உரை |
|
1. உஞ்சைக்காண்டம் |
|
34. யாழ் கைவைத்தது |
|
25 அறநிலை பெற்ற
வருள்கொ ளவையத்து
நிறைநூற் பொத்தக நெடுமணை
யேற்றி வல்லோர்
வகுத்து வாசனை
வாக்கியம்
பல்லோர் பகரப் பயம்பல
பருகித் தரும
விகற்பமொடு தானை யேற்பும் 30 கரும
விகற்பமொடு காமமுங்
கெழீஇய இன்பக்
கேள்வி யினிதுகொண் டெழீஇ
|
|
25 - 31:
அறநிலை...........எழீஇ
|
|
(பொழிப்புரை) நல்லறம்
நிலைபெற்றுள்ள அருட்பண்பு நிரம்பிய அவையின்கண் பொருள் நிறைந்த நூலாகிய
சுவடியை நெடிய மணையின்மேல் வைத்து வன்மையுடைய புலவர் பண்டு
வகுத் தோதிய மொழிகளைப் பல சான்றோரும் விரித்துக் கூறா நிற்ப
அவற்றைப் பருகுவான் போல விரும்பிக் கேட்டு, அவற்றின் பயனை
உளங்கொண்டு பின்னரும் அரசியல் அற வகையையும், படைவலி பெருக்கும்
வகையையும், வினைசெயல் வகைகளையும், இன்ப நுகரும் வகைகளையும் கொண்ட இனிய
சொற்பொழிவினைக் கேட்டு அதனை இனிதாக உள்ளத்தே அமைத்துக் கொண்டு
அந் நல்லவையினின்றும் எழுந்து என்க.
|
|
(விளக்கம்) உலகில்
அறம் நிலை பெறுதற்குக் காரணமான அறங்கூ றவையத்தார் தாமே அறத்தின்கண்
நிலைபெறுதல் வேண்டு மாகலின் அறம் நிலைபெற்ற அவையம் என்றார்.
ஏனையறங்கட்கெல் லாம் முதலாகலின் அருள்கொள் அவையம் என்றார். நூலாகிய
பொத் தகம் என்க. பொத்தகம் - சுவடி. தருமவிகற்பம் என்றது
அரசியலறத்தின் வகைகளை. தானேயேற்பு என்றது படைகளைத் திரட்டலும்
அவற்றைப் பெருக்கலும் பாதுகாத்தலுமாகிய செயல்களை, கருமம் - ஆளும்
தொழில். காமம் - இன்பநுகரும் வகை. விகற்பம் என்பதனைப் பிறவற்றோடும்
கூட்டுக. எழீஇ என்றது அக் கற்றல் கேட்டல் ஆகிய தொழிலினின்றும்
எழுந்தென்றவாறு.
|