| உரை | 
|  | 
| 1. உஞ்சைக்காண்டம் | 
|  | 
| 34. யாழ் கைவைத்தது | 
|  | 
| நல்வினை யம்பலத் திருந்த 
      நம்பிக்கு வல்லிதி 
      னக்குறை யுரைத்த பின்னர்
 | 
|  | 
| 58 - 59: 
      நல்வினை..........பின்னர் | 
|  | 
| (பொழிப்புரை)  அப்பணி 
      பெற்ற அமைச்சன் சென்று அழகிய   தொழிற்றிறனமைந்த திருமணியம்பலத்தே 
      வீற்றிருந்த உதயணனுக்கு   அரசன் உரைத்த குறையை நாவன்மையோடு எடுத்துக் கூறிய 
      பின்னர்   என்க. | 
|  | 
| (விளக்கம்)   நல்வினை - அழகிய தொழிற்றிறன். ஆகூழாகிய   அம்பலம் எனவும் ஒரு பொருள் 
      தோன்றுதல் உணர்க. நம்பி -   உதயணன். வல்லிதின் - நாவன்மை 
      தோன்ற. |