்பி வண்டு மொய்க்கின்ற அம் மாளிகையின்கண்
என்க.
| | (விளக்கம்) பொறித்தாழ்
நீக்கிப் படுத்துப் பரப்பிப் புணர்த்த நகர், மணிவிளக்கு முதலிய பண்டம்
புதைத்த நகர், வண்டுபடு நகர், வளநகர் எனத் தனித்தனி கூட்டுக.
பொறித்தாழ் - இயந்திரத் தாழக்கோல். நகர் - மாளிகை. பூரண கலசம் -
நிறை குடம். கடகம் - தோளணி. ஆரியச் செப்பு - ஆரிய நாட்டிற் செய்த
செப்பு. யவன மஞ்சிகை - யவனநாட்டிற் செய்த பேழை. பேழையொடு பிற
பண்டங்களும் புதைத்த நகர் என்க. நகுமலர் - புதிதாக மலர்ந்த மலர். விரை
விரியாளர் - மணமூட்டும் தொழிலாளர். இவரைக் ''கந்தப் பொடிக்காரர்''
என்ப. புரை - உயர்வு.
|
|