உரை |
|
1. உஞ்சைக்காண்டம் |
|
33. மாலைப் புலம்பல் |
|
வவ்வழிக் குழவி
ஞாயிறு குன்றிவர் வதுபோல் 130 மழகளிற்
றெருத்தின் மைந்துகொண்
டிருந்த மன்ன குமரன்
றன்னெதிர்
நோக்கி ஒழுகுபு
சோர்ந்தாங் குக்கதென்
னெஞ்சென மழுகிய
திருமுக மம்மரோ
டிறைஞ்சித் தருமணற்
பேரிற் றமரொடு புக்குத் 135 திருமணி
மாடத் தொருசிறை
நீங்கிப் பெருமதர்
மழைக்கண் வருபனி யரக்கிக
|
|
(வாசவத்தை
நிலைமை)
128 - 136: அவ்வழி..........அரக்கி
|
|
(பொழிப்புரை) உதயணன் நிலைமை
இஃதாக, இனி அவனைக் கண்டுசென்ற வாசவதத்தை ஆங்கு என்னெஞ்சம்,
இளஞாயிற்று மண்டிலம் குன்றின் உச்சியில் ஏறினாற்போன்று இளமையுடைய
நளகிரியின் எருத்தின் மேல் தன் ஆற்றலைக் கொண்டு ஏறியிருந்த மன்னிளங்
குமரனாகிய உதயணனுடைய நோக்கிற்கு எதிர் நோக்கினமையாலே அந்நோக்கின்
வழியே ஓடிச் சோர்ந்து அவ்விடத்திலேயே உகுந்தொழிந்தது என் செய்கோ!
என வருந்தி ஒளி மழுங்கிய தனது அழகிய முகத்தை மயக்கத்தோடு நிலனோக்கித்
தாழ்த்திக் கொணர்ந்து பரப்பிய மணல் முன்றிலையுடைய பெரிய தனது
கன்னிமாடத்தே தன் தோழியரும் சுற்றமும் சூழச்சென்று புகுந்து, பின்னும்
அவ்வழகிய மணிமாடத்தினும் தனது ஆயத்தார் குழுவினின்றும் பிரிந்து
தமியளாய் ஓரிடத்தே சென்று நின்று, தனது பெரிய மதர்த்த குளிர்ந்த
கண்ணினின்றும் பெருகும் நீரைத் துடைத்துக்கொண்டு என்க.
|
|
(விளக்கம்) அவ்வழி என்றது ஆங்கு
என்னும் பொருட்டு. குழவி ஞாயிறு - இளங்கதிரவன். குழவிஞாயிறு உதயணனுக்கும்,
குன்று நளகிரிக்கும் உவமைகள். மைந்து - ஆற்றல். மன்னகுமரன் -
உதயணன்.உகுதல்-கெட்டொழிதல். மழுகிய - மழுங்கிய. மம்மர்-மயக்கம்.
தமர்-தாயரும் தவ்வையரும் ஆயமும். அரக்கி - துடைத்து.
|