| உரை | 
|  | 
| 1. உஞ்சைக்காண்டம் | 
|  | 
| 33. மாலைப் புலம்பல் | 
|  | 
| உள்ளகத் தெழுதரு மருளின ளாகித் 145   
      தெளிதல் செல்லா டிண்ணிறை 
      யழிந்து
 பொறியறு 
      பாவையி னறிவறக் 
      கலங்கிக்
 காம 
      னென்னு நாமத்தை 
      மறைத்து
 வத்தவ 
      னென்னு நற்பெயர் 
      கொளீஇப்
 பிறைக்கோட் டியானை பிணிப்பது மன்றி
 150   நிறைத்தாழ் பறித்தென் னெஞ்சகம் 
      புகுந்து
 கள்வன் 
      கொண்ட வுள்ள 
      மின்னும்
 பெறுவென் 
      கொல்லென மறுவந்து 
      மயங்கித்
 தீயுறு 
      வெண்ணெயி னுருகு 
      நெஞ்சமொடு
 மறைந்தவ ணின்ற மாதரை
 | 
|  | 
| (இதுவுமது) 144 - 154 உள்ளகத்து....... ....மாதரை
 | 
|  | 
| (பொழிப்புரை)  உள்ளத்தினின்றும் 
      தோன்றா நின்ற மயக்கத்தையுடையளாகிச்   சிறிதும் தெளிவு பெறாதவளாய்த் 
      தனது திண்ணிய நிறையழியப்பட்டு இயங்கும்   பொறி அறுந்துபோன பாவை போன்று 
      செயலற்று அறிவு துவர நீங்கிப்   போதலானே பெரிதும் கலங்கி "காமவேள் தான் 
      தனது பெயரை மறைத்து உதயண  குமரன் என்னும் கேட்டற் கினியதொரு பெயரையும் 
      புனைந்து மதங் கொண்ட   பிறை போன்ற மருப்பினையுடைய களிற்றுயானையைத் தனது 
      இசையாலே   வயப்படுத்தியதுமன்றி என் கண்வழி என் மனமாகிய கருவூலத்தின்கண் 
        நிறையென்னும் தாழ்க்கோலை முறித்தொழித்து உள் நுழைந்து அரும்பொருளாகிய 
        என் உள்ளத்தையும் கொள்ளை கொண்டான்;  இங்ஙனம் அக்கள்வன் 
        கவர்ந்துகொண்ட என் உள்ளத்தை இன்னுமொருகால் யான் என்னுடையதாக 
        மீட்டுக்   கொள்ளவல்லேனோ? மாட்டேனோ?" என்று சுழன்று 
      மயங்கித் தீயிற்   பெய்த வெண்ணெய்போல நெஞ்சம் உருகிப் பிறர் அறியா 
      வகை அவ்விடத்தே   மறைந்து நின்றாளாக; அங்ஙனம் நிற்கும் வாசவதத்தையை, 
      என்க. | 
|  | 
| (விளக்கம்)  தெளிதல்செல்லாள், 
      ஒரு சொல். பொறி - இயந்திரம்.   நிறையாகிய தாழ்க்கோலை என்க. கள்வன் 
      - உதயணன். "நெஞ்சிறை கொளீஇய   நிறையமை நெடுந்தாழ் வெந்தொழிற் காம 
      வேட்கை  திறப்ப'' எனப் பிறாண்டும்   (3 - 6: 56 - 7) கூறுவர். 
      மாதரை - வாசவதத்தையை. |