உரை |
|
1. உஞ்சைக்காண்டம் |
|
33. மாலைப் புலம்பல் |
|
40
சென்றுசென் றிறைஞ்சிய சினந்தீர்
மண்டிலம் சூடுறு
பாண்டிலிற் சுருங்கிய
கதிர்த்தாய்க்
கோடுய ருச்சிக் குடமலைக்
குளிப்ப விலங்கும்
பறவையும் வீழ்துணைப் படரப
|
|
40 - 43: சென்று..........படர
|
|
(பொழிப்புரை) மேலைத் திசையின்கண் இயங்கி இயங்கித் தாழ்ந்தமையானே வெப்பந் தீர்ந்த ஞாயிற்று மண்டிலம், தீயிற் பழுக்கக் காய்ச்சிய வட்ட வடிவிற்றாய பொற்றகடு போன்று மிகச் சுருங்கிய கதிரையுடையதாய்க் குவடுயர்ந்த உச்சியினையுடைய குடமலையின்கண் மறையா நிற்பவும், விலங்கும் பறவைகளும் தாம் தாம் விரும்பும் காதற்றுணையை நினைந்து செல்லா நிற்பவும் என்க. |
|
(விளக்கம்) இறைஞ்சுதல் -
தாழ்தல். பாண்டில் - வட்டமான பொன்தகடு. குடமலை - அத்தகிரி. படர -
நினைய
|