உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
33. மாலைப் புலம்பல்
 
           யிறைஞ்சிய
     155   வல்லிருள் புதைப்பச் செல்சுடர் சுருக்கி
          வெய்யோ னீங்கிய வெறுமைத் தாகிக்
          கையற வந்த பைதன் மாலைத்
          தீர்ந்தவ ணொழிந்த திருநல் லாயம்
          தேர்ந்தனர் குழீஇப் பேர்ந்தனர் வருவோர்
 
        154 - 159: இறைஞ்சிய............வருவோர்
 
(பொழிப்புரை) வலிய இருள் உலகத்தை மறைக்கும்படி ஞாயிற்றுக் கடவுள் பரவிச் செல்லாநின்ற தன் கதிர்களைச் சுருக்கிக் கொண்டவனாய் மறைந்து போனமையாலே வறியதாகி உலகோர் கையறவு கொள்ளும்படி வந்த துன்பந்தரும் அம்மாலைப் பொழுதிலே தங்குழுவினின்றும் அகன்று போனமையாலே (அவளை) இழந்து நின்ற அழகும் நலமும் உடைய தோழிமார் அவளைக்கண்டு அடிபோற்றுதற் பொருட்டுத் தம்முட் கூடி யாண்டுளள் என்று அவ்விடத்தி னின்றும் பெயர்ந்து தேடி வருகின்றவர் என்க.
 
(விளக்கம்) வாசவதத்தையை மாலைப் பொழுதிலே இழந்த ஆயம் குழீஇத் தேர்ந்து வருபவர் என வியைக்க.இருள் உலகைப் புதைப்ப என்க. வெய்யோன் - ஞாயிறு: பைதல் - துன்பம். தேர்ந்தனர், பேர்ந்தனர்: முற்றெச்சங்கள்.