| உரை | 
|  | 
| 1. உஞ்சைக்காண்டம் | 
|  | 
| 33. மாலைப் புலம்பல் | 
|  | 
| ஒட்டாக் கிளைஞரை 
      நட்பினுட் கெழீஇய ஐயிரு பதின்ம ரரக்கி னியற்றிய
 10   
      பொய்யி லன்ன பொறியிவன் 
      புணர்க்கும்
 கையுங் 
      கூடுங் கால மிதுவென
 ஐய முற்று மெய்வகை 
      நோக்கிச்
 சிறப்புடை மாணகர்ச் செல்வங் 
      காண்கம்
 உழைச்சுற் 
      றாளரைப் புகுத்துமின் விரைந்தெனத
 | 
|  | 
| (உதயணன் அம்மாளிகைகண்டு 
      ஐயுறுதல்) 8 - 14: ஒட்டா.......விரைந்தென
 | 
|  | 
| (பொழிப்புரை)  தம்மோடு 
      பொருந்தாத உறவினராகிய பாண்டவரை வஞ்சித்துக்   கொல்லும் பொருட்டுத் தம் 
      பொய்ந் நட்பினாலே அவரைப் பொருந்திய   துரியோதனன் முதலிய நூற்றுவரும் 
      அவர்க்கு அரக்கானியற்றிய பொய் வீடு   போன்றதொரு வஞ்சகப் பொறியினை 
      இப்பிரச்சோதனன் நம்பொருட்டுச் செய்விக்கும்   செயல் நிகழ்த்துதற்குரிய 
      காலம் இஃதாம் என்று கருதி ஐயமுற்றுப் பின்னர்   இம்மாளிகையின் உண்மைத் 
      தன்மையை ஆராய்ந்து தெளிந்து சிறப்புடைய இந்த   மாட்சிமையுடைய மாளிகையின் 
      வளனெலாம் காண்குவம் என்று கருதியவனாய்,   அயனின்றாரை நோக்கி நம் 
      குற்றேவன் மாக்களையெல்லாம் ஈண்டு விரைந்து   வருமாறு செய்ம்மின் எனப் 
      போக்கித் தமியனாய பின்னர் என்க. | 
|  | 
| (விளக்கம்)  ஒட்டாக் கிளைஞர் 
      என்றது பாண்டவரை, கெழீஇய - கெழுவிய   - பொருந்திய. ஐயிருபதின்மர் - 
      துரியோதனன் முதலிய கௌரவர். பொய்யில் -   பொய்வீடு. இவன் - 
      இப்பிரச்சோதனன். கை - செயல். வஞ்சமுமாம். மெய்வகை -   அம்மாளிகையின் 
      இயல்பு. தமியனாதற் பொருட்டு அயனின்றாரை ஏவிப் போக்கினன்   என்பது 
      கருத்து உழைச்சிற்றாளர் என்றும் பாடம். |