| உரை | 
|  | 
| 1. உஞ்சைக்காண்டம் | 
|  | 
| 34. யாழ் கைவைத்தது | 
|  | 
| இழையணி யிரும்பிடி யெருத்த 
      மேறிக் கடையணி 
      யாவணங் கைதொழப் 
      போதந்
 தெறிவேற் 
      பெருங்கடை யியைந்தன னிற்ப
 | 
|  | 
| 37 - 39: 
      இழை.........நிற்ப | 
|  | 
| (பொழிப்புரை)  அதுகேட்ட உதயணன் 
      அரசன் பணியை ஏற்றுக்   கொண்டவனாய் அணிகலன்களால் அழகு செய்யப்பட்ட 
      கரிய   பிடி யானையின் எருத்தத்தே ஏறி ஊர்ந்து கடைகள் நிரல்பட்ட 
        அங்காடித் தெருவின்கண் உள்ளோரெல்லாம் கை கூப்பித் தன்  
      னைத் தொழும்படி வந்து பகைவரைக் கொல்கின்ற வேலேந்திய   மறவர் 
      காக்கின்ற பெரிய வாயிலின்கண் நிற்ப என்க. | 
|  | 
| (விளக்கம்)  இயைந்தனன் 
      பிடி யேறித் தொழப் போதந்து   பெருங்கடை நிற்ப என இயைத்துக் கொள்க. 
      ஆவணம்-அங்காடித்  தெரு : ஆகுபெயர். |